Election Exclusive: அய்யா பாமக இல்லா.. சுசிலா பாமக? கட்சியை ஆரம்பிச்சது 2வது மனைவியா? ப்ளான் போட்டுக் கொடுத்தது திமுக?
சென்னை: அன்புமணிக்கு தான் பாமக, சின்னம், கட்சி, கொடி என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், டாக்டர் ராமதாஸின் ஆதரவாளர்கள் அய்யா பாமக என்ற கட்சியை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளனர். இந்நிலையில், அய்யா பாட்டாளி மக்கள் கட்சி என்ற கட்சியை உருவாக்கி இருப்பவர்கள் ராமதாஸின் தீவிர ஆதரவாளர்களான அன்பழகன் மகன் முகிலனும், பரந்தாமனின் மகன் மாத்தையாவும் என்கின்றனர் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் திமுகவின் தூண்டுதலின் பேரில் ராமதாசின் இரண்டாவது மனைவி என சொல்லப்படும் சுசிலா தான் இந்த கட்சியை தொடங்கி இருப்பதாக விமர்சித்து வருகின்றனர்.
தமிழக அரசியலில் பல மாதங்களாக நிலவி வந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியில் மகன் அன்புமணி ராமதாஸ் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு தந்தையும் கட்சியின் நிறுவனருமான ராமதாஸுக்கும் அவருக்கும் இடையே மோதல் வெடித்தது.
2024 மக்களவை தேர்தல் தொடர்பாகத்தான் தந்தை மகன் இடையே பிரச்சனை வெடித்ததாக சொல்லப்பட்டது. ஆனால் அப்போதெல்லாம் அந்த விவகாரம் அமைதியாக தான் இருந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு வெகு பிரம்மாண்டமாக நடைபெற்ற வன்னியர் சங்க மாநாட்டின் போது தான் அன்புமணியை கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக அதிரடி காட்டினார் ராமதாஸ்.

பாமக பிளவு
மேலும் அவரது ஆதரவாளர்களின் பதவியும் பறிக்கப்பட்டதாக அறிவித்தார். ஆனால் கட்சியின் பொதுக்குழுவால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தனக்கு தான் கட்சியில் இருப்பவர்களை நீக்கவும் சேர்க்கவும் அதிகாரம் இருக்கிறது என அன்புமணி கூறினார். இது தொடர்பாக நீதிமன்றம் தேர்தல் ஆணையம் என பல இடங்களில் வழக்கும் நடைபெற்றது. இப்படியாக நிலைமை பரபரப்பாக போய்க்கொண்டிருக்க இரு தரப்பும் செயற்குழுக் கூட்டங்களையும் நடத்தியது. ஒரு வழியாக 2026 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் தேர்தலை முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரம் எடுத்தன.
அன்புமணி ராமதாஸ்
அந்த வகையில் தமிழகத்தில் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்த முயன்ற பாஜக அன்புமணி தரப்பை அணுகியது. 18 முதல் 20 சீட்டுகள் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி என்ற டீல் உடன் என்டிஏ கூட்டணியில் இணைந்தார். இதனால் கடும் கோபமடைந்த ராமதாஸ் தரப்பு அன்புமணி குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்ததோடு, நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தது. இது ஒரு புறம் சென்று கொண்டிருக்க திமுக, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் ராமதாஸ் தரப்பு பேச்சு வார்த்தை நடத்தியது.
திமுக கூட்டணி
திமுக கூட்டணிக்கு ராமதாஸ் வந்தால் நான் வெளியேறி விடுவேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்தார். இதனால் ராமதாஸின் திமுக கூட்டணி கனவு பறிபோனது. தொடர்ந்து விஜய் தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் ராமதாஸின் கடந்த செயல்பாடுகள் காரணமாக விஜய் கூட்டணி வாய்ப்பை நிராகரித்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே வட மாவட்டங்களில் பாமக நிற்கும் தொகுதிகளில் போட்டி வேட்பாளர்களை நிறுத்த ராமதாசுக்கு திமுக ஐடியா கொடுத்ததாகவும், அதற்கு நிதி உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் கிசு கிசுக்கப்பட்டது.
அய்யா பாட்டாளி மக்கள் கட்சி
இந்த நிலையில் அய்யா பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்று தொடங்கப்பட்டு தேர்தல் ஆணையத்தின் பதிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் தலைவராக முகிலன் என்பவரும் பொது செயலாளராக மாத்தையா என்பவரும் இருந்தனர். பாமக கொடியைப் போன்ற அதே வடிவமைப்புடன் நடுவில் ராமராஸின் புகைப்படம் இடம்பெற்று இருப்பது போல அந்த கொடி இருந்தது.

சுசீலா ராமதாஸ்
ராமதாஸின் உத்தரவின் பெயரில் தான் அந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டதாக சொல்கின்றனர். அதைவிட ராமதாஸின் இரண்டாவது மனைவி என சொல்லப்படும் சுசீலாவின் ஏற்பாட்டின் பேரில் தான் கட்சி பதிவுக்கு அனுப்பப்பட்டதாக கூறுகின்றனர். காரணம் ராமதாஸ் கட்சியின் தலைமை நிலைய செயலாளரான அன்பழகன் மகன் தான் முகிலன். மேலும் அவரது தீவிர ஆதரவாளரான பரசுராமனின் மகன் தான் மாத்தையா என்பது குறிப்பிடத்தக்கது.
முகிலன் - மாத்தையா
பாமகவில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு ராமதாஸிடம் செவிலியராக இருந்து பின்பு ரகசியமாக அவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சுசீலா தான் காரணம் என ஆரம்பத்தில் இருந்தே அன்புமணி தரப்பு குற்றம் சாட்டி வந்தது. இந்த நிலையில் தற்போது கட்சியை ஆரம்பித்திருக்கும் முகிலன் - மாத்தையாவின் தந்தையர்கள் ராமதாஸ் சுசீலா தரப்பின் 50வது ஆண்டு திருமண நிகழ்வின்போது ஒன்றாக கலந்து கொண்ட புகைப்படங்களை வன்னியர் சங்கத்தினரும் பாட்டாளி மக்கள் கட்சியினரும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
பாட்டாளி மக்கள் கட்சி
மேலும் அன்புமணி அதிமுக பாஜக கூட்டணியில் சேர்ந்ததால் கோபத்தில் இருக்கும் திமுக தரப்பு, ஜி கே மணி உள்ளிட்டவர்கள் மூலம் சுசிலாவை ராமதாஸ் பெயரில் புதிய கட்சி தொடங்க வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். இப்படியாக அய்யா பாமக தொடர்பாக சமூக வலைதளங்களில் வன்னியர் சங்கம், அய்யா பாட்டாளி மக்கள் கட்சியினர், பாட்டாளி மக்கள் கட்சியினர் இடையே காரசார விவாதம் முளைத்துள்ளது. உண்மையில் தற்போது தொடங்கப்பட்டிருப்பது அய்ய் பாட்டாளி மக்கள் கட்சி அல்ல சுசீலா பாட்டாளி மக்கள் கட்சி என விமர்சித்து வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications