Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சில்லு சில்லாக போச்சே.. கையை விரித்த எடப்பாடி பழனிசாமி.. எகிறிய பிரபலங்கள்! ஆரம்பித்த "நிதி" யுத்தம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட பரபரப்புதான் இன்னமும் கட்சிக்குள் நீங்கவில்லை.. தேர்தல் களம் நெருங்கி வரும் நேரத்தில், கட்சி நிர்வாகிகள் மத்தியில் தொய்வு இருப்பதாக தெரிகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி சற்று கண்டிப்புடன் கருத்துக்களை பதிவு செய்தாலும்கூட, சில மா.செ.க்களின் சலசலப்பு இன்னமும் ஓயவில்லையாம்.. அப்படி என்ன நடந்தது?

தேர்தல் பிஸிக்கு நடுவில் எடப்பாடி பழனிசாமி மா.செ கூட்டத்தை கூட்டினார்.. பல்வேறு மாவட்டங்களில் ஒருவித தொய்வு இருப்பதை கூட்டத்தில் சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, கடுமையான பேச்சையும் அவர்களிடம் பேசினாராம்..

Edappadi Palanisamy

அதிமுக உட்கட்சி பூசல்

குறிப்பாக, "வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை முதலில் தலைவர்களுக்கு இருக்கணும்.. ஆனால், சில முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பூத் கமிட்டி பணிகளை சரியாக கவனிக்கவில்லை, ஐடி பிரிவினருடன் இணைந்து சரியாக செயல்படவில்லை.. எக்காரணம் கொண்டும் தேர்தலை எதிர்கொள்ளும் வேகம் மட்டும் குறையக்கூடாது" என்றெல்லாம் கண்டிப்பு காட்டி அறிவுறுத்தினாராம்.

அப்போதுகூட கட்சிக்குள் நிலவும் புகைச்சல் ஓயவில்லை. காரணம், அதிமுக வலுவான கூட்டணியை அமைத்துள்ளதாக தலைமை கூறி வந்தாலும் மாவட்ட செயலாளர்கள் மட்டத்தில் அது குறித்து மாற்று கருத்துகளே நிலவுகின்றன.

அதுமட்டுமல்ல, கூட்டணியில் இருந்த கட்சிகளே இப்போதும் தொடர்வதாகவும் புதிதாக பெரிய அளவில் எந்தக் கூட்டணியும் அமையவில்லை என்றும் நிர்வாகிகள் முணுமுணுக்க துவங்கிவிட்டார்கள்.. அதிலும், தேமுதிக போன்ற கட்சிகளுடன் நிலவும் இழுபறியை அவர்களால் ஏற்கவே முடியவில்லையாம்.. எனவே, கூட்டணியின் உண்மையான பலம் குறித்த சந்தேகம் நிர்வாகிகளுக்குள் இருக்கத்தான் செய்கிறதாம்..

எடப்பாடி பழனிசாமி

இது ஒருபுறமிருக்க தேர்தல் செலவுகளை கையாள்வதில் தலைமைக்கும் முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடு, இந்த மோதலின் மையப்புள்ளியாக மாறியுள்ளது.

ஆட்சியில் இருந்த காலத்தில் தனிப்பட்ட ரீதியில் ஆதாயம் அடைந்ததை சுட்டிக்காட்டும் எடப்பாடி பழனிசாமி தற்போது தேர்தல் செலவுகளை அவர்களே முன்னின்று கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தினாராம்.. ஆனால் தலைமையிடம் இருந்து நிதி உதவி கிடைக்காமல் தங்களின் சொந்த பணத்தைச் செலவிட முன்னாள் அமைச்சர்கள் தயங்குவதாக தெரிகிறது..

மாவட்ட செயலாளர்கள்

தலைமையின் இந்த அணுகுமுறை களப்பணிகளை பாதிக்கும் என்று குமுற தொடங்கி விட்டார்களாம்.. இந்த நிதி விவகாரமும் ஒருங்கிணைப்பு இன்மையும்தான் அதிமுகவின் தேர்தல் பணிகளில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

இதுபோக, கட்சி தலைமை தங்களுக்கு போதிய ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்ற ஆதங்கம் மாவட்ட செயலாளர்களிடையே வெடிக்க துவங்கிவிட்டது.. வளர்ச்சிப் பணிகளுக்காக தாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தலைமையிடம் இருந்து முறையான அங்கீகாரமோ வழிகாட்டுதலோ கிடைப்பதில்லை என்பதையும் மா.செ.க்கள் முக்கிய குற்றச்சாட்டாக முன்வைக்கிறார்கள்..

நிதி - கஜானா காலி

ஒரு காலத்தில் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இருந்த அதிமுக, இப்போது தொய்வில் விழுந்துள்ளதே கவலையும் ரத்தத்தின் ரத்தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாம்..

போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்போது தலைமை எடுக்கும் முடிவுகள் அடிமட்ட நிலவரங்களை பிரதிபலிப்பதில்லை , தங்கள் கருத்துகளுக்கு மதிப்பளிக்கப்படுவதில்லை என்ற உளக்குமுறலாக கொட்டுகிறார்களாம் மாவட்ட செயலாளர்கள்..

கட்சியின் தலைமைக்கும் மாவட்ட அளவிலான நிர்வாகிகளுக்கும் இடையே ஒருவிதமான தகவல் தொடர்பு இடைவெளி இருப்பதையே தற்போதைய நிகழ்வுகள் அம்பலப்படுத்துவதாக தெரிகிறது.. கட்சியின் தலைமைக்கும் மாவட்ட அளவிலான நிர்வாகிகளுக்கும் இடையே ஒருவிதமான தகவல் தொடர்பு இடைவெளி இருப்பதையே தற்போதைய நிகழ்வுகள் வெளிப்படுத்தி கொண்டிருக்கின்றன..

எதிர்க்கட்சிகளுக்கு பிளஸ்

ஆனால் இதையெல்லாம் எடப்பாடி எப்படி சமாளிக்க போகிறார்? எப்படி சரி செய்ய போகிறார் தெரியவில்லை

இதுபோன்ற உட்கட்சிப் பூசல்கள் தேர்தல் நேரத்தில் கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்றே தெரிகிறது.. கடந்த கால தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு கட்சியை வலுப்படுத்த வேண்டிய நேரத்தில் நிர்வாகிகளுக்குள் நிலவும் இந்த மனக்கசப்பு, களப்பணிகளை முடக்கும் அபாயமும் உள்ளது.

எனவே, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மற்ற கட்சிகளைத் தைரியமாக எதிர்கொள்ள வேண்டுமானால் முதலில் கட்சியின் உள்முக கட்டமைப்பை சரிசெய்ய வேண்டியிருக்கிறது.. இல்லாவிட்டால் இந்த அதிருப்தி மாற்று அணிகளுக்கோ அல்லது பிற கட்சிகளுக்கோ சாதகமாக அமைந்துவிடும் என்பதையும் நாம் இங்கே சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+