18 ம் தேதி சென்னையில் அனைத்து கட்சி கூட்டம்! தேர்தல் அதிகாரி ஆலோசனை.. விசிக, நாம் தமிழர் பங்கேற்பு
சென்னை: தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக, வரும் 18ம் தேதி, சென்னை தலைமை செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளுக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அழைப்பு விடுத்துள்ளது. இது தமிழக அரசியலில் மிகுந்த பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை, 3.11 கோடி ஆண் வாக்காளர்கள், 3.24 கோடி பெண் வாக்காளர்கள், 9,120 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க 68 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணைய தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள ஞானேஷ்குமார், அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், மாவட்டதேர்தல் அதிகாரிகள், வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்தி, ஆலோசனைகளை பெற்று, சட்ட விதிகளுக்கு உட்பட்டு தீர்வு காண வேண்டும்.
அறிவுறுத்தல் - கடிதம்
இது தொடர்பான விவரங்களை மார்ச் 31-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, வாக்காளர் பதிவு அதிகாரிகள் அவ்வப்போது கலந்துரையாடல் கூட்டங்களை நடத்துவதுடன், அவர்கள் வைக்கும் கோரிக்கைகளை சட்டத்திற்கு உட்பட்டு தீர்த்து வைக்க வேண்டும் என்றும் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் உத்தரவிட்டிருந்தார்.. எனவே, இதுதொடர்பாக அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் கமிஷன் கடிதம் எழுதியிருக்கிறது.
18ம் தேதி தலைமை செயலகத்தில்
இந்நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகளை அழைத்து பேச தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் திட்டமிட்டுள்ளார். .. இதற்காக, அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தலைமை தேர்தல் அதிகாரி வரும் 18-ம் தேதி, பிற்பகலில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த உத்தேசித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இதுபற்றி பேசிய அர்ச்சனா பட்நாயக், 18-ந் தேதியை உத்தேசமாகத்தான் கருதியுள்ளோம் என்றும் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் தேதி பின்னர் உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
முதல்முறையாக பங்கேற்பு
இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 14 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்... இவைகளில் முதன்முறையாக நாம் தமிழர் கட்சி, விசிகவும் பங்கேற்க போகின்றன.
இந்த கூட்டத்தில் ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது, இறந்தவர்கள் பெயர்களை நீக்காமல் இருப்பது உள்ளிட்ட வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள், வாக்குச்சாவடிகள் அமைவிடம் தொடர்பான ஆட்சேபனைகள், தேர்தல் நடத்தை விதிகளை முறையாக அமல்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications