6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு
சென்னை: 2026ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சிகளுக்கிடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. அந்த வகையில், திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையேயான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று இறுதி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.
ஏற்கனவே திமுக தலைமையிலான கூட்டணியில் முக்கிய கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு முடிவடைந்துள்ளது.

இதையடுத்து மீதமுள்ள சில கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் மட்டும் தொகுதி எண்ணிக்கை தொடர்பாக இழுபறி நிலை நீடித்து வந்தது.
திமுக மார்க்சிஸ்ட் கூட்டணி
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த முறை கூட்டணியில் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், 5 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என்று திமுக தரப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் ஆரம்பத்தில் அதிருப்தி நிலவியது.
தொகுதி பங்கீடு
இந்த சூழலில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக உயர் தலைமையுடன் நேரடி ஆலோசனை நடத்துவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்டோர், அண்ணா அறிவாலய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சந்திப்பில், தொகுதி பங்கீடு தொடர்பான இறுதி நிலைப்பாடுகள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
6 சீட் கோரும் மார்க்சிஸ்ட்
இருப்பினும், திமுக தரப்பு 5 தொகுதிகள் என்ற எண்ணிக்கையில் உறுதியாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வருடன் நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், "மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து பயணித்து வருகிறது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது உறுதி. இதுகுறித்து திமுக தரப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்தார்.
மாநிலக் குழு
"கடந்த முறை போட்டியிட்ட 6 தொகுதிகளைக் காட்டிலும் அதிக தொகுதிகளை வலியுறுத்த வேண்டாம்; அதே 6 தொகுதிகளில் உடன்பாடு செய்யலாம் என எங்கள் மாநிலக் குழு முன்பு தெரிவித்திருந்தது. அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்படி எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து முதல்வரிடம் நேரடியாக பேசினோம்" என்றார் சண்முகம்.
திமுக கூட்டணி பேச்சுவார்த்தை
அந்த சந்திப்பின் போது, கூட்டணியில் பல புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகள் ஒதுக்குவதில் சிரமம் இருப்பதாக முதல்வர் தெரிவித்ததாகவும், 5 தொகுதிகள் என்ற எண்ணிக்கையை ஏற்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்பட்டது. அதற்கு பதிலளித்த மார்க்சிஸ்ட் தரப்பு, 5 தொகுதிகள் குறித்து மாநிலக் குழு மீண்டும் கூடி ஆலோசித்து முடிவு தெரிவிப்பதாக தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் திங்கட்கிழமை நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு, நீண்ட நாட்களாக நீடித்து வந்த இழுபறி நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக - மார்க்சிஸ்ட்
அரசியல் வட்டாரங்களின் கணிப்புப்படி, மாநிலக் குழுவின் ஒப்புதல் கிடைத்ததும் திமுக - மார்க்சிஸ்ட் இடையேயான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் திங்கட்கிழமை மாலைக்குள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் திமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு பணிகள் முழுமையாக நிறைவடையும் என்றும் கூறப்படுகிறது. இதனால், கூட்டணி அமைப்பில் ஏற்பட்டிருந்த முக்கியமான இழுபறி நிலை இன்று முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
-
"தூக்க முடியல.. டிராலியில் வந்த புகார்கள்!" ஸ்டாலினிடம் அறிக்கையை ஒப்படைத்த திமுக கள ஆய்வுக்குழு! -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications