ஏசி பயன்பாடு அதிகம் உள்ள வீடுகளில் மின் கட்டணத்தை குறைக்க சூப்பர் வழி
சென்னை: ஏசி பயன்பாடு அதிகம் உள்ள வீடுகளில் மின் கட்டணத்தை குறைக்க வழிகள் உள்ளதா என்று பலரும் தேடுகிறார்கள். அதற்கு நிச்சயம் வழிகள் உள்ளன. ஆனால் மத்திய அரசே அதற்கு ஒரு நல்ல தீர்வை தற்போது அறிமுகம் செய்துள்ளது. அதுதான் சோலார் பேனலுடன் கூடிய மின் இணைப்பு. வீட்டில் மின் இணைப்பு வைத்துள்ளர்கள், மானியத்துடன் சோலார் பேனல் நிறுவினால் மிகப்பெரிய அளவில் மின் கட்டணத்தை குறைக்க முடியும்.
வீடுகளில் உள்ள மின்சார மீட்டரில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை ரீடிங் எடுக்கப்படுகிறது. இதன்படி மின்சார கட்டணத்தை செலுத்துகிறோம். பொதுவாகவே மின்சார செலவை அதிக அளவில் ஆக்குவது முக்கியமாக ஏசி (ஏர் கண்டிஷனர்கள்), மற்றும் ஃபேன், வாட்டர் ஹீட்டர், மிக்ஸி, கிரைண்டர், குளிர்சாதன பெட்டி, அயர்ன் பாக்ஸ், கம்ப்யூட்டர், மின்சார அடுப்பு போன்றவை அதிக மின்சார நுகரும் சாதனங்களாக உள்ளன.

இதனால் மின்சார கட்டணத்தை குறைக்க ஏசியை குறைவாக பயன்படுத்த வேண்டும். அதேபோல் ஏசி மற்றும் குளிர்சாதன பெட்டியைப் பொறுத்தவரை இன்வெர்ட்டர்களைப் பயன்படுத்தலாம். அதிக மின்சாரம் எடுக்கும் மின்சார உபகரணங்களைப் பயன்படுத்துவதுதை குறைப்பது, அலங்கார விளக்குகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதை குறைப்பதன் மூலம் அதிக மின்சார கட்டணத்தை தவிர்க்கலாம்.
அதேபோல் வீட்டில் மின்சார பயன்பாட்டைச் சேமிக்கஎல்.ஈ.டி பல்புகள் போன்ற குறைந்த வாட் மின் பல்புகளைப் பயன்படுத்தலாம். அதேபோல் ஃப்ரிட்ஜ், ஏ.சி. போன்ற பொருட்களில் 5 நட்சத்திர மதிப்பிடப்பட்ட மின் சாதனங்களைப் பயன்படுத்தலாம். அதேபோல் சமைப்பதற்கு மின்சார அடுப்பை பயன்படுத்தாமல் கேஸ் அடுப்பு பயன்படுத்தலாம். குளியலறையில் சாதாரண மின்சார நீர் ஹீட்டருக்கு பதில் சூரிய நீர் ஹீட்டர் பயன்படுத்தலாம். ஏசியை பொறுத்தவரை ஐந்து நட்சத்திர மதிப்பீடு கொண்ட ஒன்றரை டன் ஏசியை ஒரு மணி நேரம் பயன்படுத்தினால் தான் 1.5 யூனிட் வரும். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் என 60 நாட்கள் ஏசியை பயன்படுத்தினால் 480 மணி நேரத்திறகு 720 யூனிட் ஓடியிருக்கும்.. ஏசிக்கு மட்டுமே 3600 ரூபாய் வரை மின்சார கட்டணம் வரும்.
இந்த பில்களை குறைக்க வேண்டும் என்றால், வீட்டில் சோலார் பேனல்கள் அமைக்கலாம். மாதாந்திர மின்சார பில் இல்லாமல் உங்கள் மின்சாரத்தை இலவசமாகப் பெற முடியும். வீடுகளை பொறுத்தவரை 4 கிலோவாட் சோலார் மின் அமைப்பு 16 சோலார் பேனல்கள் அரசாங்க மின்சார வாரிய கட்டத்துடன் இணைக்கப்படும். இதனால் இரவில் தினமும் ஏசியைப் பயன்படுத்தினாலும், மின்சார பில் மிகக் குறைவாகவே வரும் . சோலார் பேனல் பயன்படுத்தினால் அதிகப்படியான மின் கட்டணத்தை அடியோடு குறைக்க முடியும். அதேபோல் அதிகப்படியான நீர் மோட்டார் பயன்பாடு உள்ள அடுக்குமாடி வீடுகளில் இடங்களில் சோலார் பவர் மூலம் மோட்டார்களை இயக்குவதன் மூலம் மின் கட்டணத்தை சேமிக்கலாம். வீடுகளின் கூரையில் சோலார் தகடுகளை அமைக்க ஒரு கோடி குடும்பங்களுக்கு தலா ரூ78,000 வரை மானிய உதவியும் கிடைக்கும்.
சூரிய எரிசக்திகான சோலார் பேனல்களை வீடுகளில் மேல் கூரைகளில் நிறுவ, திட்டப்பணியை பொறுத்து மத்திய அரசு நிதி உதவி வழங்குகிறது. 2 கிலோவாட் திறன் கொண்டஅமைப்புக்கு 60% மானியமும், 2 முதல் 3 கிலோவாட் திறன் கொண்ட சோலார் பேனல் அமைப்புகளுக்கு 40% நிதியுதவி கிடைக்கும் . அதாவது, 3 கிலோவாட்டுக்கு ரூ.78,000 மானிய உதவியும், 2 கிலோவாட் திறன் கொண்ட சோலார் அமைப்புக்கு ரூ.60,000 மானியமும், 1 கிலோவாட் திறன் கொண்ட அமைப்புக்கு ரூ.30,000 மானியமும் கிடைக்கும். எனினும், ஏற்கனவே தங்கள் வீடுகளில் சோலார் சிஸ்டம் வைத்திருக்கும் நுகர்வோருக்கு இந்த மானியம் கிடைக்காது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications