எடப்பாடிக்கு ஆதரவாக திரண்ட 17 எம்எல்ஏக்கள்.. சட்டமன்ற செயலாளரிடம் முக்கிய கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களம் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, தேர்தலுக்கு பிறகு என்று இரண்டாக மாறலாம். தவெக தனிப்பெரும்பான்மை கட்சியாக வெற்றி பெற்றனர். திமுக எதிர்க்கட்சியாக வந்துள்ளது. அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தேர்தலுக்கு அதிமுக இரண்டாக பிரிந்து செயல்பட தொடங்கியுள்ளது. எடப்பாடி பழனிசாமியை அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்து 17 எம்எல்ஏக்கள் சட்டமன்ற செயலாளரிடம் மனு அளித்துள்ளனர். விரைவில் வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்கள் தனியாக சட்டமன்ற செயலாளரை சந்தித்து மனு அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டமன்ற தேர்தல் முடிந்தும் தமிழக அரசியல் களத்தின் பரபரப்பு ஓயவில்லை. நீண்ட இழுபறிக்கு பிறகு விஜய் நேற்று முதலமைச்சராக பதவியேற்று கொண்டார். தவெக ஆட்சியமைப்பதற்கு ஆதரவு வழங்கியவுடனே விஜய் சிபிஐ மற்றும் சிபிஎம் அலுவலகங்களுக்கு சென்று அந்தக் கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி கூறினார். நேற்று முதலமைச்சராக பதவியேற்ற பிறகு விஜய் பெரியார் திடலுக்கு சென்று திக தலைவர் வீரமணியை சந்தித்து பேசினார்.

edappdi-palanisamy-edappadi-palanisamy-support-admk-mlas-met-assembly-secretary

அதிமுகவில் பிரச்சனை

இன்று முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரை முதலமைச்சர் விஜய் சந்திக்கவுள்ளார். நாளை நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக ஆட்சிக்கான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் விஜய் இருக்கிறார். விசிகவை ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்க கோரி தவெக அழைப்பு விடுத்துள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பிறகு தவெக கூட்டணியில் விசிக இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக நிலைமை தான் மோசமாக உள்ளது. தமிழகத்தை அதிகமுறை ஆட்சி செய்த அதிமுக, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தொடர்ந்து பின்னடைவுகளை சந்தித்து வருகிறார்கள். 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், 2022 உள்ளாட்சி தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல், 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்துள்ளது. இந்தமுறை அதிமுக எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை. இதனால் தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுகவில் பிரச்சனைகள் வெடித்தன.

எடப்பாடி ஆதரவாளர்கள் மனு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எதிர்ப்புகள் எழுந்துள்ளன. எடப்பாடியின் தவறான கொள்கை முடிவுகளால் தான் அதிமுக தோல்வியடைவதாக முன்னாள் அமைச்சர் வேலுமணி, சி.வி. சண்முகம் எதிர்த்துள்ளனர். திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் எடப்பாடியும், தவெகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோரும் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பிரச்சனை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. எம்எல்ஏவாக பதவியேற்பதற்கு கூட அதிமுகவினர் 2 அணிகளாக வந்தனர். வேலுமணி, சி.வி. சண்முகம் வசம் 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்நிலையில் அதிமுகவின் 17 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமியை தங்களின் சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்து அவரையே தொடர சொல்லி, சட்டமன்ற செயலாளரிடம் மனு அளித்துள்ளனர். மீதமுள்ள எம்எல்ஏக்கள் வேலுமணியை அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்ய சொல்லி சட்டமன்ற செயலாளரை சந்திக்கவுள்ளார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+