Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Election Exclusive: இடியை இறக்கிய திமுக..கலைஞர் சென்டிமென்டை ஃபாலோ செய்த ஸ்டாலின்! காங்., கட்சிக்கு காத்திருக்கும் ஷாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தையில் முதலில் அழைக்கப்பட்ட கட்சியாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கலந்து கொண்டது கவனிக்கத்தக்கதாக பார்க்கப்படுகிறது. கருணாநிதி காலத்தில் இருந்து வந்த மரபின்படி முஸ்லீம் சமூகத்திற்கு மரியாதை அளிக்கும் வகையில் இந்த பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அதே நேரத்தில் தொகுதிகளை விட்டுக் கொடுக்க வேண்டுமென முஸ்லீம் லீக் மூலம் பிற கூட்டணிக் கட்சிகளுக்கு மறைமுக மெசேஜ் விடுத்துள்ளது திமுக தலைமை என்கின்றனர் திமுகவினர்.

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. ஏற்கனவே திமுக சார்பில் தொகுதி பங்கீடுக்கான பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்ட நிலையில், கலைஞர் காலத்தில் மரபின்படி முஸ்லிம் லீக் இடம் முதல் கட்சியாக பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது திமுக.

ஏற்கனவே கொடுத்த தொகுதிகளை விட இந்த முறை ஒரு தொகுதி குறைத்துக் கொடுக்கப்படும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், தாங்கள் ஒரு சீட்டை விட்டுக் கொடுத்தது போல், பிற கட்சிகளும் விட்டுக் கொடுக்க வேண்டும் என கூறி இருக்கிறார் காதர் மொய்தீன்.

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 DMK

திமுக தொகுதி பங்கீடு

பேச்சுவார்த்தைக்கு பின் ஐயூஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் ஊடகங்களிடம் பேசியபோது, தங்களது கட்சி ஐந்து தொகுதிகள் கேட்டுள்ளதாகவும், குறைந்தது நான்கு தொகுதிகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பதாகவும் தெரிவித்தார். அதே நேரத்தில் கூட்டணியில் புதிய கட்சிகள் இணையும் வாய்ப்பு இருப்பதால், தற்போதுள்ள கட்சிகள் தொகுதி எண்ணிக்கையை சற்று குறைத்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை திமுக முன்வைத்துள்ளதாகவும் அவர் கூறினார். இது ஐயூஎம்எல் மட்டும் அல்லாமல் அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் வழங்கப்பட்ட அரசியல் சிக்னலாகப் பார்க்கப்படுகிறது.

ஐயூஎம்எல் பேச்சுவார்த்தை

திமுக தரப்பின் முக்கிய நோக்கம் குறைந்தது 170 தொகுதிகளில் 'உதய சூரியன்' சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதாக கூறப்படுகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் 188 தொகுதிகளில் திமுக சின்னம் போட்டியிட்டது. அதே நிலையை அதிக அளவில் தொடர வேண்டும் என்ற கணக்கில், கூட்டணி கட்சிகளுக்குள் தொகுதிகளை மறுவினியோகம் செய்யும் திட்டம் பேசப்படுகிறது.

திமுக கூட்டணி கட்சிகள்

இந்த மறுவினியோகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகளுக்கு முந்தைய தேர்தலை விட கூடுதல் தொகுதிகள் வழங்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சுமார் எட்டு தொகுதிகள் பெறும் கணக்கும் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கில் முக்கிய கவனம் பெறுவது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடாகும்.

காங்கிரஸ் எதிர்பார்ப்பு

காங்கிரஸ் தரப்பு 35 முதல் 40 தொகுதிகள் வரை எதிர்பார்க்கிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் திமுக தரப்பில் கூடுதலாக இரண்டு தொகுதிகள் மட்டும் வழங்கி மொத்தம் சுமார் 27 தொகுதிகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் எதிர்பார்ப்புக்கும் திமுக முன்மொழிவுக்கும் இடையில் வேறுபாடு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. கூட்டணி கட்சிகள் ஆட்சியில் பங்கு குறித்து கருத்து வெளியிட்டு வரும் நிலையில், அதனை சமநிலைப்படுத்த தேர்தலுக்குப் பிறகு மாநில வாரியத் தலைவர் பதவிகளை ஒதுக்கும் வாய்ப்பு குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

2026 சட்டசபை தேர்தல்

2021 தேர்தலுக்கு பிறகு முழுமையாக நிரப்பப்படாத சில வாரியப் பதவிகள் 2026 தேர்தலுக்கு பின்னர் நிரப்பப்படலாம் என கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையை டி.ஆர். பாலு தலைமையிலான குழு நடத்தி வருகிறது. ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கைக்கு மாற்றாக பதவி ஒதுக்கீடு மூலம் கூட்டணி சமநிலையைப் பேணுவது திமுக தரப்பின் அரசியல் யோசனையாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன் அதிகாரப் பங்கீடு நடைமுறை தமிழ்நாட்டில் இல்லை என்று மு.க. ஸ்டாலின் தெளிவுபடுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிக தொகுதிகளில் திமுக

மொத்தத்தில், திமுக அதிக தொகுதிகளை தக்கவைத்து போட்டியிடும் நோக்கத்துடன் கூட்டணி கட்சிகளுக்கு கட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடங்களை ஒதுக்க முயற்சி செய்கிறது. கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் தங்களது அரசியல் வலிமையைப் பொருத்த அளவீட்டை எதிர்பார்க்கும் நிலையில், இறுதி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளின் முடிவை அனைவரும் கவனித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+