Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Election Exclusive: திமுகவுக்கு ஓகே சொன்ன ஓபிஎஸ்! ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்! தேனியை பரபரப்பாக்கிய தகவல்! அடுத்து என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு அடுத்து தமிழகத்தில் முதலமைச்சராக பதவியேற்ற அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும் பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் தற்போது அரசியல் அடையாளம் இன்றி தவிர்த்து வருகிறார். ஆதரவாளர்களில் பெரும்பாலானோர் திமுகவுக்கு தாவி விட்ட நிலையில் என்ன முடிவெடுப்பது என தெரியாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகாரப் போராட்டத்தின் போது, சசிகலா தரப்பின் அழுத்தம் காரணமாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓபிஎஸ், பின்னர் அவருக்கு எதிராக 'தர்மயுத்தம்' என்ற அரசியல் போராட்டத்தை தொடங்கினார்.

அந்த காலகட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் ஆர்.விஸ்வநாதன், பெங்களூரு புகழேந்தி உள்ளிட்ட பலர் ஓபிஎஸ்ஸுக்கு துணைநின்றனர். ஆனால், ஊழல் வழக்கில் சிறை செல்லும் முன் சசிகலா, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக நியமித்து சென்றது, அரசியல் சூழலை முற்றிலும் மாற்றியது.

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 O Panneerselvam

ஓ.பன்னீர்செல்வம்

சசிகலாவின் ஆதரவால் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பழனிசாமி, பின்னர் ஓபிஎஸ்ஸுடன் சமரசம் செய்து, சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து ஒதுக்கியார். இதன் பின்னர், ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராகவும், பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும், அதே நேரத்தில் முதல்வராகவும் இருந்து, இருவரும் இணைந்து அதிமுகவை வழிநடத்தினர். இந்த கூட்டணி சில காலம் வலுவாக செயல்பட்டது. ஆனால், 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு கட்சிக்குள் எழுந்த ஒற்றைத் தலைமை விவகாரம், அதிமுகவில் பெரும் பிளவை ஏற்படுத்தியது.

எடப்பாடி பழனிசாமி

இதன் உச்சமாக, எடப்பாடி பழனிசாமி தரப்பு, ஓபிஎஸ்ஸையும் அவரது ஆதரவாளர்களையும் கட்சியிலிருந்து நீக்கியது. இதையடுத்து, ஓபிஎஸ் மீண்டும் பழனிசாமிக்கு எதிராக இரண்டாவது தர்மயுத்தத்தை அறிவித்தார். அதிமுக பொதுக்குழுவின் மூலம் பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப்பட்ட பழனிசாமி, ஓபிஎஸ்ஸுக்கு இனி அதிமுகவில் இடமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்ததும், ஓபிஎஸ்ஸின் அரசியல் நிலை மேலும் சிக்கலானதாக மாறியது. இதன் காரணமாக, மீண்டும் அதிமுகவிற்குள் நுழைவதற்காக பாஜகவின் ஆதரவை நாடினார் ஓபிஎஸ். பாஜகவும், அவரை பயன்படுத்தி பழனிசாமியை கட்டுப்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது.

பாஜக

ஆனால், அந்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜக நேரடியாக பழனிசாமி தரப்புடன் கூட்டணி ஒப்பந்தத்தை உறுதி செய்தது. ஓபிஎஸ் மற்றும் தினகரனை அதிமுகவில் சேர்க்க பழனிசாமி மறுத்தாலும், பாஜக தனது கோட்டாவில் அவர்களுக்கு தொகுதிகள் ஒதுக்க திட்டமிட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. இறுதியில், தினகரனுக்கு மட்டும் பச்சைக்கொடி காட்டிய பழனிசாமி, ஓபிஎஸ்ஸுக்கு கதவை மூடிவிட்டார்.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

இந்த அரசியல் குழப்பத்துக்கிடையே, ஓபிஎஸ்ஸுடன் இருந்த முக்கிய நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக விலகத் தொடங்கினர். மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், மருது அழகுராஜ் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர். சமீபத்தில், ஓபிஎஸ் மூலம் ராஜ்யசபாவுக்கு அனுப்பப்பட்ட தர்மரும் மீண்டும் அதிமுகவில் இணைந்தது, ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. மேலும் ஓபிஎஸ்-ன் நம்பிக்கை கூறிய ஆலோசகராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரனும் தனிக்கட்சி ஆரம்பித்து விட்டார். மேலும் சில நிர்வாகிகள் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தாவலாம் என சொல்லப்படுகிறது.

திமுக கூட்டணியில் ஓபிஎஸ்

இதை அடுத்து அரசியலில் அடுத்து என்ன செய்வது என்ற முடிவை எடுக்க முடியாமல் திணறி வருகிறார் ஓ பன்னீர்செல்வம் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். இந்த நிலையில் பாஜகவுடன் பேசிப் பார்த்தும் பலன் கிடைக்காத நிலையில் விஜயுடன் கூட்டணி அமைக்கலாமா என திட்டமிட்டு வந்த ஓபிஎஸ் திடீரென தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனோஜ் பாண்டியன் மூலம் திமுகவில் இணைய பேச்சுவார்த்தை நடந்ததாக சொல்லப்பட்ட நிலையில், ஓ பன்னீர்செல்வம் திமுகவில் இணைய மாட்டார் தனித்தே செயல்படுவார். அதே நேரத்தில் வெளியிலிருந்து திமுகவுக்கு ஆதரவு தந்தால் ஆச்சரியம் இல்லை. ஆனால் திமுகவில் இணையும் முடிவை ஓபிஎஸ் எடுக்க மாட்டார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+