‛மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்யக்கூடாது’’..தேர்தல் ஆணையம் - கோர்ட்டுக்கு ஓடும் செல்வபெருந்தகை
சென்னை: பிரதமர் மோடி 3 நாள் பயணமாக மே 30ம் தேதி தமிழகம் வருகிறார். மே 30 முதல் ஜுன் 1 வரை அவர் கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் பாறையில் தியானம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் தான் பிரதமர் மோடி இத்தகைய தியானம் மேற்கொள்வது என்பது தேர்தல் விதிமீறலாகும். இதற்கு தேர்தல் ஆணையம் அனுமதிக்க கூடாது என தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தை நாட உள்ளதாக அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 6 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. 7 வது மற்றும் கடைசி கட்ட லோக்சபா தேர்தல் என்பது ஜுன் 1ல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் தான் பிரதமர் மோடி களமிறங்கி உள்ள வாரணாசி தொகுதிக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

அதன்பிறகு ஜுன் 4ல் நாடு முழுவதும் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. இந்நிலையில் தான் பிரதமர் மோடி இறுதிக்கட்ட லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த பிரசாரம் என்பது வரும் 30ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது.
இந்நிலையில் தான் லோக்சபா தேர்தல் பிரசாரத்தை முடிக்கும் கையோடு பிரமதர் மோடி தமிழகம் வருகை தர உள்ளார். கன்னியாகுமரியில் கடலுக்கு நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு பாறைக்கு சென்று பிரதமர் மோடி தியானம் மேற்கொ்ள உள்ளார். அதாவது நாளை மறுநாள் டெல்லியில் இருந்து விமானத்தில் பிரதமர் மோடி திருவனந்தபுரம் வருகிறார். அதன்பிறகு ஹெலிகாப்டரில் அவர் கன்னியாகுமரி வருகிறார். அங்கு படகு மூலம் விவேகானந்தர் நினைவுப் பாறைக்கு சென்று பிரதமர் மோடி தியானம் செய்துவிட்டு ஜுன் 1ல் டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார்.
‛நிறைவேறாத வேண்டுதல்’.. மோடியை தொடர்ந்து மே 30ல் தமிழகம் வரும் அமித்ஷா! திருமயத்துக்கு விசிட்
கடந்த 2019 லோக்சபா தேர்தல் முடிந்த பிறகு பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் சென்று தியானம் செய்த நிலையில் இந்த முறை கன்னியாகுமரி வருகை தர உள்ளார். பிரதமர் மோடி வருகையையொட்டி கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருவது தேர்தல் விதிமீறல் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை குற்றம்சாட்டி உள்ளார்.
மேலும் அதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்க முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக செல்வபெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: மே 30 முதல் ஜூன் 1 வரை நரேந்திர மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளி வருகிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக் கூடாது.
மீண்டும் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. தேர்தல் ரிசல்ட்டுக்கு முன்பாக குமரி முனையில் தியானம்!
வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணிநேர அமைதிக் காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியின் மூலம் ஊடகங்கள் வாயிலாக மோடி மறைமுகப் பிரச்சாரம் செய்ய முயற்சிக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் நாளை கடிதம் கொடுக்கப்பட உள்ளது. தேவைப்பட்டால் நீதிமன்றத்தையும் அணுகுவோம் என்று தெரிவித்துக்கொள்கிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார். மேலும் எக்ஸ் பதிவில் செல்வபெருந்தகை தமிழக தேர்தல் அதிகாரி மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தை ‛டேக்’ செய்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications