Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Election Exclusive: பக்காவாக டீலை முடித்த எஸ்பி வேலுமணி.. பலமாகும் அதிமுக கூட்டணி.! கைகோர்க்கும் தேமுதிக! டீலிங் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் பரபரப்பாக இருக்கும் நிலையில், தேசிய முற்போக்கு திராவிட கழகம் எந்த கூட்டணியில் சேரும் என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. கோவையில் நடந்த மகா சிவராத்திரி விழாவில் எஸ்.பி.வேலுமணி மற்றும் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில், 8 தொகுதிகள், ராஜ்சபா சீட் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் விரைவில் தேமுதிக அதிமுக கூட்டணியில் சேரலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் சூழல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. முக்கிய கட்சிகள் தங்களது கூட்டணி அமைப்பை உறுதி செய்ய முயற்சி செய்து வருகின்றன. அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் ஆகியவை கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக அணியில் இருந்த தேமுதிக, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து இதுவரை எந்தத் தெளிவான அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால், அந்தக் கட்சி எந்த கூட்டணியைத் தேர்வு செய்யும் என்ற விவாதம் அரசியல் வட்டாரங்களில் தொடர்கிறது.

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 DMDK

தேமுதிக அதிமுக கூட்டணி

தேமுதிக தொண்டர்கள் மற்றும் மக்கள் விரும்பும் கூட்டணியில் தான் கட்சி இடம் பெறும் எனப் பொதுவாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அதிகாரபூர்வ முடிவு வெளியாகவில்லை. தேமுதிகவை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைக்க பல்வேறு முயற்சிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில வாரங்களுக்கு முன்பு நடந்த பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் பிரேமலதா ஒரே மேடையில் இருப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அது நிகழவில்லை.

தேசிய ஜனநாயக கூட்டணி

இந்நிலையில், மார்ச் 1-ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்திற்கு முன்பாக கூட்டணி அமைப்பை முடிக்க முயற்சிகள் வேகமடைந்துள்ளன. இதற்கிடையில் கோவையில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈஷா யோகா மையம் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். அதே விழாவில் பிரேமலதா விஜயகாந்தும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு

விழா நிகழ்ச்சியின் போது முன்வரிசையில் எஸ்.பி.வேலுமணி மற்றும் பிரேமலதா அருகருகே அமர்ந்திருந்தனர். முக்கிய விருந்தினர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வின் போது, பிரேமலதாவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குருவிடம் எஸ்.பி.வேலுமணி அறிமுகம் செய்து வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. நிகழ்ச்சி நடைபெறும் போது இருவரும் உரையாடியதாகவும் கூறப்படுகிறது.

எஸ் பி வேலுமணி பேச்சுவார்த்தை

இந்த சந்திப்பில் கூட்டணி தொடர்பான கருத்துகள் பரிமாறப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டாலும், இதுகுறித்து எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை. இருந்தாலும், இந்த சந்திப்பு தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இடம் பெறும் வாய்ப்பை மீண்டும் உறுதி செய்துள்ளது. விழாவிற்கு பிறகும் பிரேமலதா கோவையில் தங்கியிருந்து கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளின் மாவட்ட நிர்வாகிகளையும் அவர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக தேமுதிக கூட்டணி

தேர்தலை முன்னிட்டு கட்சியின் நிலைப்பாட்டை உறுதி செய்ய இந்த ஆலோசனைகள் நடைபெற்றன. மகா சிவராத்திரி விழாவில் ஆண்டுதோறும் எஸ்.பி.வேலுமணி பங்கேற்பது வழக்கம். ஆனால் பிரேமலதா விஜயகாந்த் குடும்பத்தினருடன் இந்த விழாவில் பங்கேற்றது முதல்முறையாகும். இந்த சந்திப்பு இயல்பானதாக இருந்ததாகவும், இதை அரசியல் நிகழ்வாக பார்க்க வேண்டாம் என்றும் தேமுதிக தரப்பினர் கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+