Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்!
சென்னை: 2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுகவில் தலைமையிலான 'என்.டி.ஏ' கூட்டணியில் தொகுதி பங்கீடு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், அதிமுக நேரடியாக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை தொகுதிகளைத் தவிர்த்து பெரும்பாலான தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.
இந்த முறை தொகுதி ஒதுக்கீட்டில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மிகவும் கவனமாக செயல்பட்டுள்ளார் என்ற கருத்து கட்சி வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது. இதற்கு சில காரணங்களை அதிமுகவினரே அடுக்குகின்றனர்.
குறிப்பாக பலவீனமான அல்லது அதிமுகவுக்கு சவாலான தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி, அதிமுக வலுவாக உள்ள பகுதிகளில் நேரடியாக போட்டியிடும் வகையில் திட்டமிட்டுள்ளதாக அடித்துச் சொல்கின்றனர் அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள்.

2021 சட்டமன்ற தேர்தல்
குறிப்பாக கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி ஓரளவு செல்வாக்கு பெற காரணமாக கொங்கு மண்டலம் மற்றும் சேலம், தருமபுரி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் தொகுதி பங்கீட்டில் எடப்பாடி பழனிசாமி மிகுந்த கவனத்துடன் செயல்பட்டுள்ளதாகச் சொல்கின்றனர்.
2026 சட்டசபை தேர்தல்
குறிப்பாக எடப்பாடியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தை எடுத்துக் கொண்டால், அங்கு மொத்தம் 11 தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் அதிமுக 9 தொகுதிகளிலும், கூட்டணி கட்சியான பாமக 2 தொகுதிகளிலும் போட்டியிட்டது. அப்போது சேலம் வடக்கு தொகுதியை மட்டும் திமுக கைப்பற்றியது. தற்போது அந்த சேலம் வடக்கு தொகுதியில் அமைச்சர் போட்டியிடும் சூழல் இருப்பதால், நேரடியாக கடும் போட்டியை எதிர்கொள்வதை தவிர்க்கும் வகையில், அந்தத் தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கி, அதிமுக வேறு தொகுதிகளில் கவனம் செலுத்தும் வகையில் திட்டமிட்டுள்ளார் இபிஎஸ்.
அதிமுக வியூகம்
அதே நேரத்தில், கடந்த முறை பாமக வென்ற மேட்டூர் தொகுதியை அதிமுக மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இதேபோல், தருமபுரி மாவட்டத்தில் உள்ள சில முக்கிய தொகுதிகளும் மீண்டும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பென்னாகரம் போன்ற தொகுதிகளில் உட்கட்சி மோதல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், அந்தத் தொகுதியில் அதிமுக நேரடியாக களம் காணாமல் இருக்க முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டணி கட்சிகள்
கொங்கு மண்டலத்திலும் இதேபோன்ற தந்திரம் தான் பின்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள தொகுதிகளில், கடந்த முறை கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்ற சில இடங்களை மாற்றி அமைத்து, அதிமுக தனது வலுவான நிலையை மேலும் வலுப்படுத்த முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கோவை தெற்கு தொகுதியை மீண்டும் அதிமுக வசம் மாற்றியிருப்பது முக்கியமான அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.
தொகுதி ஒதுக்கீடு தந்திரம்
ஈரோடு மாவட்டத்திலும் அதிமுக அதேபோன்ற அணுகுமுறையை பின்பற்றியுள்ளது. அமைச்சர்கள் போட்டியிடும் சில தொகுதிகளில் நேரடி போட்டியை தவிர்த்து, அந்த தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி மற்ற பகுதிகளில் அதிமுக வலுவாக செயல்படும் வகையில் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி தொகுதியையும் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கியிருப்பது இந்த தந்திரத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.
தேர்தல் முடிவுகள்
நாமக்கல் மாவட்டத்திலும் அமைச்சர் போட்டியிடும் தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கடும் போட்டி ஏற்படும் இடங்களில் கூட்டணி கட்சிகளை நிற்க வைத்து, அதிமுக தனது பலம் அதிகமாக உள்ள தொகுதிகளில் முழு கவனம் செலுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இது நிச்சயம் தேர்தல் முடிவுகளில் கை கொடுக்கும் என்கின்றனர் அதிமுகவினர்
தென் மாவட்ட அரசியல்
அதே நேரத்தில், தென் மாவட்டங்களில் அரசியல் சூழ்நிலை சற்றே மாறுபட்டிருப்பதால், அங்கு கூட்டணி கட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக பாஜக மற்றும் அமமுக, தமமுக, தமாகா போன்ற கட்சிகளுக்கு சில முக்கிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த முறை தொகுதி ஒதுக்கீட்டில் எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள முடிவுகள் அரசியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளாக பார்க்கப்படுகின்றன. ஆனால், அது தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்குமா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.!.
-
திமுக கூட்டணியில் தொகுதி லிஸ்ட்: வேட்பாளர் பட்டியல் இன்னும் வராதது ஏன்? பின்னணியில் 3 முக்கிய காரணம் -
விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! திமுகதான் காரணமா? பெரம்பூர் தொகுதி தேர்தல் அலுவலர் விளக்கம் -
அதிமுக கூட்டணியில் அமமுக போட்டியிடும் 11 தொகுதிகள் லிஸ்ட்.. இன்று அறிவிக்கும் டிடிவி தினகரன்! -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை














Click it and Unblock the Notifications