செங்கலை கூட உருவ முடியலை.. திமுக கூட்டணி அவ்வளவு ஸ்ட்ராங்! புலம்பும் எடப்பாடி.. ஆனாலும் ஒரு ட்விஸ்ட்
சென்னை: திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளை, மிகக் கடுமையாக விமர்சித்து வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தற்போது காங்கிரஸ் கட்சியை, குறிப்பாக அக்கட்சியின் தமிழக தலைவர் செல்வப் பெருந்தகையை கடுமையாக விமர்சித்து வருகிறார். தங்கள் கூட்டணிக்கு எந்தக் கட்சியும் வரவில்லை, திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது என்ற விரக்தியின் வெளிப்பாடுதான் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
தமிழக அரசியல் வட்டாரத்தில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுமட்டும் அல்லாமல், திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகளை மட்டும் குறிப்பிட்டு பேசி வருகிறார்.
பழனிசாமியின் இந்தப் பேச்சு, அதிமுக-பாஜக உடன்படிக்கை ஏற்படுவதற்கு முன்பு தான் குறுகிய விமர்சனங்களாக இருந்தது. இதனால் சில கூட்டணிக் கட்சிகள் அதிமுகவை விமர்சிக்காமலேயே இருந்தன. இதனால் அதிமுகவுடன் விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைக்கலாம் என யூகங்கள் எழுந்தன.

எடப்பாடி பழனிசாமி
இந்த நிலையில் பாஜகவுடன் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பதாக அதிமுக அறிவித்ததும் விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதிமுகவையும் அதன் தலைவர்களையும் விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில்தான் திமுக கூட்டணியை விமர்சித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. தனது பிரச்சாரத்தின் போது திமுகவை எந்த அளவுக்கு விமர்சிக்கிறாரோ அதே அளவுக்கு அதன் கூட்டணி கட்சிகளையும் விமர்சித்து வருகிறார். முதல் முறை எடப்பாடி பழனிசாமி விமர்சனத்தை முன் வைத்தது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீதுதான்.
திமுக கூட்டணி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை திமுக விழுங்கி விடும் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்து இருந்தார். அதற்கு பதிலடி கொடுத்த விசிக தலைவர் திருமாவளவன் எளிய மக்களின் கட்சியான விசிகவை யாரும் தொடக் கூட முடியாது என பதிலடி கொடுத்தார். அதற்குப் பிறகு தனது விமர்சனத்தை கம்யூனிஸ்ட் கட்சியை நோக்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி. இந்த தேர்தலுடன் கம்யூனிஸ்ட் கட்சிகள் காணாமல் போய்விடுவார்கள் என்ற எடப்பாடி விமர்சனத்திற்கு, 2026 தேர்தலின் போது பாருங்கள் என பதிலடி கொடுத்தார் சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம்.
செல்வப்பெருந்தகை
இந்த நிலையில், பழனிசாமி காங்கிரஸ் கட்சியை குறிவைத்துள்ளார். அரசியல் வட்டாரத்தில், எதிர்க்கட்சியை விமர்சிப்பது சாதாரணமாக இருக்கலாம்; ஆனால் பெரிய கட்சியை தனிப்பட்ட முறையில் குறிவைத்து தாக்குதல் நடத்துவது அரிது. ஆனால் அதைத்தான் செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. குறிப்பாக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகையை தனிப்பட்ட முறையில் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து வருவது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.
திமுக கூட்டணி கட்சிகள்
இந்த நிலையில் திமுக கூட்டணி வலுவாக இருப்பதே எடப்பாடி பழனிசாமியின் விரக்தி பேச்சுக்கு காரணம் என்கின்றனர். பழனிசாமியின் விமர்சனங்கள், திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முடியாத நிலையில், அவர் எதிர்பார்த்த பாதிப்பு இல்லாமல் போயுள்ளது. திமுக கூட்டணிக் கட்சிகள், பாஜக-அதிமுக கூட்டணியை இன்னும் வலுவாக விமர்சிக்கும் நிலையில், அவரது விமர்சனங்கள் தங்களுடைய நிலைப்பாட்டை பாதிக்காது என்பதைத் தெளிவாக காட்டியுள்ளன. இதனால் தான் பழனிசாமி இன்னும் வீரியமாக திமுக கூட்டணியை விமர்சித்து கருத்துகளை பரப்பி வருகிறார்.
பாஜக-அதிமுக கூட்டணி
அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு திமுக கூட்டணியில் லேசான சலசலப்பை ஏற்படுத்தி இருப்பதும் உண்மைதான். காங்கிரஸ் கட்சியின் முக்கியத்துவம் திமுக கூட்டணியில் குறைந்து வருவதை அந்தக் கட்சித் தலைவர்களே பொதுவெளியில் ஒப்புக்கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே கேஎஸ் அழகிரி, எம்பி ஜோதிமணி உள்ளிட்ட சிலர் திமுக மீது அதிருப்தியில் இருக்கும் நிலையில் அது எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு வலுவூட்டக்கூடியதாக இருக்கிறது. தற்போது ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையும் திமுக கூட்டணி கட்சிகள் வைத்து வரும் நிலையில் அதனைத்தான் எதிர்பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
-
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
திமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications