Election Exclusive: கிளம்புங்க காத்து வரட்டும்.. காங்., கனவில் மண்ணை அள்ளிப் போட்ட ஸ்டாலின்! ராகுலுக்கு வருத்தம்பா!
சென்னை: 'புலி வருது புலி வருது' கதையாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு.. இல்லையேல் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி என பேசி வந்த காங்கிரசுக்கு ஒரே வரியில் பதிலடி கொடுத்துள்ளார் திமுக தலைவர் மு க ஸ்டாலின். ஆட்சி அதிகாரத்தில் பங்கெல்லாம் கிடையாது வேண்டுமானால் இரண்டு மூன்று தொகுதிகளை கூடுதலாக தரலாம் என காங்கிரஸ் தரப்புக்கு திமுக தெளிவான மெசேஜ் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் விஜயை காரணம் காட்டி திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை பெறலாம் என திட்டமிட்டிருந்த காங்கிரஸ் ஏமாற்றம் அடைந்துள்ளது. குறிப்பாக ஸ்டாலினின் பேச்சால் ராகுல் காந்தி அதிருப்தியில் இருப்பதாக சொல்கின்றனர்.
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் நாளுக்கு நாள் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் அதிகமாக பேசப்படுகிறது.
அதற்கு காரணம், ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கைக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வரான மு.க.ஸ்டாலின் தெளிவான மறுப்பு தெரிவித்திருப்பது தான். காங்கிரஸ் பலமுறை திமுக தலைமையை சீண்டிய நிலையில், அமைச்சர்கள் மட்டுமே பதிலடி கொடுத்து வந்தனர். தற்போது தான் முதல்வரே உடைத்துப் பேசியுள்ளதும் கவனிக்கத்தக்கது.

2026 சட்டசபை தேர்தல்
கூட்டணியில் உள்ள பிரதான தேசியக் கட்சியாக இருக்கும் காங்கிரஸ், இந்த முறை வெறும் தொகுதி பங்கீட்டில் மட்டும் திருப்தி அடையாமல், ஆட்சி அதிகாரத்திலும் தங்களுக்கு உரிய பங்கு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில மாதங்களாக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் இதுகுறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்தனர். கூடுதல் தொகுதிகள் மட்டுமல்ல, அமைச்சரவை மட்டத்திலும் இடம் உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆட்சி பங்கீடு சர்ச்சை
அதே நேரத்தில், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது வழக்கமாக இல்லாத நடைமுறை என்று திமுக தரப்பில் இருந்து வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து திமுக தலைமை ஆரம்பத்தில் அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தது. ஆனால் பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாகவே இந்த விவகாரத்தூக்கு முற்றுப்புள்ளி வைத்தார். "தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது வழக்கத்தில் இல்லை. அது சரியான நடைமுறை அல்ல. இதை நாங்களும் புரிந்துள்ளோம், அவர்களும் புரிந்துள்ளனர். சிலர் தேவையில்லாத குழப்பத்தை உருவாக்குகிறார்கள்" என்று அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகின.
ஸ்டாலின் பதிலடி
முதன்முறையாகவும், வெளிப்படையாகவும் மு.க.ஸ்டாலின் இந்த கருத்தை வெளியிட்டதன் மூலம், ஆட்சியில் பங்கு வழங்குவது குறித்து எந்த வாய்ப்பும் இல்லை என்பதைக் திமுக தெளிவாகச் சொன்னதாக அரசியல் விமர்சகர்கள் பார்க்கிறார்கள். வேண்டுமென்றால் கடந்த முறை வழங்கியதை விட இரண்டு அல்லது மூன்று தொகுதிகள் கூடுதலாக வழங்கலாம், ஆனால் அதிகாரப் பங்கீடு குறித்து பேச முடியாது என்ற நிலைப்பாடு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக காங்கிரஸ்
இதற்கிடையில், காங்கிரஸ் உயர்மட்டத் தலைமையும் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராகுல் காந்தி தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை டெல்லியில் இரண்டு முறை அழைத்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது சிலர் திமுகவிடம் ஆட்சி அதிகாரம் கோரிக்கையை வலியுறுத்த வேண்டும், அது சாத்தியமாகவில்லை என்றால் மாற்று கூட்டணிகளை ஆராய வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ராகுல் காந்தி அதிருப்தி
குறிப்பாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உருவானது காங்கிரசுக்கு ஒரு மாற்று வாய்ப்பாக பார்க்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், திமுக தலைவர் நேரடியாக மறுப்பு தெரிவித்திருப்பது காங்கிரஸ் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ராகுல் காந்தி இந்த முடிவால் வருத்தமடைந்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக கூட்டணி
இருப்பினும், அதிமுக-பாஜக அணியில் மாற்று வாய்ப்பு இல்லாத சூழலில், திமுக கூட்டணியை விட்டு வெளியேறுவது காங்கிரசுக்கு எளிதான முடிவாக இருக்காது என்பதும் அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது. இதனால், தற்போதைய சூழலில் வார்த்தை மோதல்கள் இருந்தாலும் கூட்டணி முறியும் அளவிற்கு நிலைமை செல்லுமா? இல்லை சமரசம் மூலம் கூட்டணி தொடருமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் தொடங்கிய பிறகே இறுதி நிலை வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தமிழக அரசியலில் அடுத்த சில வாரங்கள் மிக முக்கியமானதாக இருக்கப் போகின்றன என்பது மட்டும் உறுதியாகிறது.
-
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
சட்டமன்ற தேர்தலில் மநீம போட்டியில்லை.. திமுகவுக்கு நிபந்தனையின்றி ஆதரவு! கமல்ஹாசன் அறிவிப்பு -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
திமுக - சிபிஎம் இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தானது.. 5 இடங்கள் ஒதுக்கீடு! முடிவுக்கு வந்தது நீண்ட இழுபறி -
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை?












Click it and Unblock the Notifications