குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்! ரேஷன் கடைகளில் பெரிய சிக்கலுக்கு தீர்வு! தமிழக அரசு செக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் கடைகளில் முறைகேடுகளை முற்றிலும் தடுக்கும் விதமாக தமிழக அரசு சூப்பர் முடிவு ஒன்று எடுத்துள்ளது. சரியான எடையில் பொருட்கள் வழங்க வேண்டும் என்பதற்காக பில் போடும் எந்திரத்துடன், மின் தராசு இணைக்கப்பட்டு உள்ளது. இந்த நடைமுறை தற்போது சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டு உள்ளதாம். சென்னையில் உள்ள சில கடைகளில் மட்டும் இது அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த திட்டம் அனைத்து கடைகளிலும் அமல்படுத்தப்பட்டால் எடையில் குறைவாக போட்டு மக்களை ஏமாற்ற முடியாது என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

நாட்டில் உணவின்றி யாரும் இருந்து விடக்கூடாது என்பதற்காக மத்திய-மாநில அரசுகள் அதிகளவு உணவு மானியங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. ரேஷன் கடைகள் வாயிலாக மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நாடு முழுவதுமே ரேஷன் கார்டுதாரர்களுக்கு குறிப்பிட்ட அளவு விலையில்லா ரேஷன் அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

electronic-weighing-machine-linked-with-billing-devices-in-ration-shops-tn-govt-to-put-an-end-to-ma

தமிழ்நாட்டில் விலையில்லா அரிசியுடன் மானிய விலையில் சர்க்கரை, பருப்பு, கோதுமை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. பட்ஜெட்டில் இதற்காக பெருமளவு தொகை ஒதுக்கப்படுகிறது. இந்த ஆண்டில் மட்டும் சுமார் ரூ. 14 ஆயிரம் கோடி நிதி உதவி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களின் நலன் கருதி பல்வேறு சலுகைகளை அரசு எடுத்தாலும் கூட இதன் பயன் முழுவதுமாக மக்களை சென்றடையாமல் உள்ளது.

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமானோர் 2 இடங்களில் ரேஷன் கடை பொருட்களை பெற்று வந்தனர். ஆனால் ஆதார் பதிவுக்கு பிறகு, இப்போது அந்த பிரச்சினை இல்லை. இருந்தாலும் ரேஷன் கடை முறைகேடுகள் முழுமையாக தீர்க்கப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது, பொருட்கள் சரியான எடையில் வழங்குவதில்லை என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

குறிப்பாக சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் 20 கிலோ அரிசிக்கு 16 கிலோவும், 2 கிலோ சர்க்கரைக்கு ஒன்றரை கிலோவும் தான் வழங்குவதாக பொதுமக்கள் வைக்கும் புகாராக உள்ளது. பயனாளிகளுக்கு எடை குறைத்து கொடுத்துவிட்டு, அதில் மிச்சமாகும் அரிசி உள்ளிட்ட பொருட்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

எனவே தமிழக அரசு, ரேஷன் பொருட்களை பாக்கெட் போட்டு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது. ஆனால் பாக்கெட் போட்டால், ஜி.எஸ்.டி. சேரும் என்பதால் தமிழக அரசு அந்த திட்டத்தை கைவிட்டு விட்டது. இருப்பினும் இதற்கு தீர்வு காணும் வகையில் புதிய நடைமுறையை தமிழக அரசு தொடங்கி உள்ளது. தமிழகம் முழுவதும் 26 ஆயிரத்து 618 முழுநேர கடைகள், 10 ஆயிரத்து 710 பகுதிநேர கடைகள் என மொத்தம் 37 ஆயிரத்து 328 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன.

இந்த ரேஷன் கடைகளில் பி.ஓ.எஸ். என்னும் மின்னணு கருவி மூலம் பொருட்கள் வினியோகத்திற்கான ரசீது வழங்கப்பட்டு வருகிறது. இந்த மின்னணு எந்திரத்தில் ரேஷன் அட்டை உறுப்பினர்கள் கைரேகை வைத்தால் மட்டுமே ரசீது போடும் வகையில் பிஓஎஸ் கருவியின் மென்பொருள் வடிவமைக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த கருவியுடன் மின்னணு தராசும் இணைக்கப்பட்டு உள்ளது.

இனி பொருட்கள் எடை எந்தளவுக்கு வைக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு தான் பில்லும் வரும். எனவே சரியான எடைக்கு பொருட்கள் வைக்க வேண்டிய கட்டாயம் ரேஷன் ஊழியர்களுக்கு ஏற்படும். அதாவது, 20 கிலோ அரிசி வைத்தால் தான் 20 கிலோ அரிசி பில் வரும். எனவே எடை குறைவாகவோ, கூடவோ வைக்க முடியாது. இந்த நடைமுறை தற்போது சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டு உள்ளதாம்.

சென்னையில் உள்ள சில கடைகளில் மட்டும் இது அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த திட்டம் அனைத்து கடைகளிலும் அமல்படுத்தப்பட்டால் எடையில் குறைவாக போட்டு மக்களை ஏமாற்ற முடியாது என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அதே வேளையில் இதில் சில சிக்கல்கள் இருப்பதாக ரேஷன் கடை ஊழியர்கள் சொல்லும் கருத்தாக உள்ளது.

மின்னணு தராசில் எடை துல்லியமாக இருந்தால் மட்டுமே பிஓஎஸ் கருவியில் பில் போட முடியும் நிலை உள்ளது. இதனால், எடையை துல்லியமாக வைக்க ஒரு எண்ணிக்கையில் அரிசி, இரண்டு அரிசி, ஒரு சர்க்கரை, 2 சர்க்கரை என வைக்க வேண்டி உள்ளது. அதனால் எடை போடுவதில் தாமதம் ஏற்பட்டு விடுகிறது என்று குறை கூறுகின்றனர். எனினும் பாக்கெட்டுகள் போட்டு வழங்கினால் இந்த பிரச்சினை இல்லை என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+