சேலை, தட்டு கொடுத்துட்டாங்க.. ரூ.200 கொடுக்கலை! எடப்பாடி கூட்டத்திற்கு வந்த பெண் சொன்ன மேட்டர்!
சிவகங்கை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்திற்காக அழைத்து வரப்படுபவர்களுக்கு ஒரு சேலை, ஒரு தட்டு மற்றும் ரூ.200 பணம் கொடுக்கப்படுவதாகப் பெண் ஒருவர் பேசும் வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஜூலை 7 முதல் எடப்பாடி பழனிசாமி கொங்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். எடப்பாடி பழனிசாமியின் இந்த மக்கள் சந்திப்பு பயணத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.

குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு கூடிய கூட்டம் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. டெல்டாவில் அதிமுகவுக்குப் பெரியளவில் வெற்றிகள் கிடைக்காத சூழலில், தற்போது தஞ்சாவூர் மாவட்டத்திலேயே மிகப்பெரிய அளவில் அதிமுகவுக்கு ஆதரவு இருந்தது பல்வேறு கணிப்புகளை மாற்றி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா ஸ்டைலில் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாக எடப்பாடி பழனிசாமி செய்த சுற்றுப்பயணம் அதிமுகவுக்கு சாதகமாக அமைந்துள்ளதாகவும் கட்சியினர் கூறி வந்தனர். அதேபோல் திமுகவுக்கு எதிரான பிரச்சாரம், பாஜக உடனான கூட்டணி உள்ளிட்ட விஷயங்களை முன்னதாகவே பேசி வருவதால், தேர்தல் நேரத்தில் மக்கள் மனதில் மாற்றும் வரும் என்றும் அதிமுக கணக்குப் போடுகிறது.
நேற்று எடப்பாடி பழனிசாமி சிவகங்கை மாவட்டத்தில் மக்களைச் சந்தித்தார். திருப்பத்தூர் தொகுதி தொடங்கி சிவகங்கை அரண்மனை வாசல் வரை உள்ள பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி மக்களைச் சந்தித்தார். அவருக்கு ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களும், மகளிரும் மிகப்பெரிய வரவேற்பை அளித்தனர். பெரியளவில் கூட்டம் கூடியது.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மக்கள் சந்திப்பு பயணத்திற்கு வந்த பெண் ஒருவர் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. அந்தப் பெண் பேசுகையில், எல்லா ஊர்களிலும் இருந்து பெண்கள் அழைத்து வரப்பட்டுள்ளார்கள்.. ஒரே மாதிரி சேலை கொடுத்தார்கள். இது நல்லாருக்கா? ஒரு சேலை, ஒரு தட்டு, ரூ.200 பணம்..
ஜாலியாக இருக்கும்னு வந்திருக்கோம்.. நாங்கள் இந்திரா நகர்ப் பகுதியில் இருந்து 300 பேர் வருகிறோம்.. மொத்தமாக 4 ஆயிரம் பேரை அழைத்து வந்துள்ளார்கள்.. எங்களுக்கு இன்னும் ரூ.200 கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இதன் மூலமாக எடப்பாடி பழனிசாமியின் பயணத்திற்குப் பணம் கொடுத்துத்தான் மக்கள் அழைத்து வரப்படுகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி! -
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர் -
அவர் வரலாறு தெரியுமா.. சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்த கேபி முனுசாமி -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications