தொட்டிருக்கவே கூடாது செங்கோட்டையனை.. எடப்பாடி பழனிசாமிக்கு வரப்போகும் சிக்கல்.. பிஜேபிக்கு ஒரே குஷி?
சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது குறித்து மூத்த தலைவர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.. சீனியர் என்ற முறையில் எனக்கு நோட்டீஸாவது அனுப்பி இருக்க வேண்டும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளது வருத்தமாக உள்ளது. கண்ணீர் சிந்தும் நிலையில் உள்ளேன், துரோகம் செய்தது எடப்பாடி பழனிசாமிதான் என்றெல்லாம் செங்கோட்டையன் கூறியிருக்கிறார். செங்கோட்டையனின் பேட்டி குறித்து பத்திரிகையாளர் ஷ்யாம் தன்னுடைய கருத்தை கூறி உள்ளார்.
பிரபல சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், "A1 என்றே எடப்பாடியை பழனிசாமியை செங்கோட்டையன் சொல்லிவிட்டார்.. இது மிகப்பெரிய விமர்சனம் ஆகும்.. துரோகத்துக்கு நோபல் பரிசு தரவேண்டுமானால் அது எடப்பாடிக்கு தரவேண்டும் என்றும் வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்.

தன்னை நீக்கியது தொடர்பாக சட்ட நடவடிக்கையை தொடர போவதாக செங்கோட்டையன் சொல்லி உள்ளார்.. காரணம் விதிப்படை அவரை கட்சியிலிருந்து நீக்கவில்லை.. முறைப்படி நோட்டீஸ் தந்திருக்க வேண்டும். பதவியிலிருந்து நீக்க வேண்டுமானால், அவரை பொதுக்குழுதான் நீக்க முடியும்.
அகில இந்தியா அதிமுக
அதிமுக இன்று அகில இந்திய அண்ணா திமுக என்ற பெயரில் உள்ளது.. இப்படி பெயர் மாற்றம் செய்யப்பட காரணமே எம்ஜிஆர் தான்.. கடந்த 1975-ல் கோவை பொதுக்குழுவில்தான் இப்படி பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இதற்கு காரணம், அதிமுகவுக்கு இந்தியா முழுக்க கிளைகள் உள்ளன.. அதிமுக தொண்டர்கள் நாடு முழுவதும் உள்ளனர்.. கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் போட்டி அதிமுக போட்டி போடுகிறது என்பதால், "அகில இந்திய" என்ற வார்த்தையை எம்ஜிஆர் சேர்த்து, கோவை பொதுக்குழுவில் அறிவித்தார்.
அந்த பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாட்டை செய்ததே செங்கோட்டையன்தான். அந்த நிகழ்ச்சி குழுவில் பொறுப்பாளராகவும் இருந்தவர். அப்பேர்ப்பட்டவரை பதவி நீக்கம் செய்தது சரியல்ல.. கட்சியின் ஒற்றுமை வேண்டும் என்று சொன்னதற்காகவே, இன்று நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
செங்கோட்டையன் - அதிமுக
ஏற்கனவே அதிமுக குறித்தான பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதிமுக மீது வழக்கு தொடுத்த வழக்காடிகளில் மேலும் ஒருவராக தற்போது செங்கோட்டையனும் இணைவார்.. தன்னை நீக்கியது தொடர்பாக, நீதிமன்றத்தில் இடைக்கால தடை கேட்கலாம்.
எப்போதுமே ஒருவருக்கு எதிரான நடவடிக்கையை கட்சி எடுக்கும்போது, அவரது தரப்பில் உள்ள நியாயத்தை கேட்பது என்பது சாதாரண சட்டம்.. அதுதான் இயற்கையான நியதியும்கூட.
ஆனால், அப்படி எதுவுமே செய்யாமல், செங்கோட்டையனை எடப்பாடி நீக்கம் செய்திருக்கிறார்.. எனவே, எடப்பாடி பழனிசாமி பிறப்பித்துள்ள உத்தரவுக்கு இடைக்கால தடையை நீதிமன்றம் வழங்க வாய்ப்பு உள்ளது.
சீட் பேரத்தை உயர்த்தும் பாஜக
அதேபோல, கட்சியின் நடவடிக்கையை எதிர்த்து யாரும் கோர்ட்டுக்கு போக முடியாது என்ற கட்சியின் விதியும் உள்ளது. எனவே இது குறித்தெல்லாம் வரப்போகும் நாட்களில் நீதிமன்றத்தில் அலசப்படும்..
ஆனால் எப்படி பார்த்தாலும் தற்போது அதிமுகவில் நடந்து வருவது பாஜகவுக்குதான் பெருத்த லாபத்தை தரும்.. கட்சி மேலும் பிளவுபடும்போது, சீட் பேரத்தையும் பாஜக உயர்த்தி கேட்க கூடும். அப்படி சீட் பேரத்தை பாஜக உயர்த்திவிட்டால், அது எடப்பாடி பழனிசாமிக்கே நெருக்கடியாகவும் நாளை மாறும். எனவே, செங்கோட்டையன் விஷயத்தை எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்திருக்கவே தேவையில்லை" என்று தெரிவித்துள்ளார்.
-
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி!












Click it and Unblock the Notifications