உதயநிதி அமைச்சர் ஆனதும்.. பட்டென எமோஷன் ஆன கிருத்திகா.. மேடைக்கு கீழே நடந்த சம்பவம்.. கவனிச்சீங்களா?
சென்னை: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ இன்று தமிழ்நாடு அமைச்சராக பதவி ஏற்றார். இந்த பதவி ஏற்பு நிகழ்வில் அவரின் மனைவி கிருத்திகா உதயநிதி மிகவும் எமோஷனலாக காணப்பட்டார்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்று 19 மாதங்கள் ஆகிறது. இந்த நிலையில் 19 மாதங்களுக்கு பின்பாக தற்போது அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ இன்று தமிழ்நாடு அமைச்சராக பதவி ஏற்று உள்ளார். இவருக்கு விளையாட்டு, இளைஞர் நலன் ஆகிய துறைகள் இன்று அளிக்கப்படுகிறது. சரியாக காலை 9.30 மணிக்கு இன்று உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றார்.

அமைச்சர்
இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் சிலர், அமைச்சர்கள் கலந்து கொண்டனர். எம்எல்ஏக்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். மொத்தம் 500 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. முதல்வர் ஸ்டாலினின் குடும்பத்தினரும் அழைக்கப்பட்டு இருந்தனர். உதயநிதி ஸ்டாலினின் தாயார் துர்கா ஸ்டாலின் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். கீழே குடும்பத்தினருக்கு என்று ஒதுக்கப்பட்டு இருந்த இடத்தில் அவர் அமர்ந்து இருந்தார். மற்ற குடும்ப உறுப்பினர்களும் உடன் அமர்ந்து இருந்தனர்.

துர்கா ஸ்டாலின்
துர்கா ஸ்டாலினுக்கு அருகில் கிருத்திகா உதயநிதி அமர்ந்து இருந்தார். உதயநிதி அமைச்சர் ஆனதும் இவர்கள் எமோஷனலாக காணப்பட்டனர். உதயநிதி ஸ்டாலின் என்னும் நான் என்று குறிப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றார். அச்சமும், ஒருதலை சார்பும் இன்றி, விருப்பு, வெறுப்பு இன்றி அமைச்சராக செயல்படுவேன் என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். இதில் கடவுளின் பெயரில் பதவி ஏற்பேன் என்று சொல்லாமல் உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றார். அதன்பின் ரகசிய காப்பு பிரமாணத்தில் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து போட்டார். அப்போது கிருத்திகா, துர்கா இரண்டு பேருமே எமோஷனலாக காணப்பட்டனர்.

எமோஷனல்
உதயநிதி பதவி ஏற்பு விழாவிற்கு பின் மேடைக்கு கீழ் வந்து பலரிடம் கை குலுக்கினார். கட்சி நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஒவ்வொருவராக சந்தித்து உதயநிதி நன்றி தெரிவித்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார். தனது தாயார் துர்கா ஸ்டாலினை அணைத்து அவரிடம் வாழ்த்து பெற்றுக்கொண்டார். அதன்பின் திமுக எம்எல்ஏக்கள் சிலர் அங்கே இருந்தனர். அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அமைச்சர்கள் அதன்பின் வரிசையாக வந்து உதயநிதி ஸ்டாலினிடம் கை குலுக்கினர். அவருக்கு வாழ்த்தும் தெரிவித்தனர்.

கிருத்திகா
கீழே எமோஷனலாக நின்று கொண்டு இருந்த கிருத்திகாவிடம் அதன்பின் உதயநிதி ஸ்டாலின் சில நிமிடங்கள் பேசினார். கிருத்திகா எதோ சொல்ல.. எமோஷனலாக காணப்பட்ட அவரிடம் உதயநிதி ஸ்டாலின் எதோ சொன்னார். அதன்பின் அவரை அணைத்து.. நெருக்கமாக பேசினார். அமைச்சராக பொறுப்பேற்க உள்ள உதயநிதி ஸ்டாலின் இன்று பல்வேறு சந்திப்புகளை, பயணங்களை மேற்கொள்ள உள்ளார். இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் செய்துள்ள ட்வீட்டில், எப்போதும் வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களிடம், சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தி தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன். பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன், என்று கூறி உள்ளார்.
-
ஒவ்வொரு அமைச்சருக்கும் டார்கெட் நிர்ணயித்த முதல்வர் விஜய்.. கேபினட் மீட்டிங் பற்றி நிர்மல் விளக்கம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications