Election Exclusive: திமுக கோட்டையில் ஓட்டை! ஸ்டார் தொகுதியான பெரம்பூர்! டேட்டாவால் விஜய் குஷி.. டிக் அடித்தது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார். தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விருப்பமனு பெறப்பட்டு வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணி மறைமுகமாக நடைபெற்று வரும் நிலையில் விஜய் எங்கு போட்டியிடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. விருகம்பாக்கம் உள்ளிட்ட தொகுதிகள் விஜயின் விருப்ப பட்டியலில் இருந்த நிலையில், பெரம்பூரில் விஜய் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. இந்நிலையில் அந்த விஜய் தேர்வு செய்ய என்ன காரணம்? என சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளனர் தவெகவினர்.

இதுவரை இல்லாத அளவு 2026 சட்டமன்றத் தேர்தல் ஆளும் ஆண்ட கட்சிகளுக்கு சவால் அளிக்க கூடியதாக இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். மிகப்பெரிய கூட்டணி பலத்தோடு இருக்கும் திமுக இந்த முறை அதே கூட்டணி பலத்துடன் தேர்தலை சந்திக்கிறது.

மற்றொருபுறம் பாஜக, பாமக, தமாக உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொண்டு தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முன்னாள் முதலவருமான எடப்பாடி பழனிசாமி.

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 tvk vijay

2026 சட்டமன்ற தேர்தல்

களத்தில் நானும் இருக்கிறேன் என 234 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்து தானும் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான். இதுவரையிலான தமிழக சட்டமன்ற தேர்தல்களில் 3 -4 முனை போட்டிகள் இருந்திருக்கிறது. அது பெரும்பாலும் ஆளுங்கட்சிக்கோ அல்லது ஆண்ட கட்சிக்கோ எதிராகத்தான் அமையும். அப்படித்தான் இந்த தேர்தலில் வாக்குகளை உடைக்க வருகை தருகிறார் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்.

தவெக விஜய்

கேரியரின் உச்சத்தில் இருந்து அரசியலுக்கு வருகிறேன் என கூறிவிட்டு மாநாடு பொதுக்கூட்டம் என பிரம்மாண்டம் காட்டி வரும் விஜய் 2026 தேர்தலில் போட்டியிடுவார் என கூறுகின்றனர். அந்த கட்சியினர் காங்கிரஸ் உடன் கூட்டணி, ராமதாசுடன் கூட்டணி என பல்வேறு யூகங்கள் இறக்கை கட்டி பறந்தாலும், இதுவரை தமிழக வெற்றி கழகம் கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனாலும் சில கட்சிகள் கூட்டணிக்கு தயாராக இருக்கிறது என தமிழக வெற்றிக் கழகம் சொல்லி வருகிறது.

எங்கு போட்டி?

இது ஒரு புறம் இருக்க தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விருப்ப மனு விநியோகம் நடைபெற்று வருகிறது. ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்டோர் விருப்ப மனுக்களை வாங்கியும் ஆன்லைனில் டவுன்லோட் செய்தும் நிரப்பினர். ஆனால் அவற்றில் 10 சதவீதம் கூட டெபாசிட் உடன் தலைமைக்கு வரவில்லை என சொல்லப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க செங்கோட்டையன் உள்ளிட்டோர் தங்கள் பகுதிகளில் தேர்தல் பணிகளை துவக்கி விட்டனர்.

விஜய் பெரம்பூர் தொகுதி

கட்சியின் தலைவர் இந்த நிலையில் தான் தற்போது தமிழக அரசியல் வட்டாரங்களை விஜய் எங்கு போட்டியிடப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. வழக்கம்போல் 'வி' சென்டிமென்ட் காரணமாக அந்த எழுத்தில் தொடங்கும் தொகுதிகளில் சொல்லப்படுகிறது. விருகம்பாக்கம், விழுப்புரம், விருத்தாச்சலம் உள்ளிட்ட தொகுதிகள் விஜயின் விருப்ப பட்டியலில் இருந்தன. ஆனால் இறுதியில் விஜய் பெரம்பூர் தொகுதிஐயே தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பெரம்பூரில் விஜய் போட்டி

கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை வியாசர்பாடியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட வேண்டும் என்ற தீர்மானம் முன்வைக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட அந்த கூட்டத்தில் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய் பெரம்பூரை தேர்வு செய்ததற்கான காரணங்களும் கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தவெக சர்வே முடிவு

அந்த தொகுதியில் உழைக்கும் மக்கள் அதிகம் இருப்பதும், அடித்தட்டு மக்களின் ஆதரவு கிடைக்கும் வாய்ப்பு இருப்பதும் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. கட்சியினர் மேற்கொண்ட சர்வே முடிவுகளும் இதையே காட்டியதாக தகவல் தெரிவிக்கிறது. மேலும் தனது அரசியல் பயணத்தை சென்னையின் முக்கியப் பகுதியில் இருந்து தொடங்க வேண்டும் என்ற எண்ணமும் இந்தத் தீர்மானத்திற்கு காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.

பெரம்பூரில் விஜய்

பெரம்பூரில் விஜய் போட்டியிட்டால் அது ஆளும் கட்சிக்கு சவாலாக அமையலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் மதிப்பீடு செய்யப்படுகிறது. சென்னை திமுக வலுவான பகுதியாக கருதப்படும் நிலையில், அங்கு போட்டியிடுவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த முடிவாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் விஜய் எடுத்துள்ள ஒவ்வொரு அரசியல் நகர்வும் கவனிக்கப்படுகிறது. பெரம்பூரில் அவரது போட்டி உறுதியாகும் பட்சத்தில், அந்த தொகுதியில் தேர்தல் நடவடிக்கைகள் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+