கட்சிக்காரர்கள் என்னை பார்க்க வேண்டுமென்றால்..? எடப்பாடி பழனிசாமி போட்ட புது கண்டிஷன்!
சென்னை: அதிமுக நிர்வாகிகள் தன்னை சந்திக்க வரும் போது எப்படி வர வேண்டும் என்பது குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அதன்படி அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் தன்னை நேரில் சந்திக்கும் போது பூங்கொத்து வழங்குவதை அவசியம் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இருப்பினும் தன் மீது கட்சிக்காரர்கள் கொண்டிருக்கும் பாசத்தின் காரணமாக, முடிந்தால் கருத்தாழமிக்க புத்தகங்களை மட்டும் வழங்கினால் போதுமானது எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;
மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, அம்மா அவர்களால் போற்றி வளர்க்கப்பட்ட "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்", நம் இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு மக்கள் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு பணியாற்றி வருவதை இந்த நேரத்தில் பெருமையோடு நினைவுகூர கடமைப்பட்டுள்ளேன்.
அந்த வகையில், நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலிலும், அதனையடுத்து நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலிலும், கழகம் மகத்தான வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனையை படைத்திட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு பணியாற்றி வரும் தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் அனைவரும், என்னை நேரில் சந்திக்க வரும் போதும், கழக நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்கும்போதும், என்மீது கொண்ட பேரன்பின் காரணமாக பூங்கொத்து வழங்குவதை, இனிவரும் வரும் காலங்களில் கண்டிப்பாக தவிர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இருப்பினும், கழகப் பொதுச் செயலாளராகிய என் மீது நீங்கள் அனைவரும் கொண்டிருக்கும் பாசத்தின் காரணமாக என்னை சந்திக்கும்போது, தங்களால் முடிந்தால் கருத்தாழமிக்க புத்தகங்களை மட்டும் வழங்கினால், நான் பெருமகிழ்ச்சி அடைவேன். கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் எனது இந்த அன்பு வேண்டுகோளை அவசியம் கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications