அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா! ரெய்டு -வழக்கு பற்றியெல்லாம் பொருட்படுத்தாத எடப்பாடி பழனிசாமி!
சென்னை: வழக்கு, ரெய்டுகளுக்கு எல்லாம் அஞ்சினால் அரசியல் செய்ய முடியுமா என எதற்கும் துணிந்துவிட்டாராம் எடப்பாடி பழனிசாமி.
இந்த தகவலை எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசிய பிறகு வழக்கறிஞர் மணி செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் விவரித்துள்ளார். மீண்டும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதில் அவர் 100% உறுதியாக நிற்கிறார் என வழக்கறிஞர் தமிழ்மணி தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரனையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் அரசியலில் உயிர்பிக்கும் நடவடிக்கைகளில் பாஜக ஈடுபடுவது எடப்பாடி பழனிசாமிக்கு சிறிதும் பிடிக்கவில்லை என்றும் இதற்காகவா அவர் இவ்வளவு நாட்கள் போராடி கட்சியில் தனது ஆளுமையை நிரூபித்தார் எனவும் வழக்கறிஞர் தமிழ் மணி வினவியுள்ளார்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணியை முறித்தது அவசரப்பட்டோ, உணர்ச்சிவசப்பட்டோ எடுத்த முடிவில்லை என்றும் நீண்ட நாட்களாக யோசித்து, கலந்து ஆலோசித்து தீர்மானமாகவே நிறைவேற்றப்பட்ட முடிவு என வழக்கறிஞர் தமிழ் மணி கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி எடுத்த தனிப்பட்ட முடிவாக இருந்தால் இதனை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பிருந்திருக்கும் ஆனால் அதிமுகவில் தீர்மானமே நிறைவேற்றியிருப்பதால் தனக்கு தெரிந்து மீண்டும் கூட்டணி தொடர வாய்ப்பே இல்லை என வழக்கறிஞர் மணி கூறுகிறார்.
அரசியலில் எடப்பாடி பழனிசாமி கைதேர்ந்தவராக மாறிவிட்டார் என்றும் அவ்வளவு தெளிவாக புள்ளி விவரங்களை கையில் வைத்திருக்கிறார் என வழக்கறிஞர் மணி தெரிவித்தார். அரசியலில் இனி எந்த பூச்சாண்டிக்கும் எடப்பாடி பழனிசாமி பயப்பட்ட மாட்டார் என்பதே தனது கணிப்பு என மிக ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில் பாஜகவுக்கு அதிமுகவில் கதவு அடைக்கப்பட்டு விட்டது என்பதையும் மீண்டும் எத்தனை முறை தட்டினாலும் அதிமுக கூட்டணிக் கதவை திறக்க வாய்ப்பே இல்லை என்பதியும் வழக்கறிஞர் தமிழ்மணி தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமியுடன் 3 நாட்களுக்கு முன்னர் 1 மணி நேரம் சந்தித்து பேசிய பிறகு அவர் மேற்கண்ட தகவல்களை தெரிவித்துள்ளார்.
இதனிடையே அதிமுக கூட்டணியில் பாஜக தொடரக்கூடும் என்ற வகையில் கிருஷ்ணசாமி, வி.பி. துரைசாமி போன்றோர் இன்னும் நம்பிக்கையுடன் கருத்து தெரிவித்து வருவது கவனிக்கத்தக்கது.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications