கடத்தல் சீனையே மிஞ்சிட்டாங்களே! 3 கார் மாறி மாறி அமித் ஷாவை பார்த்த எடப்பாடி பழனிசாமி! இதற்காக தானா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழ்நாடு சட்டசபையில் மானிய கோரிக்கை விவாதம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றதோடு பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரான அமித் ஷாவை சந்தித்து 2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணியை உறுதி செய்து இருக்கிறார். இந்த நிலையில் நேற்று டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி கட்சி அலுவலகத்திற்குச் செல்ல இன்னோவா காரை பயன்படுத்திய நிலையில் அமிஷ் ஷாவை சந்திக்க ஆடி காரில் சென்றார். தொடர்ந்து சந்திப்பு முடிந்து வெளியே வந்த போது பென்ட்லி காரில் வேகமாக புறப்பட்டு சென்றார். சினிமா காட்சிகளில் வருவது போல மூன்று கார்களில் எடப்பாடி பழனிச்சாமி பயணிக்க காரணம், செய்தியாளர்கள் சந்திப்பதை தவிர்ப்பதற்கு தான் என்கின்றனர்.

2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி அமைந்த நிலையில், அந்த கூட்டணி தோல்வியை சந்தித்தது. அதற்கு பிறகு நடந்த தேர்தல்களில் கூட்டணி மாறுதல்கள் இருந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் கூட்டணி முடிவுக்கு வந்தது.

Edappadi Palaniswami AIADMK BJP

இனிமேல் பாஜகவுடன் கூட்டணியே இல்லை என அதிமுக தலைவர்கள் திட்டவட்டமாக கூறிவந்தனர். இந்த நிலையில் திடீரென அரசியல் களம் மாறி இருக்கிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். அதிமுக அலுவலகத்தை பார்வையிட செல்வதாக அவர் கூறினாலும் பாஜக முக்கிய தலைவர்களை அவர் சந்திக்கலாம் என கூறப்பட்டது.

எதிர்பார்த்தது போலவே, நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவருமான அமித் ஷாவை சந்தித்து பேசினார். சுமார் 2 மணி நேரம் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி, கேபி முனுசாமி, சி.வி. சண்முகம், தம்பிதுரை எம்பி ஆகியோரும் பங்கேற்றனர். சுமார் ஒரு மணி நேரம் இவர்கள் கூட்டாக ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து அமித் ஷாவை மட்டும் எடப்பாடி பழனிச்சாமி தனியே 50 நிமிடம் சந்தித்து பேசினார்.

சந்திப்பின் முடிவில், 2026 சட்டமன்றத் தேர்தலை இரு கட்சிகளும் இணைந்து சந்திப்பது என முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. கூட்டணி ஆட்சி என அமித் ஷாவும் உறுதி செய்திருக்கிறார். இந்த நிலையில் வரும் தேர்தலில் அதிமுக 120 தொகுதிகளிலும் பாஜக உள்ளிட்ட பிற கட்சிகள் 114 தொகுதிகளில் போட்டியிட திட்டமிடப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து 2026 இல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என அமித்ஷா அதிமுக பாஜக கூட்டணியை உறுதி செய்திருக்கிறார்.

தொடர்ந்து இன்று இரவு தமிழகம் திரும்பும் எடப்பாடி பழனிச்சாமி நாளை அதிமுக முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இன்று அதிகாலை திடீரென டெல்லி சென்றார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக தலைமை அலுவலகத்தை பார்க்கத் தான் செல்கிறேன் எனக் கூறினாலும் பாஜக தலைவர்களை சந்திப்பார் என்பது தான் உறுதியான தகவலாக இருந்தது.

இந்த நிலையில் டெல்லி விமான நிலையத்திலிருந்து அதிமுக அலுவலகத்திற்கு செல்லவும் தமிழ்நாடு இல்லத்திற்கு செல்லவும் எடப்பாடி பழனிச்சாமி இன்னோவா காரை பயன்படுத்தினார். ஆனால் அமித்ஷாவை சந்திப்பதற்கு ஆடி காரில் சென்றார். எடப்பாடி பழனிச்சாமி இனோவா காரில் வருவார் என செய்தியாளர்கள் காத்திருந்த நிலையில் முன்னாள் அமைச்சர்கள் வருவதற்கு முன்னரே ஆடி காரில் அமித்ஷாவின் வீட்டுக்குள் சென்று விட்டார்.

தொடர்ந்து சந்திப்பு முடிந்ததும் மகேந்திரா காரின் முன்னாள் அமைச்சர்கள் வந்து நிலையில் ஆடி காரை எதிர்பார்த்து இருந்தனர் செய்தியாளர்கள். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ பென்ட்லி காரில் புயல் வேகத்தில் புறப்பட்டு சென்றார். செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்ப்பதற்காகவே எடப்பாடி பழனிச்சாமி சினிமா பாணியில் மூன்று கார்களில் பயணித்தார் என கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+