வாக்காளர்கள் மொபைல் போன்களை வைத்து செல்ல வாக்குச்சாவடியில் தனி வசதி.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சென்னை: வாக்களிக்க வரும் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்து செல்ல அனுமதி கிடையாது என்பதால், வாக்குச்சாவடிக்கு வெளியே செல்போன்களை ஒப்படைக்க தனி வசதி ஏற்படுத்தப்படும். வாக்காளர்கள் வாக்களித்துவிட்டு வந்த பிறகு செல்போன்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
தமிழ்நாடு, புதுவை, கேரளா, அசாம், மேற்கு வாங்கம் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி ஐந்து மாநிலங்களிலும் நடைபெறும்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், வாக்குப்பதிவின் போது பின்பற்றப்படும் நடைமுறைகள் உள்ளிட்டவற்றை விளக்கி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வாக்குச்சாவடிகளின் வெளியே மொபைல் போன்களை ஒப்படைக்கும் வசதி ஏற்படுத்தப்படும். வாக்காளர்கள் தங்களின் மொபைல் போன்களை அங்கு ஒப்படைத்து, வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்களித்து, பின்னர் வெளியே வந்து தங்களின் மொபைல் போன்களை பெற்றுக்கொண்டு செல்லலாம்.
மேலும், வாக்குப்பதிவு அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) வேட்பாளர்களின் கலர் போட்டோக்கள் மற்றும் பெரிய எழுத்துக்கள் இடம்பெறும். இதனால் வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்க விரும்பும் வேட்பாளரை எளிதாக அடையாளம் காண முடியும்" என்று தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications