Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Election Exclusive: உதயநிதிக்கு ரைட் ஹேண்ட்.. மகனுக்காக மாஸ் பதவியை தட்டித் தூக்கிய ஓபிஎஸ்? அறிவாலயத்தில் பரபர டிஸ்கஷன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசியலில் திடீர் திருப்பமாக தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக இருந்த ஓ பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்திருக்கிறார் அவருக்கு துணை பொது செயலாளர் பதவியும் திமுக ஆட்சி அமைத்தால் சபாநாயகர் அல்லது துணை சபாநாயகர் பதவி வழங்கப்படலாம் என தேனி வட்டாரத்தினர் சொல்லி வருகின்றனர் இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வத்துடன் அவரது மகனும் முன்னாள் எம்பியுமான ஓபி ரவீந்திரநாத் திமுகவில் இணைந்திருக்கும் நிலையில் அவருக்கு என்ன பொறுப்பு வழங்கப்பட இருக்கிறது என்பது குறித்தான தகவல்கள் வெளியாகி உள்ளது இளைஞர் அணி துணை செயலாளர் பதவி ரவீந்திரநாத்துக்கு வழங்கப்படலாம் என சொல்கின்றனர் அறிவாலய வட்டாரத்தினர்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மூன்று முறை முதலமைச்சராக பதவி வகித்தவர் ஓ.பன்னீர்செல்வம். பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் பின்னணியில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு தனித்த அணியாக செயல்பட்டு வந்தார்.

மீண்டும் அ.தி.மு.க.வில் இணைவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கட்சித் தலைமையான எடப்பாடி பழனிசாமி அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.. அரசியல் சூழலில் ஏற்பட்ட மாற்றங்களின் பின்னணியில், ஓ பன்னீர்செல்வத்தின் அணியில் இருந்த சில முக்கிய ஆதரவாளர்கள் திமுகவில் இணைந்தனர்.

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 O Panneerselvam OP Ravindranath Kumar

ஓபிஎஸ் திமுக இணைவு

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கட்சியில் சேர்ந்த நிலையில், ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. அய்யப்பன் தனித்து செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில்தான் அவர் திமுகவில் இணையும் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அவர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தது அரசியல் கவனத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து அவர் கட்சியில் இணைவார் என்ற பேச்சு அதிகரித்தது.

அதிமுக திமுக

இதற்கிடையில், சட்டசபையில் அவரது ஆதரவாளர் ஐயப்பனால் கூறப்பட்ட கருத்துகளும் அவரது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாக அரசியல் வட்டாரங்கள் உறுதி செய்தன. இந்நிலையில், சென்னையில் நட்சத்திட ஓட்டலில் நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு, அமைச்சர் சேகர்பாபுவுடன் அறிவாலயம் சென்ற ஓ.பன்னீர்செல்வம், அங்கு திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு திமுகவில் இணைந்தார்.

ஓபி ரவீந்திரநாத்

கருப்பு-சிவப்பு கட்சி துண்டு அணிவிக்கப்பட்டு அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதே நிகழ்வில் ஓ பன்னீர்செல்வத்துடன் அவரது மகனும் முன்னாள் எம்பியுமான ஓபி ரவீந்திரநாத் குமாரும் திமுக உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டார். அரசியல் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களை கடந்த ஓ.பன்னீர்செல்வம், நீண்டகாலம் எதிராக இருந்த திமுகவில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

ஓபிஎஸ்க்கு என்ன பதவி?

இந்த நிலையில் திமுகவில் இணைந்துள்ள ஓ பன்னீர்செல்வத்துக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த சேகர்பாபு, செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலர் தற்போது திமுகவில் முக்கிய அமைச்சர்களாக இருக்கின்றனர். அந்த வகையில் ஓ பன்னீர் செல்வத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கட்சி பொறுப்பாக துணை பொது செயலாளர் பதவி வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது. தேர்தலில் திமுக வென்றால் அமைச்சர் பதவி அல்லது சபாநாயகர் பதவி துணை சபாநாயகர் பதவி ஓ பன்னீர் செல்வத்திற்கு வழங்கப்படலாம் என சொல்கின்றனர்.

ஓபி ரவீந்திரநாத் பொறுப்பு

இந்த நிலையில் ஓ பன்னீர் செல்வத்துடன் கட்சியில் இணைந்திருக்கும் அவரது மகனும் முன்னாள் எம்பியுமான ஓபி ரவீந்திரநாத்துக்கு என்ன பதவி வழங்கப்படும் என்பது குறித்த சில தகவல்கள் கசிந்து இருக்கிறது. தற்போது ஓ பன்னீர்செல்வம் இருக்கும் கோடி தொகுதிக்குட்பட்ட திமுக மாவட்ட செயலாளராக ஓபி ரவீந்திரநாத் குமார் நியமிக்கப்படலாம் என சொல்கின்றனர்.

திமுக இளைஞரணி பதவி

இல்லையே மாநில பொறுப்பு வழங்கும் வகையில் திமுக இளைஞரணி துணை செயலாளர் அல்லது துணை தலைவர் பதவி வழங்கப்படலாம் என்கின்றனர் தேனி வட்டாரத்தினர். இதற்கு இடையே தேனியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு அறிவாலய கதவை தட்டி இருக்கிறார் ரவீந்திரநாத் எனவும் சொல்கின்றனர். ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை. திரை மறைவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில் புதிய பொறுப்புகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்படலாம் என்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+