Election Exclusive: தொகுதி மாறும் வேல்முருகன்.. பண்ருட்டி தொகுதிக்கு பதிலாக நெய்வேலியில் போட்டி!
சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இம்முறை தொகுதி மாறுவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பண்ருட்டி தொகுதியில் இருந்து மாறிவிட்டு, நெய்வேலி தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது. இதுதொடர்பாக திமுக தலைமை பாசிட்டிவ் சிக்னல் கொடுத்துவிட்டதாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை பிப்ரவரி 22ஆம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தரப்பில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக் குழு அமைக்க நெருக்கடி கொடுக்கப்பட்டு வந்தது. இப்படியான சூழலில் பிப்ரவரி 22ல் கூட்டணி கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தும் என்று அறிவித்திருக்கிறது.

திமுக பேச்சுவார்த்தை
இந்த குழுவில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பது தொடர்பாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஏற்கனவே திமுக தரப்பில் சில சீனியர் அமைச்சர்கள் மூலமாக கூட்டணி பேச்சுவார்த்தையை திமுக நடத்தி வருகிறது. சீனியர்களான கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்டோர் மூலமாக இந்த பணிகளை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.
சிறிய கட்சிகள்
கடந்த முறையை காட்டிலும் அதிகளவில் யாருக்கும் தொகுதிகள் ஒதுக்க முடியாது என்பதில் முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக இருக்கிறார். ஏற்கனவே சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மறுபக்கம் விசிகவுடன் எவ வேலு பேசி வருகிறார். அதேபோல் முஸ்லீம் லீக், மமக, கொமதேக ஆகிய கட்சிகளுக்கு 2 தொகுதிகள் வரை ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
வேல்முருகனுடன் பேச்சுவார்த்தை
இதனிடையே கருணாஸ், தமீமுன் அன்சாரி உள்ளிட்டோரில் 2 பேருக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது, இதில் பெரும்பாலானோர் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வாய்ப்புகள் உள்ளது. இதனிடையே தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகனுக்கும் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
தொகுதி மாறும் வேல்முருகன்
கடந்த முறை வேல்முருகன் பண்ருட்டி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டசபையில் சபாநாயகர் முன் ஒருமுறை கோஷம் எழுப்பியதால், ஸ்டாலினின் கண்டனத்திற்கும் ஆளானார். இதனால் மீண்டும் ஒரு தொகுதி மட்டுமே தவாகவுக்கு ஒதுக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக வேல்முருகனுடன் திமுக சீனியர்கள் சில பேசி இருக்கின்றனர்.
எந்த தொகுதி?
அப்போது தொகுதி மாறப் போகும் விருப்பத்தை வேல்முருகன் வெளிப்படுத்தி இருக்கிறார். கடந்த முறை போட்டியிட்ட பண்ருட்டி தொகுதிக்கு பதிலாக நெய்வேலி தொகுதியில் போட்டியிட விரும்பி இருக்கிறார். இதற்கு திமுக தலைமையும் பாசிட்டிவ் சிக்னல் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் 1 அல்லது 2 தொகுதிகள் ஒதுக்கப்படும் கட்சிகளுடன் முதற்கட்டமாக பேச்சுவார்த்தை ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று பார்க்கப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications