‛டிபன் மீட்டிங்’.. தமிழகத்தை வெல்ல பாஜகவின் அஸ்திரம்.. ‛ஸ்ட்ரிக்டா ஃபாலோ’ செய்ய மோடி ‛அட்வைஸ்’
சென்னை: லோக்சபா தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் தமிழகம் மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. ‛டிபன் மீட்டிங்' நடத்தினால் மிகப்பெரிய அளவில் வெற்றியையும், உயரங்களையும் அடைய முடியும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.மேலும் ‛டிபன் மீட்டிங்' நடத்துவதை தொடர்ந்து பாலோ செய்ய வேண்டும் என அவர் முக்கிய அட்வைஸ் வழங்கினார்.
தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ல் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2019 தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. மேலும் கடந்த தேர்தலில் பாஜக வசம் இருந்த கன்னியாகுமரி தொகுதியும் காங்கிரஸ் வசம் சென்றது.

இந்நிலையில் தான் வரும் தேர்தலில் அதிக இடங்களில் வெல்ல பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே தான் தமிழகத்தில் பாஜகவை கூட்டணியில் இருந்து அதிமுக கழற்றிவிட்டது. இருப்பினும் பாஜக தனியாக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. தமிழ்நாட்டில் 19 தொகுதிகளில் பாஜக போட்டியிடும் நிலையில் மீதமுள்ள 20 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளனர்.
இந்நிலையில் தான் இன்று மாலையில் நமோ செயலி மூலம் பிரதமர் மோடி பாஜக தொண்டர்களுடன் உரையாடினர். ‛எனது பூத் வலிமையான பூத்' என்ற தலைப்பில் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது பூத் அளவில் தொண்டர்கள் எப்படி தேர்தலுக்கு தயாராகி உள்ளனர்? என்பது பற்றிய கேள்விகளை கேட்டார். மேலும் பூத் தலைவர்களுக்கு பல்வேறு முக்கிய அறிவுரைகளை வழங்கினார்.
பிரதமர் மோடி பேசுகையில், ‛‛ஆளும் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஊழல், வாரிசு அரசியல், சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்டவற்றை மக்களிடம் எடுத்து கூற வேண்டும். அதோடு மத்திய அரசின் திட்டங்களை அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதுமட்டுமின்றி மாநில அரசு செயல்படுத்தும் திட்டத்தில் மத்திய அரசின் பங்கு இருப்பது பற்றி எடுத்து கூற வேண்டும்.
மிக முக்கியமான விஷயம் ஏப்ரல் 19ல் தேர்தல் நடைபெற உள்ளது. 17ம் தேதியே பிரசாரத்தை நிறுத்த வேண்டி உள்ளது. அதன்படி பார்த்தால் இன்னும் 15 முதல் 16 நாட்கள் தான் முழுமையாக உள்ளது. இந்த நாளில் நம்மால் என்ன செய்ய முடியும். வீடு வீடாக செல்ல வேண்டும். தனி மனிதர்களை சந்திக்க வேண்டும். ஒருநாள் மகளிரை அழைத்து கூட்டம் நடத்த வேண்டும். இன்னொரு நாள் முதல் முறையாக வாக்களிக்க உள்ளவர்களை அழைத்து கூட்டம் நடத்த வேண்டும். இன்னொரு நாள் விவசாயி, மீனவர்கள் உள்பட மத்திய அரசு திட்ட பயனாளிகளை அழைத்து பேச வேண்டும்.
தேர்தலுக்குள் இந்த கூட்டங்களை நடத்தி முடிக்க வேண்டும். வாரத்தில் 5 முதல் 6 நாட்கள் கூட்டம் நடத்தினால் வாக்குச்சாவடியில் உள்ள வாக்குகளை நம்மை நோக்கி ஈர்க்கலாம். தமிழ்நாடு மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. மேலும் இப்போது நான் சொல்லும் பணியை 2 நாளுக்கு செய்து விடுவீர்கள் என நம்புகிறேன்.
பூத் தலைவர்களாக இருப்பவர்கள் ‛டிபன் மீட்டிங்' நடத்த வேண்டும். 3 முதல் 4 அல்லது 7 பூத்களின் தலைவர்கள் காலையில் ‛டிபன்' எடுத்து சென்று சாப்பிட்டு கொண்டே கருத்துகளை பரிமாற்றம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பூத்களில் நிலைமை, வியூகம் பற்றி கலந்துரையாட வேண்டும். அப்போது தான் புதுமையான ஐடியாக்கள் கிடைக்கும். மிகப்பெரிய நம்பிக்கை கிடைக்கும். பலமும் அதிகரிக்கும். டிபன் மீட்டிங்கை சரியாக நடத்த வேண்டும். இதனை கடைப்பிடித்தால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் வெற்றியையும், உயரங்களையும் அடைய முடியும்'' என்றார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications