"ரூல்ஸ்" பின்பற்றாமல்.. விபத்து ஏற்பட்டால் பணியாளர்களே பொறுப்பு.. மின்சார வாரியம் அட்வைஸ்!
சென்னை: மின் ஊழியர்கள் பணியின் போது அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் இல்லையென்றால் விபத்து ஏற்படும் போது மின் ஊழியர்களே பொறுப்பு என்று மின்சார வாரியம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. பருவமழை காரணமாக தமிழகம் முழுவதுமே பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ளது. மழைக்காலங்களில் அடிக்கடி மின் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால், மின் பணியாளர்களும் முழு வீச்சில் விபத்து எதுவும் நடைபெறாமல் இருப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்யும் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தான், மின் ஊழியர்கள் அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் முறையாக பின்பற்றி பணியை தொடர வேண்டும் என்று மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், விதிகளை மதிக்காமல் விபத்து ஏற்பட்டால் அதற்கு மின் ஊழியர்களே பொறுபு எனவும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக மின்சார வாரியம் கூறியிருப்பதாவது: - பாதுகாப்பு விதிகளை பின்பற்றாதது, தேவையான பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தாமல் இருப்பது, முறையான கண்காணிப்பு, நிலத்துடன் பொருத்தப்படும் ஏபி ஸ்விட்ச்களை பொருத்தாமல் திறந்து இருக்கும் பிளேட்களை சரிபார்க்காமல் இருப்பது உள்ளிட்டவை காரணமாக விபத்துக்கள் ஏற்படுகிறது.
எனவே அனைத்து மின் ஊழியர்களும் விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பணியாளர்கள் பணியை தொடங்கும் முன், பாதுகாப்பு விதிமுறைகளை உறுதி செய்த பிறகுதான் பணியை தொடங்க வேண்டும். மின்சார ஊழியர்கள் பணிகளை தொடங்கும் முன், மேற்பார்வை ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்களின் பயன்பாட்டை சரிபார்த்து, சரியான தனிமைப்படுத்தலை உறுதி செய்ய வேண்டும்.
பணியாளர்கள் பணியின் போது எர்த்ராட் பயன்படுத்தும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்காமல் விபத்து ஏற்பட்டால் மின்சார வாரிய ஊழியர்களே பொறுப்பு. தேவையான பாதுகாப்பு உபகரணங்களை பின்பற்றி பணியாற்றினால் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை. எனவே பாதுகாப்பு விதிகளை பின்பற்றி பணியை தொடர வேண்டும் என சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications