சென்னையில் சில நொடியில் மாயமான 2 கிலோ தங்கம்..பிரபல நகைக்கடை உரிமையாளர் நினைத்தே பார்க்காத ட்விஸ்ட்
சென்னை: சென்னை பூக்கடை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள பிரபல தங்க நகைக்கடையில் 2 கிலோ நகையுடன் நகைக்கடை ஊழியர் ஓடிப்போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து தங்க நகை திருடப்பட்ட வழக்கில் அந்த கடையின் ஊழியரை போலீஸார் தேடி வருகின்றனர். நகைக்கடையில் அவர் எப்படி ஓடிப்போனார் என்பது தான் மிகவும் ஆச்சரியமானது. இதுபற்றி பார்ப்போம்.
தங்கத்தின் விலை கடந்த ஆறுமாதத்தில் மிகப்பெரிய உச்சம் பெற்றுள்ளது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சம் பெற்று வருகிறது. கிட்டத்தட்ட ஒரு பவுன் தங்கம் 72 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. கடந்த ஆறு மாதத்தில் தங்கத்தின் விலை 15 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் தங்கத்தின் மதிப்பு உயர்ந்து வரும் நிலையில், நகைக்கடை வைத்திருப்போர் மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். அதேநேரம் சாமானிய மக்கள் நொந்து போய் இருக்கிறார்கள். இந்நிலையில் தங்க நகைகள் திருடு போவதும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. வேலை செய்பவர்களே நகைக்கடைகளில் திருடுவது நடக்கிறது.

சென்னை சூளை பகுதியைச் சேர்ந்த 45 வயதாகும் பஹ் சிங் என்பவர் பூக்கடை என்எஸ்சி போஸ் சாலையில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் ராஜஸ்தானைச் சேர்ந்த 26 வயதாகும் சந்தீப் சிங் என்பவர் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், உரிமையாளர் பஹ் சிங், யானைக்கவுனி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரில் பஹ் சிங் கூறுகையில், கடந்த ஏப்ரல் 22-ம் தேதி உடல் நலக்குறைவின் காரணமாக கடையை சந்தீப் சிங்கிடம் ஒப்படைத்துவிட்டு, அருகே உள்ள மருந்து கடைக்குச் சென்றிருந்தேன் அங்கு மருந்து வாங்கிவிட்டு சிறிது நேரத்துக்கு பின்னர் கடைக்கு திரும்பி வந்தேன். அப்போது கடையின் இரும்பு கதவு பூட்டாமல், சாத்தப்பட்டு கிடந்தது.
மேலும் கடையிலிருந்த 2 கிலோ 2 கிராம் தங்க நகை திருடப்பட்டிருப்பதையும், கடையில் இருந்த சந்தீப் சிங் காணாமல் போயிருப்பதையும் பார்த்து ஆடிப்போனேன். எனவே, தங்க நகைகளை திருடிக் கொண்டு தப்பியோடிய சந்தீப் சிங்கை கைது செய்து, நகைகளை மீட்டுத் தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த புகாரின் அடிப்படையில் யானைக்கவுனி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முன்னதாக கடந்த இரண்டு வாரம் முன்பு சென்னை பாடியில் உள்ள நகைக்கடையிலும் திருட்டு நடந்துள்ளது. சென்னை திநகரைச் சேர்ந்த பிரபல நகைக்கடை மற்றும் ஜவுளிக்கடைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. சென்னையிலும் பல இடங்களில் கிளைகள உள்ளன. அந்த வகையில் பாடியில் அந்த கடையின் கிளை பிரம்மாண்டமாக செயல்படுகிறது. அந்த நகைக்கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் ரூ.60 லட்சம் கையாடல் செய்ததாக கைதாகினார்கள்.
சென்னை பாடியின் பிரபல நகைக்கடையின் மேலாளராக உள்ள சுரேஷ் என்பவர் கொரட்டூர் போலீஸ் நிலையத்தில் கடந்த இரண்டு வாரம் முன்பு இதுபற்றி புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் சுரேஷ் கூறுகையில், எங்கள் கடையில் நகை பிரிவு மேலாளரான இளையராஜா தங்க, வைர நகை பிரிவில் நகைகளின் இருப்பை சோதனை செய்திருந்தார். அப்போது, 54 ஜோடி தங்க கம்மல், 8 வைர வளையல் மற்றும் சங்கிலி உள்ளிட்டவை திருடு போயிருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.60 லட்சம் இருக்கும். நகையை கையாடல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியிருந்தார்.
இதுகுறித்து கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்கள். அதில், அந்த கடையில் நகைகள் பிரிவில் பணியாற்றி வரும் முத்துகிருஷ்ணன் (வயது 29) மற்றும் விஜயகுமார் (37) ஆகியோர் கையாடல் செய்ததாக கைதாகினர். இவர்களில் முத்துகிருஷ்ணன், தங்க நகைகளை எடுத்து அதற்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்துள்ளார்.
இவ்வாறு கையாடல் செய்த தங்க கம்மல்களை பல்வேறு பகுதிகளில் அடமானம் வைத்து, அதில் கிடைத்த பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்தது விசாரணையில் தெரியவந்தது. விஜயகுமார், வைர நகைகளை திருடி விற்று, அதில் கிடைத்த பணத்தை வைத்து தனது கடனை அடைத்ததாகவும் கூறப்பகிடுகிறது. . ஊழியர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பாடி நகைக்கடையில் கடந்த இரண்டு வாரம் முனபு நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications