மூக்கையா தேவர் நினைவு நாள்! அஞ்சலி செலுத்த 7 பேர் கொண்ட டீமை அனுப்பும் எடப்பாடி பழனிசாமி!
சென்னை: மூக்கையா தேவரின் நினைவு நாளில் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த 7 பேர் கொண்ட டீமை அனுப்பி வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இது குறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;
அரசியலிலும், பொதுச் சேவை புரிவதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவரும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் மக்களுக்கு அருந்தொண்டு ஆற்றியவரும், கல்விப் பணிகளில் அதிக நாட்டம் கொண்டவருமான, போற்றுதலுக்குரிய பி.கே. மூக்கையாத் தேவரின் 44-ஆவது நினைவு நாளான 6.9.2023 புதன் கிழமை காலை 10.30 மணியளவில், மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் அமைந்திருக்கும் மூக்கையாத் தேவர் நினைவிடத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்,

திண்டுக்கல் C. சீனிவாசன், M.L.A.,
நத்தம் இரா. விசுவநாதன், M.L.A.,
செல்லூர் K. ராஜூ, M.L.A.,
உதயகுமார், M.L.A.,
V.V. ராஜன் செல்லப்பா, M.L.A.,
S.T.K. ஜக்கையன்,
பெரியபுள்ளான் (எ) செல்வம், M.L.A.
உள்ளிட்டோர் நினைவு அஞ்சலி செலுத்துவார்கள். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கழக புரட்சித் தலைவி அம்மா பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான R.B. உதயகுமார், M.L.A., செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மூக்கையாத் தேவர் அவர்களுக்கு வீர அஞ்சலி செலுத்தும் இந்நிகழ்ச்சியில், மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகிய மாவட்டங்களில், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications