சீமானுக்கு கிடைக்காத கரும்பு விவசாயி சின்னம் சுயேட்சைகளுக்கு வந்தது எப்படி? தேர்தல் ஆணையம் விளக்கம்
சென்னை: சுயேச்சை வேட்பாளர்களுக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
நாம் தமிழர் கட்சியினர் கடந்த தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு வந்தனர். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது. மாறாக விவசாயி சின்னம் கர்நாடகாவை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

கரும்பு விவசாயி சின்னத்தை பெற நீதிமன்றம் சீமான் போராடிய நிலையில், அவருக்கு மறுக்கப்பட்டு பாரதிய ஐக்கிய மக்கள் கட்சிக்கு அந்த சின்னம் ஒதுக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலில், கரும்பு விவசாயி சின்னம் பெற்ற பாரதிய ஐக்கிய மக்கள் கட்சி தமிழ்நாட்டில் 17 தொகுதிகளில் போட்டியிட மனுத் தாக்கல் செய்தது. மற்ற தொகுதிகளில் வேட்பாளர்களாக நிறுத்த ஆட்கள் கிடைக்காத காரணத்தால் அக்கட்சி போட்டியிடவில்லை.
அந்த வகையில், பாரதிய ஐக்கிய மக்கள் கட்சி போட்டியிடாத இடங்களில் கரும்பு விவசாயி சின்னம் சுயேட்சைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் சுயேட்சையாக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் போட்டியிடும் நிலையில், அங்கு மேலும் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 5 பேர் போட்டியிடுகின்றனர்.
நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாக கோரி வந்த கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க முடியாது என மறுத்த தேர்தல் ஆணையம், தங்களுக்கு மைக் சின்னம் வழங்கிய நிலையில் ராமநாதபுரத்தில் சுயேட்சை வேட்பாளருக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது ஏன் என நாம் தமிழர் கட்சியினர் கொந்தளித்தனர்.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. "ஒரு சின்னம் Free Symbol பட்டியலில் இருக்கும் போது, அந்தச் சின்னம் அங்கீகரிக்கப்படாத மாநில கட்சிக்கு ஒதுக்கப்பட்டாலும், அந்தக் கட்சி போட்டியிடாத தொகுதிகளில் எந்த சுயேச்சை வேட்பாளரும் அந்த சின்னத்தை கேட்க முடியும்" என சுயேச்சை வேட்பாளர்களுக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications