அதிமுகவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர்? அதிரடி திட்டத்தில் எடப்பாடி பழனிசாமி!
சென்னை: அதிமுகவில் அமைப்பு ரீதியாக சில அதிரடி மாற்றங்களை அரங்கேற்றும் திட்டத்தில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.
வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னரே இந்த விவகாரத்தில் சில முக்கிய முடிவுகளை அவர் எடுக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி கட்சிப்பணியாற்ற முடியும் எனக் கருதுகிறாராம் எடப்பாடி பழனிசாமி.

234 தொகுதிகள் உள்ள நிலையில் இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் வீதம் மொத்தம் 117 மாவட்டச் செயலாளர்களை நியமித்து நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்ட பணிகளை ஆரம்பிக்கும் திட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே இந்த முடிவுக்கு சிட்டிங் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்பது தான் புரியாத புதிராக உள்ளது.
அதிகாரம் கை விட்டுச் செல்வதை சிட்டிங் மாவட்டச் செயலாளர்கள் சிலர் ஏற்கமாட்டார்கள் என்பதால் இந்த விவகாரத்தை பொறுமையாக டீல் செய்ய காய் நகர்த்தி வருகிறது எடப்பாடி பழனிசாமி தரப்பு. அதேவேளையில் அதிகாரப் பரவல் என்பது கட்சிக்கு புத்துயிரூட்டும் என்பது அதிமுக தலைமையின் கணக்காக உள்ளது.
இதன் படி நடந்தால் 10 தொகுதிகள், 6 தொகுதிகளை கையில் வைத்துக்கொண்டு மாவட்டச் செயலாளர்களாக இருக்கும் பலரும் வெறும் 2 தொகுதிகளுக்கு தான் மாவட்டச் செயலாளர்களாக வர முடியும். சோதனை முயற்சியாக இதனை நடைமுறைப்படுத்துவதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
விரைவில் அதிமுக தலைமைக்கழகத்தில் இது குறித்து விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
-
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
ஹார்ட் டிஸ்க் திருட்டு: தூரசக்தியை காப்பாற்ற நினைக்கும் பேரசக்தி? சிபிஐ விசாரணை தேவை! எடப்பாடி -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications