‛நிறைவேறாத வேண்டுதல்’.. மோடியை தொடர்ந்து மே 30ல் தமிழகம் வரும் அமித்ஷா! திருமயத்துக்கு விசிட்
சென்னை: லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது சாமி தரிசனம் மிஸ்ஸான நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மறுநாள் மீண்டும் தமிழகம் வருகிறார். தேர்தல் சமயத்தில் திட்டமிட்டு ரத்து செய்யப்பட்ட திருமயம் கோட்டை பைரவர் கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
நம் நாட்டில் 7 கட்டங்கள் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 6 கட்ட லோக்சபா தேர்தல்கள் முடிவடைந்து விட்டன. ஜுன் 1ம் தேதி 7 வது மற்றும் கடைசி கட்ட லோக்சபா தேர்தல் என்பது நடைபெற உள்ளது.

இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் கடைசி கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் முகாமிட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மறுநாள் மீண்டும் தமிழகம் வருகிறார். அதன் பின்னணி குறித்த விபரம் தற்போது வெளியாகி உள்ளது. நாளை மறுநாள் பிரதமர் மோடி தமிழகம் வருகை தருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அமித்ஷாவும் வருகை தர உள்ளார். இது தற்போது கவனம் பெற்றுள்ளது.
‛அண்ணாமலையே ஜெயிக்கமாட்டார்’.. 40 தொகுதியில் வெல்வார்கள் என்பது பாஜகவின் பேராசை.. திமுக பதிலடி
பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் தற்போது கடைசி கட்ட லோக்சபா தேர்தல் நடைபெறும் இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பிரசாரம் வரும் 30ம் தேதி நிறைவு பெறுகிறது. இதையடுத்து தான் அன்றைய தினம் அவர்கள் தமிழ்நாடு நோக்கி வருகின்றனர்.
பிரதமர் மோடி கன்னியாகுமரி செல்லும் நிலையில் அமித்ஷா புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்துக்கு வருகை தர உள்ளார். அதாவது தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக மொத்தமுள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலையொட்டி பிரதமர் மோடி, அமித்ஷா உள்பட பாஜக மூத்த தலைவர்கள் தமிழகத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
கடந்த ஏப்ரல் 12ம் தேதி அமித்ஷா 2 நாள் பயணமாக தமிழகம் வந்தார். அன்றைய தினம் அவர் சிவகங்கை லோக்சபா தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சிவகங்கை பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவை ஆதரித்து வாகன பேரணி செய்வதாகவம், திருமயத்தில் உள்ள கோட்டை பைரவர் - அருள்மிகு ராஜராஜேஸ்வரி உடனுரை சத்யவாகீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்வதாகவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் அன்றைய தினம் திருமயம் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் மழை பெய்தது. இதனால் மதுரையில் இருந்து அமித்ஷா செல்லும் ஹெலிகாப்டர் திருமயத்தில் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து திருமயம் கோட்டை பைரவர் கோவிலில் அமித்ஷாவின் சாமி தரிசனம் மற்றும் அங்கு நடைபெற இருந்த வாகன பேரணி ஆகியவை ரத்து செய்யப்பட்டன.
மீண்டும் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. தேர்தல் ரிசல்ட்டுக்கு முன்பாக குமரி முனையில் தியானம்!
இந்நிலையில் தான் மிஸ்ஸான திருமயம் கோட்டை பைரவர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மறுநாள் தமிழகம் வருகிறார். அவர் மதுரை விமான நிலையத்துக்கு வந்திறங்கி அங்கிருந்து திருமயம் கோட்டை பைரவர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய உள்ளார்.
ஏற்கனவே பிரதமர் மோடி 3 நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தர உள்ளார். அதன்படி பிரதமர் மோடி நாளை மறுநாள் தமிழகம் வருகிறார். நாளை மறுநாள் மே 31, ஜூன் 1 ஆகிய 3 நாட்கள் பிரதமர் மோடி கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தில் ஈடுபட உள்ளார். பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கு ஜுன் 1ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவர் கன்னியாகுமரியில் தியானத்தில் ஈடுபட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு












Click it and Unblock the Notifications