Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Election Exclusive: மூஞ்சில அடிச்ச மாதிரி பேசிட்டாரே ஸ்டாலின்.. கடுகடு காங்.,! ராகுலிடம் லிஸ்டை நீட்டிய பிரவீன்.. தவெக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'ஆட்சி அதிகாரத்தில் யாருக்கும் தமிழகத்தில் பங்கு இல்லை' என திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பொதுவெளியில் போட்டு உடைத்தது காங்கிரஸ் தலைமையை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக ஸ்டாலினுடன் நட்பு பாராட்டி வந்த ராகுல் காந்தி இதனால் கடும் அதிர்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ராகுல் காந்தியை சந்தித்த தமிழகத்தைச் சேர்ந்த சில தலைவர்கள் விஜய் உடனான கூட்டணி வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து விரிவாக விளக்கியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் புதிய கூட்டணி அமைவதற்கான சாத்திய கூறுகள் தென்பட துவங்கியுள்ளதாக சொல்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

தமிழக அரசியலில் புதிய கூட்டணி அமைவதற்கான சாத்தியம் குறித்து பரபரப்பை ஏற்படுத்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக 2026 சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி மாற்றம் தொடர்பான ஆலோசனைகள் தீவிரமடைந்துள்ளதாக சொல்கின்றனர் டெல்லி வட்டாரத்தினர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை தமிழகத்தைச் சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி மற்றும் மாணிக்கம் தாகூர் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீப காலமாக திமு கழகம் மற்றும் காங்கிரஸ் இடையிலான உறவில் கருத்து வேறுபாடுகள் உருவாகியுள்ளன.

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 Congress tvk

திமுக காங்கிரஸ் மோதல்

குறிப்பாக "ஆட்சியில் பங்கு" என்ற கோரிக்கை தான் இந்த கருத்து முரண்பாட்டின் மைய புள்ளியாகப் பார்க்கப்படுகிறது. வெறும் தொகுதி பங்கீடு மட்டுமின்றி, ஆட்சி அமைப்பில் தங்களுக்கும் உரிய இடம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை காங்கிரஸ் தரப்பு வலியுறுத்தி வந்தது. இந்த கோரிக்கைக்கு பதிலளித்த தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், மாநிலத்தில் கூட்டணி ஆட்சி என்ற நடைமுறை வழக்கமாக இல்லை என்றும், அது பொருத்தமான நடைமுறை அல்ல என்றும் தெளிவாக தெரிவித்தார். இந்த பேட்டி வெளியான பிறகு திமுக கூட்டணியில் மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

ஆட்சியில் பங்கு விவகாரம்

இந்நிலையில், திமுக கூட்டணியில் இருந்து விலகி, தமிழக வெற்றி கழகம் உடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வாய்ப்பு குறித்து தகவல்கள் பரவி வருகின்றன. இதனைத் தொடர்ந்து டெல்லியில் ராகுலுடன் நடந்த சந்திப்பில், எதிர்கால தேர்தல் சூழல், தொகுதி வாய்ப்புகள் மற்றும் கூட்டணி அமைப்பு குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. தகவல்களின் படி, மாநில அளவிலான தேர்தல் தரவு மற்றும் சர்வே முடிவுகள் ராகுல் காந்தியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

ராகுல் பிரவீன் சந்திப்பு

குறிப்பாக எந்த தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது, எந்த தொகுதிகளில் இரண்டாம் இடம் பெறலாம் என்பதற்கான ஆய்வு அறிக்கைகள் பகிரப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் காங்கிரசுக்கு சாதகமாக உள்ள தொகுதிகளின் பட்டியலும் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த கட்ட நடவடிக்கையாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் சென்னை வர உள்ளதாக கூறப்படுகிறது. அவர் வருகையின் போது விஜய்யை சந்தித்து கூட்டணி வாய்ப்புகள் குறித்து நேரடி பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2026 தமிழக தேர்தல்

இந்த சந்திப்பு நடைபெற்றால், தமிழக அரசியலில் முக்கிய மாற்றங்களுக்கு அது வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளிவரும் தகவல்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இல்லாவிட்டாலும், கூட்டணி அரசியல் தொடர்பான அடுத்த கட்ட நகர்வுகளை காங்கிரஸ் தீவிரமாக பரிசீலித்து வருவது தெளிவாகிறது. 2026 தேர்தலை முன்னிட்டு கூட்டணி, தொகுதி பங்கீடு மற்றும் ஆட்சி அமைப்பு குறித்து நடைபெறும் ஆலோசனைகள் தமிழக அரசியலில் அடுத்த சில வாரங்களில் புதிய திருப்பத்தை உருவாக்கக்கூடும் என்ற மதிப்பீடு நிலவுகிறது.

தமிழக கூட்டணி அரசியல்

இதனால், தமிழக அரசியலில் நிலவும் கூட்டணி அமைப்பில் மாற்றம் ஏற்படுமா அல்லது தற்போதைய கூட்டணியே தொடருமா என்பது குறித்து அரசியல் வட்டாரங்கள் ஆவலுடன் கவனித்து வருகின்றன. இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் தரப்பினர்," ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை என திமுக சொல்லும் என எங்களுக்கு தெரியும். ஆனால் நான்கு சுவற்றுக்குள் பேச வேண்டிய விஷயத்தை இப்படி பொதுவெளியில் முதல்வர் பேசியது ராகுல் காந்தியையே அதிருப்தியில் ஆழ்த்தியது.

காங்கிரஸ் புதிய கூட்டணி

கூட்டணி பேச்சு வார்த்தையின் போது இது போன்ற கருத்துக்களை வெளியில் பேச வேண்டாம் என எங்களிடம் தெரிவித்திருக்கலாம். ஆனால் ஒரு தேசிய செய்தி நிறுவனம் முன்பு ஸ்டாலின் பேசியது மன வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அதனால் தமிழகத்தில் வேறு கூட்டணி நமக்கு இல்லையா என ராகுல் காந்தி கேட்டதாகவும், இதை அடுத்துதான் பிரவீன் சக்கரவர்த்தி அவரை சந்தித்து கூட்டணி வாய்ப்புகள் குறித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+