மின்சார பில் எகிறப்போகுதோ?.. பதறிய நுகர்வோர்.. நைட்டோடு நைட்டாக டேன்ஜெட்கோ எடுத்த அந்த அதிரடி கணக்கு
சென்னை: வரவிருக்கும் பருவமழைக் காலங்களில் ஏற்படும் திடீர் மின்தடைகளை உடனுக்குடன் சரிசெய்து பொதுமக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யும் நோக்கில், தற்காலிக அடிப்படையில் கூடுதல் பணியாளர்களை நியமிக்கத் தமிழ்நாடு மின் வாரியம் (TANGEDCO) அதிரடி ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு என்ன? இதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
தமிழகத்தில் மின்சாரக் கட்டணத்தைத் தாமதமின்றிச் செலுத்தவும், அபராதங்களைத் தவிர்க்கவும் "EB Auto Pay" என்ற புதிய தானியங்கி கட்டணச் செலுத்தும் சேவையைத் தமிழ்நாடு மின் உற்பத்தி நிலையம் (TNPDCL) ஃபெடரல் வங்கியுடன் இணைந்து தேசிய தானியங்கி தீர்வு மையம் (NACH) தளம் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மின்சார வாரியம் அசத்தல்
இந்த புதிய திட்டத்தின் கீழ், வீட்டு உபயோகம், வணிகம் மற்றும் குறைந்த அழுத்த மின் நுகர்வோர் ஒருமுறை பதிவு செய்துவிட்டால், ஒவ்வொரு முறையும் மதிப்பீட்டு தேதியிலிருந்து 10-வது நாளில் அவர்களது வங்கிக் கணக்கு அல்லது UPI கணக்கிலிருந்து மின் கட்டணம் தானாகவே பற்று வைக்கப்பட்டு மின்னணு ரசீது வழங்கப்படும்.
வங்கி கணக்கில் போதிய நிதி இல்லாத பட்சத்தில் நுகர்வோருக்கு மெசேஜ் மற்றும் மெயில் மூலம் உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு மாற்று வழிகளில் செலுத்த வாய்ப்பளிக்கப்படும்.
இந்த வசதியைப் பெற விரும்புவோர் மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpdcl.org பக்கத்திற்குச் சென்று, தங்களது மின் நுகர்வோர் எண், வங்கிக் கணக்கு அல்லது UPI விவரங்கள் மற்றும் அங்கீகாரத்தைச் சமர்ப்பித்து எளிதாகப் பதிவு செய்து கொள்ளலாம்.. தேவைப்பட்டால் இச்சேவையை ரத்து செய்யும் விருப்பமும் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது.
மின்சார விநியோகம் செயல்பாட்டில்
நுகர்வோரின் நீண்ட நாள் நிலுவைப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், மின்சார விநியோக நிறுவனத்தின் வருவாயை முறைப்படுத்தி அதிகரிக்கும் நோக்கோடும் இந்த அதிரடித் திட்டம் தற்பொழுது செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக் காலங்களில் ஏற்படும் திடீர் மின் தடைகளை உடனுக்குடன் சரிசெய்து, பொதுமக்களுக்கு எவ்விதமான இடையூறுமின்றி தடையற்ற மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யும் நோக்கில், தற்காலிக அடிப்படையில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) மேலாண்மை இயக்குநர் சில முக்கிய
நிபந்தனைகளுடன் அதிரடி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
தொடரும் மின் வெட்டுகள்
கடந்த சில ஆண்டுகளாக பருவமழைக் காலங்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட சென்னை புறநகர்ப் பகுதிகள், கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் பலமணி நேரம் தொடர் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளான சம்பவங்கள் பதிவாகியிருந்தன. இத்தகைய பாதிப்புகள் மீண்டும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மின்வாரியம் தற்போது தீவிரமாக முடிவெடுத்து இந்த முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இந்த புதிய உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் உள்ள மின் பகிர்மானப் பிரிவுகள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற மின் வட்ட அலுவலகங்களில் தற்காலிக அடிப்படையில் கூடுதல் பணியாளர்களை நியமித்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மின் பகிர்மான பிரிவுகள்
அதன்படி, ஒவ்வொரு மின் பகிர்மானப் பிரிவிலும் அவசரத் தேவைகளைக் கருதி அதிகபட்சமாக 6 பேர் வரை கூடுதல் பணியாளர்களை நியமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பருவமழைக் காலங்களில் வீசும் பலத்த காற்று, மரங்கள் முறிந்து விழுவது, மின்கம்பிகள் அறுந்து தொங்குவது மற்றும் மின்மாற்றிகள் பழுதடைவது உள்ளிட்ட அவசர சூழ்நிலைகளில், உடனுக்குடன் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு மின் விநியோகத்தை மீட்டெடுக்கும் நோக்கில் இந்த தற்காலிக நியமனங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
துல்லியமான கணக்கீடுகள்
மேலும், இந்த கூடுதல் பணியாளர்கள் நியமனம் தொடர்பாக வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய சில முக்கிய வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, தற்காலிகமாக நியமிக்கப்படும் பணியாளர்களின் வருகைப் பதிவு, அவர்களுக்கு ஒதுக்கப்படும் பணியிடங்கள், தினசரி ஊதியம் மற்றும் இதர நிர்வாக விவரங்கள் அனைத்தும் முறையாகப் பதிவேட்டில் துல்லியமாகக் கணக்கிடப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
கூடுதல் பணியாளர்களை நியமிப்பதில் மின்வாரியத்தின் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உயர் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், தேவையற்ற செலவினங்கள் எதுவும் ஏற்படாத வகையில் மிகக் கடுமையான கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அனைத்து மண்டல மற்றும் வட்ட அலுவலர்களுக்கு மின்வாரியம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையில் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications