Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓட்டை உடைசல்.. இது வேறயா? அதெல்லாம் சரிப்பட்டு வராது.. போக்குவரத்துக்காக ஒன்று சேர்ந்த ஓபிஎஸ்-இபிஎஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருநெல்வே​லியில், தனியார் மூலம் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் நியமனம் செய்யப்படுவதற்கு சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிற்சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என முன்னாள் முதலமைச்சர்களான எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் தனி தனியே அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,"ஒப்பந்த அடிப்படையில் தனியார் மனிதவள நிறுவனங்களிடமிருந்து ஓட்டுநர்-நடத்துனர் நியமனங்களுக்கான ஒப்பந்தப் புள்ளியை விடியா திமுக அரசின் போக்குவரத்துத் துறை கோரியுள்ளதற்கு எனது கடும் கண்டனம்.

Edappadi Palaniswami O Panneerselvam AIADMK DMK Transport Corporation

புதிய பேருந்துகள் எதையும் கொள்முதல் செய்யாமல், ஓட்டை ஒடிசலான பேருந்துகளால் ஏற்கனவே போக்குவரத்துத் துறையை அதளபாதாளத்திற்கு தள்ளிய இந்த விடியா திமுக அரசு, போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்கும் முயற்சியின் ஒரு படியாகத் தான் தற்போது ஓட்டுநர்-நடத்துனர் நியமனங்களை தனியார் வசம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளதோ என்ற சந்தேகம் நிலவுகிறது.

நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய மண்டலப் போக்குவரத்துத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளிகளை ரத்து செய்வதுடன், போக்குவரத்துக் கழகத்தை தனியார்வசமாக்கும் எவ்வித முயற்சியாக இருப்பினும் அதனை கைவிட்டு, முறையாக பணியமர்த்தி, போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, போக்குவரத்துத் துறையின் கட்டமைப்பை சீர்செய்து பொதுமக்களுக்கு பயண "சேவை"யை வழங்குமாறு விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.

இதேபோல் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள பதிவில்,"வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது என்று சொல்லும் தி.மு.க., அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்கிறதா என்றால் இல்லை. கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில், தமிழ்நாட்டில் உள்ள அரசுத் துறைகள், அரசுப் பள்ளிக்கூடங்கள், அரசுக் கல்லூரிகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் இலட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டாலே வேலையில்லாத் திண்டாட்டம் ஓரளவு குறைந்துவிடும். இதனைச் செய்யாமல், குறைந்தபட்ச தேவைக்கேற்ப பணியாட்களை ஒப்பந்த அடிப்படையிலும், வெளிமுகமை அடிப்படையிலும் நிரப்பி வருவதை தி.மு.க. அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது. இப்படிப்பட்ட தி.மு.க., வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு மத்திய அரசின் மீது பழி போடுவதைப் பார்க்கும்போது "ஊருக்குதான் உபதேசம் எனக்கல்ல" என்பதை நினைவுபடுத்துகிறது.

தமிழ்நாட்டில் இன்றைக்கு கிட்டத்தட்ட ஐந்து இலட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. இவற்றில் பத்தில் ஒரு பங்கு பணியிடங்கள்கூட கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் நிரப்பப்படவில்லை. உள்ளாட்சி அமைப்புகள், பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் எல்லாம் தனியார் நிறுவனங்கள் வாயிலாக குறைந்தபட்ச தேவைக்கேற்ப ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட்டு ருகின்றன. அந்த வகையில், தற்போது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை தனியார் நிறுவனம் மூலம் நிரப்ப தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

திருநெல்வேலி, தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் சார்பில் 169 ஓட்டுனர்கள் மற்றும் 290 நடத்துநர்களை தேர்ந்தெடுத்து அனுப்புவதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. இதேபோன்று, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களும் பணியாளர்களை தனியார் நிறுவனங்கள் மூலமாக தேர்ந்தெடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வருகின்றன. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பயிற்சியைப் பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு வேலைக்காக காத்திருக்கின்ற நிலையில், தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்புவது எவ்விதத்தில் நியாயம்? இது சமூகநீதிக்கு எதிரான செயல் இல்லையா? தனியார் நிறுவனங்கள் மூலம் ஆட்களை நியமிப்பதன் பின்னணி என்ன என்று புரியவில்லை.

தாலிக்குத் தங்கம் திட்டம், மடிக்கணினி வழங்கும் திட்டம், அம்மா உணவகங்கள், இரு சக்கர வாகன மானியத் திட்டம் என மாண்புமிகு அம்மா அவர்களால் துவக்கப்பட்ட பல திட்டங்களை முடக்கியதுபோல், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் மூடுவிழா நடத்திட தி.மு.க. அரசு நினைக்கிறதோ என்ற சந்தேகம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. தி.மு.க. அரசின் இந்தச் செயல், வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்காலத்தை குழிதோண்டி புதைக்கும் நடவடிக்கை. தி.மு.க. அரசின் தொழிலாளர் விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக கவனம் செலுத்தி, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் பொது விளம்பரம் மூலம் நிரந்தரமான முறையில் நியமிக்கவும், தனியார் நிறுவனம் வாயிலாக கோரப்பட்டிருக்கும் ஒப்பந்தப் புள்ளியினை உடனடியாக ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+