இறங்கி அடிக்கும் எடப்பாடி.. "72 நாள் வீட்டுக்குள் கிடந்தவர்தானே விஜய்..!"

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தவெக தலைவர் விஜய்க்கு தெரியவில்லை என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். விஜய் பொதுவெளிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்திய எடப்பாடி பழனிசாமி, கரூரில் 41 பேர் உயிரிழந்ததும் 72 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராதவர் விஜய் என்றும் விமர்சித்துள்ளார்.

அண்மையில் தவெகவின் 3வது ஆண்டு தொடக்க விழாவில் பேசிய விஜய், அதிமுகவை ஊழல்வாத அடிமை கட்சி என்று விமர்சித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் அதிமுக தலைமையிலான கூட்டணி என்று கூறாமல், பாஜக தலைமையிலான கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமியையும் சீண்டினார். இது அதிமுக தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

Edappadi Palaniswami

எடப்பாடி பழனிசாமி பேட்டி

இந்த நிலையில் சென்னையில் இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், விஜய்க்கு நாட்டில் நடக்கும் நிலவரம் என்னவென்றே தெரியவில்லை. ஒருமுறையாவது பிரஸ்மீட்டை நடத்த வேண்டும். செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தால், வெளியில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

விஜய்க்கு ஒன்றும் தெரியவில்லை

விஜய் இன்னும் பொதுவெளிக்கே வரவில்லை. கரூர் சம்பவம் நடந்து 72 நாட்களுக்கு பின் தான் வீட்டை விட்டு வெளியில் வந்தார். நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. எந்தக் கட்சி யாருடன் கூட்டணி வைத்துள்ளது என்பது தெரியவில்லை. எந்தக் கூட்டணிக்கு யார் தலைமை என்பது தெரியவில்லை. விஜய்க்கு ஒன்னுமே தெரியவில்லை. அவரிடம் சென்று கேள்வி கேளுங்கள்.

யார் ஊழல் சக்தி?

அமித்ஷாவே கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை என்று கூறினார். எங்களின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்றும் கூறிவிட்டார். விஜய் டிவியையும் பார்ப்பதில்லை.. மக்களையும் பார்ப்பதில்லை.. ஒரு கட்சியின் தலைவராக விஜய்க்கு தெரிந்திருக்க வேண்டும். தெரியாமலேயே பேசிக் கொண்டிருக்கிறார். அதேபோல் அதிமுகவை ஊழல் சக்தி என்று கூற வழியே இல்லை.

ரோல் மாடல் ஜெயலலிதா

ஜெயலலிதாவை ரோல் மாடல் என்று ஏற்றுக் கொண்டார். அதிமுகவில் இர்ய்ந்து ஒருவர் ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்கு சென்றவர். அவர்தான் விஜய் உடன் தற்போது இருக்கிறார். ஜெயலலிதாவை ரோல் மாடல் என்று சொல்லிவிட்டு யாரை ஊழல் சக்தி என்று சொல்கிறார் விஜய் என்று காட்டமாக சாடியுள்ளார். இதனால் மீண்டும் அதிமுக - தவெக இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+