சொந்த வீடு கட்டறீங்களா? அடுக்குமாடி குடியிருப்புகளில் இ சார்ஜிங் ஸ்டேஷன் அவசியம்: தமிழக அரசு மாஸ்
சென்னை: தமிழ்நாட்டில் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் மின்சார வாகனங்களுக்காக சார்ஜிங் மையங்கள் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம் என விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.. இந்த அறிவிப்பானது வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கும் விதமாகவும், பெட்ரோல், டீசலுக்குப் பதிலாக பேட்டரியில் ஓடும் வாகனங்கள், சிஎன்ஜி எரிவாயுவில் இயங்கும் வாகனங்களை பயன்படுத்துமாறும் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தியபடியே உள்ளன.. எனவேதான், மின்சார வாகனங்களை வாங்கி பயன்படுத்தும் ஆர்வம் மக்களிடம் பிரபலமாகி வருகிறது.

இ-வாகனங்கள்
உலகம் முழுவதுமே இ வாகனங்கள் அதிகரித்தபடி உள்ளது.. இந்தியாவிலும் மின்சார வாகனங்களின் தேவை பெருகி கொண்டிருக்கிறது.. எப்படியும் வருகிற 2030க்குள் 1 லட்சம் சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கான இலக்கை மத்திய அரசும் நிர்ணயித்திருக்கிறது.
இதில் நம்முடைய தமிழகம் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் முன்னிலையில் உள்ளது.. இதற்காகவே பல நிறுவனங்கள் இ-வாகனங்களை உற்பத்தி செய்ய அதீத ஆர்வத்தை காட்டி வருகின்றன.
ஹைவேஸில் இ சார்ஜிங் பாயிண்ட்
தமிழகத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதை ஊக்குவிக்கும் விதமாக ஹைவேஸ்களில், இ-வாகனங்களுக்கு சார்ஜிங் பாய்ண்ட் அதாவது வாகனங்களை நிறுத்தி சார்ஜ் செய்யும் வசதிகள், 500 இடங்களில் அமைக்க பசுமை எரிசக்தி நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இப்போதுவரை தமிழநாட்டில் சுமார் 1300 EV சார்ஜிங் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதில் கூடுதலாக, 500 புதிய சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் எண்ணமும் உள்ளது..
தமிழகத்தின் முக்கிய நகரங்கள், ஹைவேஸ்களில் அரசு, தனியார் பங்களிப்புடன், "ஹைஸ்பீடு சார்ஜிங்" மையம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளும் துரிதமாக நடந்து வருகின்றன. இதனால் ஹைவேஸ்கள், நகரங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் சார்ஜிங் நிலையங்கள் வந்துவிடும் என்றே கருதப்பட்டு வருகிறது.
ஊட்டியிலும் இ சார்ஜிங் வசதி
அந்த அளவுக்கு தேவைகள் பெருகிவிட்டன.. அவ்வளவு ஏன் சுற்றுலா தலங்களிலும் இ-சார்ஜிங் வசதிகள் எதிர்பார்க்கப்படுகின்றன..
குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் எலக்ட்ரிக் வாகனங்களில் வரக்கூடியவர்கள், தங்களது வாகனங்களை சார்ஜ் செய்ய முடியாமல் அவதிக்கு ஆளாகிறார்கள்.. அதிலும் ஊட்டியில் போதுமான சார்ஜிங் நிலையங்கள் இல்லை என்பதால், சேரிங்கிராஸ், ஹில்பங்க் பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் ரூ.12 லட்சம் மதிப்பில் மின்சார வாகனங்கள் சார்ஜ் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது..
குடியிருப்புகள் - இ-சார்ஜிங்
இந்நிலையில், குடியிருப்பு மற்றும் வணிக இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம் என விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது..
இந்த புதிய விதிகளின்படி, 8 வீடுகளுக்கு மேலான அல்லது 750 சதுர மீட்டருக்கு அதிகமான பரப்பளவில் கட்டப்படும் புதிய குடியிருப்புகளில் மின்சார வாகனங்களுகக்கான சார்ஜிங் வசதி கட்டாயம் ஆக இருக்க வேண்டும்.
50 வீடுகளுக்கும் அதிகமான பெரிய குடியிருப்புகளாக இருந்தால், அங்கே வெளியில் இருந்து வருவோரும் பயன்படுத்தும் வகையில் பொதுவான ரீசார்ஜிங் வசதி ஏற்படுத்துவது கட்டாயமாகும்.
300 சதுர மீட்டர் வணிக வளாகம்
குடியிருப்புகளைத் தொடர்ந்து, வணிக வளாகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிலும் மின் வாகன சார்ஜிங் வசதியை ஏற்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி,
300 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்களில் ரீசார்ஜிங் வசதி ஏற்படுத்துவது கட்டாயம்.
300 சதுர மீட்டருக்கு அதிகமான வணிக வளாகம், தொழில் நிறுவனங்களில் மின்சார வாகனங்களுக்காக குறைந்தது 10 விழுக்காடு பார்க்கிங் வசதி ஒதுக்க வேண்டும் என்றும் விரைவான சார்ஜிங் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்
வாகன ஓட்டிகள்
இந்த விதித்திருத்தங்கள், மாநிலத்தில் மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிப்பதுடன், வாகன ஓட்டிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.
அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் மின்சார வாகனங்களுக்காக சார்ஜிங் மையங்கள் அமைக்க வேண்டும் என்ற அரசின் இந்த அதிரடியானது, மின் வாகனங்களின் விற்பனை மற்றும் பயன்பாட்டை கணிசமாக வருங்காலத்தில் உயர்த்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications