அடேங்கப்பா! சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் தேவை.. கோடை முடிந்த பிறகும் உயர்வது ஏன் தெரியுமா
சென்னை: தலைநகர் சென்னையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மின் தேவை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. வெயில் இன்னும் அதிகமாக இருக்கும் நிலையில், மின் தேவை அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் மாநில அரசுக்குச் சொந்தமான மின்வாரியம் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இப்போது தமிழ்நாடு முழுக்க சுமார் 2.30 கோடி மின் இணைப்புகள் உள்ளன. விவசாய இணைப்புகள் குடிசை வீடுகளுக்கும் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அனைத்து வகையான மின்சார கனெக்க்ஷன்களுக்கும் தமிழ்நாடு மின்வாரியம் மூலமே மின்சாரம் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இப்போது பல்வேறு தரப்பினருக்கும் மானியம் மற்றும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.
சென்னையில் புதிய உச்ச

மின்சாரம்: இப்போது மாநிலத்தில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், நெசவாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இது தவிரக் குடிசை வீடுகளுக்கும் இலவசமாகவே மின்சாரம் வழங்கப்படுகிறது. இதுபோக வணிக நிறுவனங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படுகிறது. சமீபத்தில் தான் வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் விலை சற்று அதிகரிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் எப்போதும் கோடைக் காலத்தில் மின்சாரம் அதிகமாகவே இருக்கும். வழக்கமாக மாநிலத்தைத் தினசரி மின் நுகர்வு என்பது சராசரியாக 30 கோடி யூனிட்டாக இருக்கும். இது வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குத் தமிழ்நாடு மின் வாரியத்தால் வழங்கப்படும் மின்சாரத்தின் அளவு ஆகும். தமிழ்நாட்டிலேயே தலைநகர் சென்னையில் தான் மின் தேவை அதிகமாக இருக்கும். சென்னையில் தினசரி மின் நுகர்வு என்பது சுமார் 6 கோடியாக இருக்கும். கோடைக் காலங்களில் சராசரியைக் காட்டிலும் மின் தேவை அதிகமாகவே இருக்கும்.
புதிய உச்சம்: இதற்கிடையே சென்னையில் நேற்றைய தினம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மின் தேவை உச்சம் தொட்டுள்ளது. சென்னையில் நேற்று மட்டும் மின் பயன்பாடு 9.17 கோடியாக உச்சம் தொட்டுள்ளது. இது குறித்து மின்வாரியம் தனது ட்விட்டரில், "ஜூன் 14ஆம் தேதி சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு 9.17 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது. நேற்றைய தினம் சென்னையில் நேற்றைய மின் தேவையான 4,039 மெகா வாட்டும் பூர்த்தி செய்யப்பட்டது " என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு ஜூன் 13ஆம் தேதி 9.11 கோடி யூனிட் பயன்படுத்தப்பட்டதே உச்சமாக இருந்த நிலையில், இப்போது அது முறியடிக்கப்பட்டுள்ளது.

வெப்பம்: ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் வெப்பம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இந்தாண்டு எல்லாம் மார்ச் மாதமே வெப்பம் உச்சம் தொட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதிலும் மே மாதம் எல்லாம் வெப்பம் 105 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது.
இதனால் மக்கள் வெளியே கூட வர முடியாமல் அவதிப்பட்டனர். வீடுகளிலேயே முடங்கிய பொதுமக்கள், வெப்பத்தால் பேன், ஏர்கூலர், ஏசி, பிரிட்ஜ் போன்ற சாதனங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் மின்சார தேவை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
இப்போது கோடைக் காலம் முடிந்துவிட்ட போதிலும், வெப்பம் முழுமையாகக் குறையவில்லை. பல இடங்களில் வெப்பம் சதமடித்தே வருகிறது. இதன் காரணமாகவே மின் தேவை இப்போதும் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications