நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் எப்படி ஒதுக்கப்பட்டது? தேர்தல் ஆணையம் பதில்!
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை சின்னம் கொடுத்திருப்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
தகவல் உரிமை பெரும் சட்டம் மூலம் P. ஜெயசிம்மன் அவர்களுக்கு தேர்தல் ஆணையம் அளித்துள்ள பதிலில், நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் வந்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இரட்டை இலை சின்னம் கட்சியின் பெயர் கொடி இவற்றை பயன் படுத்த கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை கருத்தில் கொண்டு இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி அணிக்கு ஒதுக்கியதாக, தேர்தல் ஆணையம் தகவல் உரிமை பெறும் சட்டத்தின் மூலம் P ஜெயசிம்மன் அவர்களுக்கு பதில் அனுப்பியுள்ளது.

ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டதற்கு, ஏற்கனவே தேர்தல் ஆணைய செயலாளர் ஜெய் தேவ் லஹரி 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விதித்துள்ள ஆணையே தொடர்வதாக சொல்லி உள்ளது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது புரிகிறது. இரட்டை இலை பெறுவது சம்பந்தமாக வா புகழேந்தி அவர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்கள்.
அந்த வழக்கின் தீர்ப்பில் புதிய மனுவை மனுதாரர் புகழேந்தி இடம் பெற்றுக் கொண்டு அதனை பரிசீலிக்க வேண்டும், என டெல்லி உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அதன்படி தேர்தல் ஆணையத்தில் புதிய மனுவும் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பின்னர் சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் மனு தாக்கல் செய்யும் தேதிக்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்றம் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூன்றாம் தேதி இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் அணி பயன்படுத்தக்கூடாது என தீர்ப்பளித்தது வேட்பாளர்களும் நிறுத்தப்படவில்லை.
வா புகழேந்தி புதுடெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்திற்கு மனுவை பெற்று பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட ஆணை பிறப்பித்து பெற்ற, 2024 மார்ச் 18 ஆம் தேதி உத்தரவிற்கு பின்னால், சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் வழக்கின் தீர்ப்பு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களுக்கு எதிராக அமைந்ததால், இரட்டை இலை எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து வா புகழேந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேர்தல் ஆணையம் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை ஏன் பின்பற்றவில்லை என்பது குழப்பமாக உள்ளது. புதுடெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட என்னுடைய வழக்கில் நடவடிக்கை எடுக்க நேரடியாக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் வந்த தீர்ப்பை ஏன் தேர்தல் ஆணையம் பரிசீலித்தது என்பது புரியவில்லை. அதில் தேர்தல் ஆணையத்திற்கு எந்த உத்தரவும் நேரடியாக இல்லை ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் தொடர்கிறார்களா? என்கின்ற கேள்விகளுக்கு தேர்தல் ஆணைய செயலாளரின் உத்தரவின்படி முந்தைய நிலையே தொடர்கிறது என்று பதில் அளித்து இருப்பதும் இன்னும் தீர்வு ஏற்படவில்லை என்பதை அறிய முடிகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கினுடைய தீர்ப்பு தான் இரட்டை இலை சின்னம் எடப்பாடி அணிக்கு செல்வதற்கு காரணம். வழக்கை நடத்தினால் இப்படித்தான் தீர்ப்பு வரும் என்று தெரிந்தும் பல மூத்த வழக்கறிஞர்கள் சொல்லியதை கேட்காமலும் வழக்கை நடத்தியதுதான் பெரிய பாதகமாக முடிந்தது. மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் வாதாடிய போது முன் வைத்த கருத்துக்கள் எல்லாம் மிகச் சரியாக இருந்தது.
வழக்கில் வெளிப்படை தன்மை இல்லாததும் மற்றவர்களை கலந்து ஆலோசிக்காததுதான் இந்த நிலைப்பாட்டிற்கு காரணம். ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களுக்கு எதிராக தொடர்ந்து தீர்ப்பு அளித்த அதே நீதிமன்றத்தில் வழக்கு நடத்தியதும்தான் இரட்டை இலையை இழந்ததற்கு காரணம் என பல மூத்த வழக்கறிஞர்கள் சொல்லுவது சரியான ஒன்றுதான், என்பதனை வேதனையுடன் புகழேந்தி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தேர்தல் ஆணையம் சரியாக கவனம் செலுத்தாமல் அவசர அவசரமாக தவறான முடிவுகளை எடுத்துள்ளது. அதில் உள்ளகுறைபாடுகளை சுட்டிக்காட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஆணையம் எதையும் சரிவர செய்வதில்லை என்பதற்கு இப்படிப்பட்ட முடிவு முன் உதாரணமாகும்.
பல அரசியல் தலைவர்கள் தேர்தல் ஆணையம் செயல்பாடுகளை சுட்டிக்காட்டி குறை சொல்வது இதன் மூலம் நிரூபணம் ஆகி உள்ளது எனவும் கூறியுள்ளார். தேர்தல் ஆணையம் அளித்துள்ள பதில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும், சட்ட ரீதியாக முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications