Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் SIR பணிகள்.. யார் யாருக்கு பாதிப்பு? தமிழகத்தில் நிலவரம் எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் ஆணையம் தமிழகம், கேரளா உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியை தொடங்கியுள்ளது. இந்த பணிகள் எப்படி நடைபெறும், யார் யாருக்கு பாதிப்பு ஏற்படும், தமிழகத்தில் என்ன மாதிரியான தாக்கங்கள் இருக்கும் என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை தேர்தல் ஆணையம் சமீபத்தில் மேற்கொண்டது. இதையடுத்து, நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

election-commission-voter-sir-drive-who-will-be-affected-what-s-the-situation-in-tamil-nadu

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி

இந்த நிலையில், அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் உள்பட மொத்தம் 12 மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. கடைசியாக 21 ஆண்டுகளுக்கு முன்பு 2002-04ம் ஆண்டுகளில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி நடந்தது.

டெல்லியில் 2008ம் ஆண்டும், உத்தரகாண்ட் 2006ம் ஆண்டும், பீகாரில் 2003ம் ஆண்டும் கடைசியாக இந்த பணி நடந்தது. சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படும் மாநிலங்களில் நள்ளிரவில் இருந்து வாக்காளர் பட்டியல்கள் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அனைத்து விவரங்களுடனும் கூடிய தனித்துவமான கணக்கெடுப்பு படிவங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்படும்.

3 முறை வந்து சோதனை செய்வர்

வாக்குச்சாவடி அதிகாரிகள் ஒவ்வொரு வீட்டுக்கும் 3 முறை வந்து சோதனை செய்வார்கள். சிறப்பு தீவிர திருத்தம் செயல்முறை அடுத்த மாதம் 4ந்தேதி தொடங்கும். வரைவு பட்டியல் டிசம்பர் 9ந்தேதி வெளியிடப்படும். டிசம்பர் 9ஆம் தேதி முதல் ஜனவரி 8ஆம் தேதி வரை ஆட்சேபனைகள் இருந்தால் சமர்ப்பிக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந்தேதி வெளியிடப்படும்.

இந்த வாக்காளர் சிறப்பு திருத்த பணிகள் கடைசியாக 2002ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. எனவே அப்போது என்ன வாக்காளர் பட்டியல் இருந்ததோ அதனை அடிப்படை ஆண்டாக வைத்து, தற்போதைய வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட உள்ளது. தற்போது வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பவர்களுக்கு ஏற்கனவே 2002ஆம் ஆண்டும் பட்டியலில் இருந்தால் கூடுதலாக எந்த ஆவணமும் வழங்க தேவையில்லை.

12 வகையான ஆவணங்கள்

ஒருவேளை 2002ஆம் ஆண்டு பட்டியலில் பெயர் இல்லை என்றாலும், பெற்றோர் பெயர் இடம் பெற்று இருந்தால் அவர்களும் ஆவணம் எதுவும் கூடுதலாக அளிக்க வேண்டியது இல்லை. ஒருவேளை தற்போது வாக்கு இருப்பவர்களுக்கு 2002ஆம் ஆண்டு பட்டியலில் இல்லை என்றால் அவர்கள் கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். பாஸ்போர்ட், சாதி சான்றிதழ் என 12 வகையான ஆவணங்களை பட்டியலிட்டுள்ளது.

பூத் லெவல் அதிகாரிகள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பவர்களுக்கு ஒரு படிவத்தை கொடுப்பார்கள். இந்த படிவத்தில் அடிப்படை விவரங்களை பூர்த்தி செய்து அவர்களிடம் வழங்க வேண்டும். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு யாருடைய பெயராக விடுபட்டு இருந்தால் முதலில் கலெக்டரிடம் மேல் முறையீடு செய்யலாம்.

தமிழகத்தில் பாதிப்பு இருக்காது

அதில் திருப்தி இல்லை என்றால் தலைமை தேர்தல் அதிகாரியிடம் மேல் முறையீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளை பொறுத்தவரை தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றே சொல்லப்படுகிறது.

மேற்கு வங்கம், பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஊடுருவல்காரர்கள் பிரச்சினை இருப்பது போல தமிழ்நாட்டில் அதுபோன்ற சிக்கல் இல்லை. எனினும், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பட்டியல் என்ற பெயரில் வாக்கு திருட்டு நடைபெறுகிறது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. எனவே, தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணி கட்சிகள் இந்த வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளை கடுமையாக எதிர்த்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+