சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே பரபரப்பு.. திடீரென தடம் புரண்ட ரயில்.. என்ன நடந்தது?
சென்னை: சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. ரயில் பெட்டியின் நான்கு சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியது. பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளாவது வாடிக்கையாகி வருகிறது. பேருந்து, காரில் செல்வதை விட ரயில் பயணம் தான் பாதுகாப்பானது என்று பயணிகள் நம்பும் நிலையில், அண்மைக்காலமாக ரயில்களில் ஏற்படும் விபத்துக்கள் பயணிகளை அச்சம் அடையவைத்துள்ளது.

வந்தே பாரத் உள்ளிட்ட சொகுசு ரயில்களில் கவனம் செலுத்தும் ரயில்வே நிர்வாகம், ரயில்கள் மற்றும் தண்டவாள பரமாரிப்பிலும் கவனம் செலுத்தி இதுபோன்ற ரயில் விபத்துக்களை தடுக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த நிலையில், சென்னை பேசின் பிரிட்ஜ் யார்டு பகுதியில் விரைவு ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ரயில் பணிமனைக்கு செல்லும் போது தான் விபத்துக்குள்ளாகியிருக்கிறது. ரயில் பெட்டியின் நான்கு சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியது.
இது குறித்த தகவல் கிடைத்ததும், விரைந்து வந்த ரயில்வே பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ரயில் தடம்புரண்டதால் மற்ற ரயில் சேவைக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என்று ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில் தரம்புரண்டது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications