எடப்பாடி பழனிசாமி தான் அடுத்த முதல்வர்! லீமா ரோஸ் தந்த அதிரடி க்ளூ! தவெக கூட்டணி ரகசியம் இதுதானா?
சென்னை: எடப்பாடி பழனிசாமிதான் மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராவார் என்று அதிமுக எம்.எல்.ஏ. லீமா ரோஸ் கொடுத்திருக்கும் பேட்டி, தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய விவாதத்தை கிளப்பியிருக்கிறது. அதிமுக - தமிழக வெற்றிக் கழகம் இடையே திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் தாராளமாகவே நடப்பதாகக் கூறப்படும் சூழலில், இந்தத் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, விஜய்யின் வருகையால் யாருடைய ஓட்டுக்கள் பிரியும் என்ற கணக்குகளுக்கு மத்தியில், எடப்பாடி பழனிசாமி எடுக்கப்போகும் அந்த முக்கிய முடிவுக்காகத் தான் இப்போது மொத்த தமிழகமுமே காத்திருக்கிறது.
தமிழக அரசியல் களம் இப்போது ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. வழக்கமான திமுக - அதிமுக மோதல்களுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய சக்தியின் வருகை எல்லா கணக்குகளையும் மாற்றிப் போட்டுள்ளது.

இந்தச் சூழலில், அதிமுக எம்.எல்.ஏ லீமா ரோஸ் செய்தியாளர்களிடம் ஒரு பேட்டி தந்துள்ளார்.. அதில், "எடப்பாடி பழனிசாமி தான் அடுத்த முதல்வர்; தவெகவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது" என்று கொளுத்திப் போட்டிருக்கும் தகவல், அறிவாலயத்தைக் காட்டிலும் அதிமுக கூடாரத்தையே அதிகம் உற்றுநோக்க வைத்திருக்கிறது.
இது சாத்தியமா? கணக்கு என்ன சொல்கிறது?
உண்மையை சொல்லப்போனால், அரசியலில் எதுவும் சாத்தியம்தான். எடப்பாடி பழனிசாமிக்கு இப்போது தேவைப்படுவது ஒரு "க்ரூப் எனர்ஜி".. கடந்த சில தேர்தல்களில் தென் மாவட்டங்களிலும், டெல்டாவிலும் அதிமுக கோட்டை லேசாக ஆடியிருப்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த இடைவெளியை நிரப்ப விஜய்யின் பின்னால் இருக்கும் இளைஞர் எழுச்சி, ஒரு பூஸ்ட் போலச் செயல்படும் என எடப்பாடி கணக்குப் போடலாம்.
அதேபோல், விஜய் தரப்பைப் பொறுத்தவரை, தனியாகக் களம் கண்டு வாக்குகளை பிரிப்பதை விட, ஒரு பலமான கட்டமைப்புக் கொண்ட கட்சியுடன் கைகோர்ப்பது சேஃப் கேம் ஆக இருக்கும்.
ஆனால், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி எப்போதுமே நிதானமாக காய் நகர்த்துபவர். லீமா ரோஸ் போன்றவர்கள் உற்சாகத்தில் அடித்துவிடும் பேட்டிகளைத் தாண்டி, தலைமை என்ன நினைக்கிறது என்பதுதான் முக்கியம். அதிமுகவின் பிளான் A எப்போதுமே ஆட்சியைப் பிடிப்பதுதான். அதில் விஜய்க்கு எவ்வளவு இடம் கொடுப்பார்கள் என்பதில் தான் சிக்கலே ஆரம்பிக்கும்.
முதிர்ச்சியான அரசியல் நகர்வா?
இந்தக் கூட்டணி அமைந்தால், அது வெறும் ஓட்டுக்கான கணக்காக மட்டும் இருக்காது. திமுகவின் திராவிட மாடல் அரசியலுக்கு எதிராக, ஆன்மீக அரசியல் என்று சொல்லாமல் சொல்லும் ஒரு புதிய பாணியை இவர்கள் முன்னெடுக்கலாம். அதேபோல விஜய்க்கு இருக்கும் அந்த மாஸ் இமேஜும், எடப்பாடியின் 'நிர்வாக அனுபவமும் இணைந்தால் அது களத்தில் ஒரு தாக்கத்தை உருவாக்கலாம்.
இருந்தாலும் அரசியல் என்பது யாருக்கம் நிச்சயமில்லாதது.. இங்கே இன்று நண்பனாக இருப்பவர்கள் நாளை எதிரியாகலாம். தொகுதிப் பங்கீடு என்று வரும்போது, விஜய் கேட்கும் எண்ணிக்கையை அதிமுக தரத் தயாராக இருக்கிறதா? அல்லது விஜய்யின் முதல்வர் ஆசைக்கு எடப்பாடி வழிவிடுவாரா? இதெல்லாம் தான் இப்போதைக்கு இருக்கும் மில்லியன் டாலர் கேள்விகள்.
லீமா ரோஸின் பேட்டி
லீமா ரோஸின் பேட்டி வெறும் "வெடி"யாக மட்டும் இல்லாமல், ஒருவேளை எடப்பாடி பழனிசாமியின் நேரடி சிக்னலாக இருந்தால், தமிழக அரசியலில் ஒரு பெரிய பவர் ஷிப்ட்நடக்கப்போவது உறுதி.
அதுமட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமி "உரிய நேரத்தில் அறிவிப்பார்" என்று லீமா ரோஸ் சொல்லியிருப்பது, இப்போதைக்கு அமைதியாக இருந்து ஆழம் பார்க்கும் வேலையில் அவர் இறங்கியிருப்பதையே காட்டுகிறது. ஆக மொத்ம் இனி வரும் நாட்கள் இன்னும் தமிழகத்துக்கு டென்ஷன் எகிற போகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications