விடியல் கிடைத்தபாடில்லை.. பெண்கள் சாலையில் நடமாடவே அச்சப்படும் அவல நிலை.. எடப்பாடி பழனிசாமி வேதனை
சென்னை: திமுக ஆட்சியில், பெண்கள் சாலையில் நடமாடவே அச்சப்படும் அளவிற்கு பாதுகாப்பில்லாத அவல நிலை இருப்பதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன். அதற்கான விடியல் இன்றுவரை கிடைத்த பாடில்லை. பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க தீர்க்கமான நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. பட்டப் பகலிலேயே கத்தியால் குத்துவது, அரிவாளால் வெட்டுவது என நாள்தோறும் அரங்கேறி வரும் சம்பவங்களால் பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டிலும் அண்மைக்காலமாக பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தஞ்சாவூரில் பயிற்சி ஆசிரியரை பள்ளி வளாகத்திலேயே வைத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அயனாவரத்தில் பெண் ஒருவரை நடுரோட்டில் வைத்து கத்தியால் குத்தும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியது.
வேலூரில் இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற சிறுமியை கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து, கரூரில் மருந்துக்கடையில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற சம்பவமும், அதன் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கி சீர்கெட்டு வருவதாகவும், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமான இன்று, பெண்கள் அச்சமின்றி வாழ்வதற்கான பாதுகாப்பான சூழலை அமைத்திட உறுதியேற்போம்.
திமுக ஆட்சியில், பெண்கள் சாலையில் நடமாடவே அச்சப்படும் அளவிற்கு பாதுகாப்பில்லாத அவல நிலை இருப்பதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன். அதற்கான விடியல் இன்றுவரை கிடைத்த பாடில்லை.
பெண்கள் முன்னேற்றம்தான் சமுதாய முன்னேற்றம் என்பதை உணர்ந்து, பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினை திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications