ஆதாரை போலயே வருது.. அதைவிடுங்க, தமிழக மின்சார வாரியத்துக்கு போன மேட்டர்.. திரண்ட யூனியன்.. என்னவாம்
சென்னை: தமிழக மின்வாரியத்துக்கு தொழிற்சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.. அத்துடன், முக்கிய கோரிக்கை ஒன்றையும் கடிதங்கள் மூலமாக விடுத்திருக்கின்றன.. என்ன காரணம்?
தமிழக மின்வாரியத்தை பொறுத்தவரை, பொதுமக்களின் நன்மைக்காக பல்வேறு அதிரடிகளை செய்து வருகிறது.. ஆன்லைனிலும் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. மற்றொருபக்கம், வீடுகளில் மின் கணக்கீடுகளில் முறைகேடு நடப்பதாக புகார்கள் கிளம்பியதையடுத்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tangedco) ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கையிலெடுத்து வருகிறது.
புது அதிரடி: அதேபோல, தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் மின் இணைப்புகளில் செல்போன் செயலி மூலம் மின் பயன்பாட்டைக் கணக்கெடுக்க மின் வாரியம் உத்தரவிட்டிருந்தது... நேற்றுகூட, ஒரு தகவல் வெளியாகியிருந்தது.

அதாவது, மின் கம்பம், டிரான்ஸ்பார்மர் போன்றவற்றின் சாதனங்களை எல்லாம் தனியார் நிறுவனங்களிடம் இருந்துதான் வாங்கப்படுகின்றன. இதில் சில நிறுவனங்கள், தரமற்ற சாதனங்களை வினியோகம் செய்வதாக தெரிகிறது.
ஆதாரை போலவே: இதுபோன்ற முறைகேடுகளை தடுக்கவே, இனிமேல், மீட்டர்கள், மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் இப்படி ஒவ்வொன்றுக்கும், ஒவ்வொரு பிரத்யே நம்பர்கள் தரப்போகிறார்களாம். கிட்டத்தட்ட ஆதார் கார்டு போலவே, அந்தந்த மீட்டரில், கியூ ஆர் கோடு, ஸ்கேன் குறியீடு, வரிசை எண்கள், ஆங்கில எழுத்துக்கள் என அத்தனை அடையாளமும் இடம்பெற்றிருக்குமாம்.
இந்த எண்களை வைத்துதான், எந்த நிறுவனத்திடம் வாங்கப்பட்டது? எங்கு அனுப்பப்பட்டது? எங்கு பொருத்தப்பட்டது? என எல்லாவற்றையும் துல்லியமாக அறிய முடியும் என்பதுடன், முறைகேடுகளும் தடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது.
தொழில் நிறுவனங்கள்: இதற்கு நடுவில், மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.. அதேபோல, விசைத்தறி மற்றும் ஜவுளி உற்பத்தியாளர் கூட்டமைப்பினரும் இதே கோரிக்கையை விடுத்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், மின்வாரியத்துக்கு தொழிற்சங்கங்கள் இன்னொரு கோரிக்கையை விடுத்திருக்கின்றன.
இது தொடர்பாக வாரிய தலைமைக்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன், தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் பொதுச்செயலாளர் ஏ.சேக்கிழார் ஆகியோர் தனித்தனியே கடிதங்களை அனுப்பியிருக்கிறார்கள். அந்த கடிதத்தில் உள்ளதாவது:

காலதாமதம்: "மின்வாரிய கணக்கீட்டு ஆய்வாளர்கள் 200 பேருக்கு வருவாய் மேற்பார்வையாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கணக்கீட்டு பிரிவில் ஆரம்பக்கட்ட பதவிகளான 7 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதும், நிர்வாகம் காலதாமதம் செய்து வருகிறது.
ஏற்கெனவே, கணக்கீட்டாளர்களுக்கு ஆய்வாளர் பதவி வழங்கும்போது மின் கணக்கீட்டு பணியை கூடுதலாக பார்க்கச் சொல்லி நிர்ப்பந்திக்கப்பட்டது.
தமிழக அரசு: கைவிட வேண்டும் தற்போது வருவாய் மேற்பார்வையாளர் பதவி உயர்வு வழங்கிய பிறகும், கணக்கீட்டுப் பணியை மேற்கொள்ள வேண்டும் எனக்கூறுவது முத்தரப்பு ஒப்பந்தத்துக்கு எதிரானது. எனவே, பதவி உயர்வு தொடர்பான உத்தரவில் கணக்கீட்டுப் பணிகள் மேற்கொள்ளுதல் தொடர்பான அறிவுறுத்தலைக் கைவிட வேண்டும்" என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications