அடுத்த ஆட்சி யாருக்கு.. தமிழகம் யார் பக்கம்.. "எக்ஸிட் போல்"கள் எப்போது வெளியாகும் தெரியுமா..?
தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி அமைக்க போகிறார்கள்? தமிழகத்தின் பெரும்பாலான ஓட்டுக்கள் யாருக்கு விழுந்துள்ளன என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் எக்ஸிட் போல்கள் எப்போது வரும் என்ற ஆவல் வாக்காள பெருமக்களிடம் எழுந்துள்ளது.
பொதுவாக தேர்தல் என்றாலே, கருத்து கணிப்புகள் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றுவிடுகின்றன.. அந்த வகையில், இருவகையான கணிப்புகள் அரசியல் களத்தை ஆட்டி படைக்கின்றன.. ஒன்று தேர்தலுக்கு முந்தைய கணிப்புகள் மற்றொன்று, வாக்கு பதிவுக்கு பிந்தையை கருத்து கணிப்புகள்.
இதில், தேர்தலுக்கு பிறகு, ஒட்டுமொத்தமாக எல்லாரும் ஓட்டுப்போட்ட பிறகு வெளியிடப்படுவதுதான் பிந்தைய கருத்துக் கணிப்புஆகும்...!

கணிப்பு
குறிப்பாக, எந்த கட்சி ஆட்சியமைக்க போகிறது என்பது குறித்து இதில் கணிக்கப்படும்... அதாவது தேர்தலுக்கு முன்பு, யாருக்கு உங்கள் ஓட்டு என்று வாக்காளர்களிடம் கேட்கப்படும்.. ஆனால், இந்த கணிப்பில், யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என்று கேட்கப்படும்.. அதை வைத்துதான், முடிவுகள் வெளியாகும்... இதை பல நிறுவனங்கள் பிரதானமாகவே எடுத்து செய்து வருகின்றன...!

கணிப்பு
எனினும், தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் பலமுறை விவாதத்திற்கு உள்ளாகி இருக்கின்றன. இதற்கு காரணம், இந்த கணிப்பு எல்லாம் ஒருதலைப்பட்சமாகவே இருப்பதாகவும், போட்டியாளர்களுக்கு எதிராக வேண்டுமென்றே தவறான கணிப்புகளை கொடுப்பதாகவும் ஒருசில குற்றச்சாட்டுகளும் எழுந்தபடியே உள்ளன.. இந்த எக்ஸிட் போல்கள், கடந்த 1998ம் ஆண்டிலிருந்தே சரியான முடிவுகளை சொல்லவில்லை என்று ஒரு தரப்பு சொல்லி வருகிறது என்பதையும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது...!

விமர்சனங்கள்
ஆனால், எத்தனை விமர்சனங்கள் வந்தாலும், எக்ஸிட் போல்களுக்கான முடிவுகளை தெரிந்து கொள்வதில் வாக்காளர்கள் ஆர்வம் காட்டிதான் வருகிறார்கள்.. அந்த வகையில் இந்த முறையும் ஆர்வம் பெருகி உள்ளது.. நேற்றுதான் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது..!

தமிழகம்
இதையடுத்து யாருக்கு வாக்களித்தது தமிழ்நாடு என்பதை தெரிந்து கொள்ள ஆர்வம் இன்றே தொடங்கிவிட்டது.. என்றாலும் இந்த முறை உடனே எக்ஸிட் போல்கள் வெளியாகாது என்றே தெரிகிறது.. இந்த முடிவுக்கு, வரும் 29ம் தேதி இரவு 7.30 மணி வரை காத்திருக்க வேண்டிய நிலைமையும் உள்ளது. அன்றைய தினம் தான், மேற்கு வங்காளத்தில் கடைசி கட்ட தேர்தல் முடிகிறது.. அதனால், அன்று இரவு 7.30 வரை எக்சிட் போல் முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது...!

கணிப்புகள்
எனவே அதற்குப் பிறகுதான் முடிவுகள் வெளியாகும் என்றே தெரிகிறது.. அதேசமயம், இந்த எக்ஸிட் போல் கணிப்புகள் என்பது பொதுவானவைதான்.. எத்தனையோ கணிப்புகள் தேர்தல் முடிவுக்கு பிறகு தகர்ந்துபோன வரலாறும் உண்டு என்பதால், இது ஒரு குத்துமதிப்பான கணிப்புதான்.. மத்தபடி மக்கள் தீர்க்கமாக எழுதிவிட்ட முடிவை எந்த கணிப்புகளாலும் உடைக்க முடியாது..!
-
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு











Click it and Unblock the Notifications