தூத்துக்குடி, சேலம் ஆட்சியர்கள் மாற்றம்.. மதுரை காவல் ஆணையர் மாற்றம்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 2 மாவட்ட ஆட்சியர்கள், 2 காவல் ஆணையர்கள் மற்றும் ஒரு ஐஜி உள்ளிட்டோர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் நிரந்தர சட்டம் - ஒழுங்கு டிஜிபி நியமிக்கப்படவில்லை என்று நீண்ட காலமாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. நிரந்தர சட்டம் - ஒழுங்கு டிஜிபி நியமிக்கப்படாததே தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகளுக்கு காரணம் என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல் தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேபோல் 2 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் 2 காவல் ஆணையர்கள் மற்றும் ஒரு ஐஜி ஆகியோரையும் மாற்றி இருக்கிறது. அதன்படி கோவை மேற்கு மண்டல ஐஜியாக ரம்யா பாரதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த பிருந்தா தேவி மாற்றப்பட்டு அருண் தம்புராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் தூத்துக்குடி ஆட்சியராக இருந்த இளம் பகவத் மாற்றப்பட்டு, விஷ்ணு மஹாஜன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் தாம்பரம் காவல் ஆணையராக இருந்த அமல்ராஜ் மாற்றப்பட்டு சஞ்சய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை காவல் ஆணையராக இருந்த லோகநாதன் மாற்றப்பட்டு அபிஷேக் தீக்ஷித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் சூழலில், தேர்தல் ஆணையம் அடுத்தடுத்து காவல் ஆணையர்களை மாற்றி வருகிறது. தேர்தல் நெருங்கும் போது இது இன்னும் அதிகரிக்கும் என்று பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications