"சமூக நிதி பேசும் முதல்வர் ஸ்டாலின்.. திரௌபதி முர்முவை ஏன் ஆதரிக்கவில்லை?" எடப்பாடி பழனிசாமி கேள்வி
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்முவுக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவித்தார்.
Recommended Video
நாட்டின் குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த்தின் பதவிக் காலம் விரைவில் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்ய வரும் 18ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் திரௌபதி முர்மு போட்டியிடுகிறார். அதேபோல எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர்.

சென்னையில் திரௌபதி முர்மு
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் இரு வேட்பாளர்களும் பல மாநிலங்களுக்கும் சென்று பல்வேறு கட்சியினரை நேரில் சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர். யஷ்வந்த் சின்கா இரு தினங்களுக்கு முன்பு சென்னை வந்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டிய நிலையில், பாஜக கூட்டணிக் கட்சி வேட்பாளர் திரௌபதி முர்மு இன்று சென்னை வந்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
அதிமுக தலைவர்களை நேரில் சந்தித்து திரௌபதி முர்மு ஆதரவு கோரினார். அவருக்கு எடப்பாடி பழனிசாமி பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அதன் பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி, "ஜனாதிபதி வேட்பாளராகத் திரௌபதி முர்முவுக்கு அதிமுக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனாதிபதி வேட்பாளராகத் திரௌபதி முர்முவை அறிவித்தது மகிழ்ச்சி தருகிறது.

ஏமாற்றும் ஸ்டாலின்
பழங்குடி இனத்தைவரை ஜனாதிபதியாக்கும் ஜெயலலிதாவின் கனவு நிறைவேறும் தருணம். பிரதமர் மோடியின் வரவேற்கத்தக்க இந்த அறிவிப்பை அதிமுக முழு மனதுடன் ஆதரிக்கிறது. சமூக நிதி பேசும் முதல்வர் ஸ்டாலின் திரௌபதி முர்முவை ஏன் ஆதரிக்கவில்லை. திரௌபதி முர்முவை ஆதரிக்காமல் சமூக நீதி திராவிட மாடல் எனப் பேசி ஸ்டாலின் மக்களை ஏமாற்றி வருகிறார்.

திமுக சூழ்ச்சி
திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் சூழ்ச்சியால் தான் 2012 குடியரசுத் தலைவர் தேர்தலில் பி.ஏ.சங்மாவால் வெற்றி பெற முடியவில்லை. வாய் அளவிலும் ஏட்டு அளவிலும் சமூக நிதி பேசும் கட்சிகளுக்கு மத்தியில் அப்துல் கலாமுக்கு ஆதரவு தெரிவித்து குடியரசுத் தலைவராக்க உதவியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

திரௌபதி முர்முவுக்கு பாராட்டு
ஏழை எளியோர், பழங்குடியினர் நலனுக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் திரௌபதி முர்மு. ஜார்கண்ட் மாநிலத்தில் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையும் திரௌபதி முர்முவுக்கு உண்டு. அவருக்குத் தலைசிறந்த நிர்வாகத் திறனும் அனுபவமும் உள்ளது. திரௌபதி முர்மு நமது நாட்டின் தலைசிறந்த குடியரசுத் தலைவராக நிச்சயம் இருப்பார். அதிமுகவின் முழு ஆதரவும் திரௌபதி முர்முவுக்கு இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications