எடப்பாடியின் மாஸ்டர் பிளான்.. அதிமுக ஆட்சியமைக்க வாய்ப்பு இருக்கா? ரவீந்திரன் துரைசாமி ட்விஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 3வது பெரிய கட்சியாக இருக்கும் அதிமுக ஆட்சியமைக்க முயற்சித்து வரும் சூழலில், எடப்பாடி பழனிசாமி 118 எம்எல்ஏக்கள் என்ற பெரும்பான்மையை நிரூபிக்க சாத்தியக்கூறு இருக்கிறதா என்பது குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பேசியுள்ளார்.

சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியும் தவெகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், தவெகவுக்கு மேலும் 6 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தேவை என்ற நிலை நிலவி வருகிறது. இதனிடையே அதிமுக எம்எல்ஏ-க்கள் புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Edappadi Palaniswami

அவர்களை புதுச்சேரி சென்று எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து வருகிறார். இதற்கிடையே அதிமுக நிர்வாகி சிவி சண்முகம் டெல்லி சென்று தனது ராஜ்ய சபா எம்பி ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார். இ மெயிலிலேயே ராஜினாமா செய்ய முடியும் பட்சத்தில், சிவி சண்முகத்தின் டெல்லி பயணம் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பேசுகையில், தற்போது தவெகவுக்கு இன்னும் பெரும்பான்மையை கிடைக்கவில்லை. திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்று அறிவித்துவிட்டார். ஒருவேளை அதிமுகவுக்கு எம்எல்ஏ ஆதரவை பெற முடியும் என்றால், ஆளுநர் அந்த வாய்ப்பை எடப்பாடி பழனிசாமிக்கு வழங்குவார்.

உத்தரப் பிரதேசத்தில் பாஜக 3வது இடத்திற்கு வந்த போது, மாயாவதிக்கு ஆதரவு அளித்தது. இதனால் மாயாவதி உத்தரப் பிரதேச முதல்வரானார். இப்போது 118 என்ற மேஜிக் நம்பர் தேவை என்பதில் ஆளுநர் உறுதியாக இருக்கிறார். இதனால் 3வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள அதிமுகவுக்கு, திமுக கூட்டணியோ அல்லது தவெகவோ ஆதரவு அளித்தால், ஆட்சி அமைக்க முடியும்.

திராவிட இயக்கம் போர்வையில் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தால், அப்போதும் கூட திமுக ஆதரவு மட்டுமே போதாதது. திமுகவின் கூட்டணி கட்சிகளும் ஆதரிக்க வேண்டும். பாஜக கூட்டணியில் இருந்தால், விசிகம் சிபிஎம், சிபிஐ, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் ஆதரிக்க மாட்டார்கள்.

அப்போது எடப்பாடி பழனிசாமி காங்கிரஸ், பாஜக அல்லாத அரசை அமைக்க வாய்ப்புகளும், சாத்தியக் கூறுகளும் இருக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சி மாட்டிக்கொண்டது. பாஜக அல்லாத எடப்பாடி பழனிசாமிக்கு திமுக ஆதரவளித்தால், இங்கு அதிமுக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. பாமக - அதிமுக கூட்டணியில் இருந்தால், விசிகவும் வராது. இதனால் திமுக அல்லது தவெக ஆதரவு அளித்தால், எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+