Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு?
சென்னை: 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக கவல்கள் வெளியாகியுள்ளன. பிரச்சாரத்துக்கு செல்லும் இடமெல்லாம் சிக்கல் வருகிறது. கொளத்தூர், பெரம்பூர் என சென்னையில் முழுமையாக பிரச்சாரம் செய்ய முடியாததால், இனிமேல் வீடியோபிரச்சாரத்தை செய்யலாமா என திட்டம் உள்ளதாம், இது தொடர்பாக முக்கிய நிர்வாகிகளிடம் பேசியுள்ளாராம் விஜய்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. திமு கழகம், அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் ஏற்கனவே தங்களது பிரச்சாரத்தை வேகப்படுத்தியுள்ளன.

இந்த முறை தமிழக வெற்றிக் கழகம் களமிறங்கியுள்ளதால் நான்கு முனைப் போட்டி உருவாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இரு தொகுதிகளில் இந்த தேர்தலில் களமிறங்கிறார் நடிகரும் தவெக தலைவருமான விஜய்.
விஜய்
இந்நிலையில் நேற்று முன்தினம் பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த விஜய், தொடர்ந்து கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால் கொளத்தூர் பகுதியில் அவர் பிரச்சாரம் தொடங்கியபோது எதிர்பார்த்ததை விட அதிக அளவில் மக்கள் திரண்டதால் கூட்டம் கட்டுக்கடங்காத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பிரச்சாரம்
வாகனங்கள் நகர முடியாத சூழல் ஏற்பட்டதால், விஜயால் திட்டமிட்டபடி பிரச்சாரத்தை தொடர முடியாமல் பாதியிலேயே நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் போதிய அளவில் செய்யப்படாததே இந்த சிக்கலுக்கு காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதே போன்ற சிக்கல்கள் மீண்டும் ஏற்படாமல் இருக்க, இனிமேல் வீடியோ வடிவிலான பிரச்சாரத்தை அதிகப்படுத்தும் முடிவை விஜய் எடுக்க உள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வீடியோ பிரச்சாரம்
ஒவ்வொரு தொகுதியிலும் நிலவும் முக்கிய பிரச்சினைகள் குறித்து அவர் பேசும் வகையில் வீடியோக்கள் ஏற்கெனவே தயாராக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோக்களை அந்தந்த தொகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பெரிய திரைகளில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் ஒரே நேரத்தில் பல தொகுதிகளில் தனது கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல முடியும் என்பதால் இந்த திட்டம் பரிசீலனையில் உள்ளது.
கூட்ட நெரிசல்
முக்கியமான மற்றும் அரசியல் ரீதியாக கவனம் பெறும் சில தொகுதிகளுக்கு மட்டும் நேரில் சென்று பிரச்சாரம் செய்யவும், மற்ற தொகுதிகளில் வீடியோ பிரச்சாரத்தை பயன்படுத்தவும் விஜய் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. கொளத்தூர் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் அனுபவம், தவெக தலைவர் விஜயின் தேர்தல் பிரச்சார வியூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
கொளத்தூர்
குறிப்பாக கொளத்தூர் பகுதியில் விஜய் பிரசாதம் மேற்கொண்ட போது பேருந்துகள் விஜயின் வாகனத்துக்கு மிக அருகே வந்தது. இடையில் மிக குறுகிய நெரிசலில் ஏராளமான தவெக தொண்டர்கள் சிக்கிக் கொண்டனர். இதனால் பெரும் விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவானது. தொடர்ந்து பிரச்சாரத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை வருவதால் மாவட்டத்திற்கு ஒரு பிரச்சாரம், அதனை மற்ற சட்டமன்ற தொகுதிகளில் ஒளிபரப்பலாம் எனவும் விஜய் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக சென்னையைச் சேர்ந்த பிரபல நிறுவனத்துடன் பேச்சு நடப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications