உளவுத்துறையில் கூட கை வைக்கல.. டெல்லி மீது எடப்பாடி ஏக டென்சன்.. திமுகவிற்கு கிடைத்த ஃப்ரீ ஹேண்ட்
சென்னை: தமிழக அரசியலின் 'ஹாட்' டாப்பிக் இப்போது எடப்பாடி பழனிசாமியின் டெல்லி மீதான அதிருப்திதான். வழக்கமாகத் தேர்தல் களம் சூடுபிடிக்கும்போது, தேர்தல் ஆணையத்தின் 'சாட்டை' ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீது சுழலும். ஆனால், இந்த முறை தமிழகத்தில் மட்டும் ஏனோ அந்தச் சாட்டை சத்தம் போட மறுக்கிறது என்பதுதான் அ.தி.மு.க-வின் ஆதங்கம்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிட்டன. இந்த நிலையில் அனைத்துக் கட்சிகளுடன் தேர்தல் தொடர்பாக சமீபத்தில் தலைமைச் செயலக த்தில் ஆலோசனை நடத்தினார் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக். ஒவ்வொரு கட்சியின் பிரதிநிதிகளும் தங்களின் கோரிக்கையை முன்னிறுத்திப் பேசினர். பாஜக சார்பில் கலந்துகொண்ட அக்கட்சியின் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் பேசும்போது, திமுகவுக்கு செக் வைக்கும் வகையில் ஒரு விசயத்தை கையிலெடுத்துப் பேசினார்.

அவர் பேசும் போது, ''திமுகவுக்கு அச்சாணி மாதிரி அதிகாரத்தில் இருக்கும் காவல் துறை அதிகாரிகளை இன்னும் நீங்கள் மாத்தலை. குறிப்பாக, உளவுத்துறை ஐ.ஜி. (செந்தில்வேலன்) அவர்கள், உளவுத்துறையின் ஏ.டி.ஜி.பி. பதவியும் கூடுதல் பொறுப்பாக (இன்சார்ஜ்) கவனித்து வந்தார். தற்போது, உளவுத்துறையின் ஏ.டி.ஜி.பி. பதவியை டிஜிபியாக அப்கிரேட் செய்து, உளவுத்துறை யின் டிஜிபியாக நியமித்துள்ளனர். ஆனால், உளவுத்துறையின் ஐ.ஜி.மாற்றப் பட வில்லை. டிஜிபி நியமிக்கப்பட்டாலும் இன்னும் அதிகாரம் முழுக்க ஐ.ஜி.யிடம் தான் இருக்கிறது. அவரது மாற்றம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை'' என்று சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனால் இப்போது வரை தமிழ்நாட்டில் பெரிய அளவில் அதிகாரிகள் மாற்றம் நடக்கவில்லை.
ஏமாற்றத்தில் இ.பி.எஸ்: டெல்லி 'மூவ்' என்ன?
மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே டாப் லெவல் அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில், தமிழகத்தில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் நிரந்தர டி.ஜி.பி இல்லாமல், கூடுதல் பொறுப்பில் (In-charge) மட்டுமே அதிகாரிகள் இருக்கும் சூழலிலும், தேர்தல் ஆணையம் மௌனம் காப்பது எடப்பாடி தரப்பை ஏகத்துக்கும் எகிற வைத்திருக்கிறது.
அமித் ஷா மீது அதிருப்தியா?
பின்னணி: பொதுவாக தேர்தல் நேரத்தில் அதிகார வர்க்கத்தின் கைகள் ஆளுங்கட்சிக்குச் சாதகமாக இருக்கும் என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. இதைச் சரி செய்யவே தேர்தல் ஆணையம் முக்கிய அதிகாரிகளை மாற்றும்.
விவகாரம்: தமிழகத்தில் தலைமைச் செயலாளர் முதல் முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வரை பெரிய அளவில் மாற்றங்கள் நிகழவில்லை.
எதிர்பார்ப்பு: டெல்லி பா.ஜ.க தலைமை இதில் தலையிட்டு 'க்ளீன் ஸ்வீப்' செய்யும் என எடப்பாடி நம்பியிருந்தார். ஆனால், அமித் ஷா தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு 'சிக்னலும்' வரவில்லை என்கிறார்கள் சேலம் தரப்பு ரத்தத்தின் ரத்தங்கள்.
'வெயிட்டிங்' லிஸ்டில் அ.தி.மு.க!
"மம்தா பானர்ஜி விஷயத்தில் காட்டும் வேகத்தை, ஸ்டாலின் விஷயத்தில் டெல்லி காட்டவில்லையே ஏன்?" என்ற கேள்வி ராயப்பேட்டை அலுவலகத்தில் எதிரொலிக்கிறது. தேர்தல் காலத்திற்கு என்று ஒரு டி.ஜி.பி-யை நியமிக்காதது முதல், முக்கிய துறைகளின் செயலாளர்களை மாற்றாதது வரை அனைத்தையும் அமித் ஷாவின் 'மெத்தனம்' என்றே இ.பி.எஸ் கருதுவதாகத் தெரிகிறது.
ஒருவேளை தி.மு.க-வுடன் டெல்லி மேலிடம் மறைமுக 'அண்டர்ஸ்டாண்டிங்கில்' இருக்கிறதோ என்ற சந்தேகமும் இ.பி.எஸ்-க்கு வராமல் இல்லை. 'நூலை பிடித்து ஆட்டுவார்கள்' என்று பார்த்தால், அமித் ஷா கையில் வைத்திருக்கும் நூலே நகர மாட்டேன் என்கிறதே என்பதுதான் தற்போதைய சிக்கல்.












Click it and Unblock the Notifications