வில்லங்கச் சான்றிதழில் சர்ப்ரைஸ்.. நகர்ப்புற நிலங்களின் வில்லங்க விவரத்தை பெற தமிழக பதிவுத்துறை வசதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பத்திரப்பதிவு பணிகள் ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு இது பேருதவியாக இருந்து வருகிறது. அதேபோல ஸ்டார் 3.0 சாப்ட்வேர் வசதி விரைவில் அமலுக்கு வரஉள்ள நிலையில், அதில், வில்லங்க சான்றிதழில், மண்டலம், மாவட்டம் போன்ற விபரங்களும் சேர்க்கப்பட்டுவிடும் என்று பதிவுத்துறை தரப்பிலும் ஏற்கனவே நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் ஒரு குட்நியூஸ் வெளியாகியிருக்கிறது.

Encumbarance Certificate - EC எனப்படும் வில்லங்க சான்றிதழ், ஒரு சொத்துக்கு யார் உரிமை உள்ளவர் என்பதை உறுதிப்படுத்தும் முக்கிய சான்றாகும்..

சொத்து யாரிடமிருந்து எப்படி கைமாறி வந்திருக்கிறது? சொத்துரிமை யாருக்கு மாற்றப்பட்டது? போன்ற விவரங்களை வில்லங்க சான்றிதழ் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.



வில்லங்க சான்று அவசியம்

சொத்தின் மதிப்பு, சொத்தை தந்தவர், எழுதி வாங்குபவர் பெயர், பதிவு செய்யப்பட்ட ஆண்டு, பதிவு எண், சொத்தை அடமானம் வைத்து கடன் வாங்கப்பட்டுள்ளதா? சர்வே எண், விற்பவரும் வாங்குபவரும் செய்து கொண்ட ஒப்பந்தம், ஒப்பந்தம் செய்யப்பட்ட தேதி, பதிவு செய்யப்பட்ட தேதி, Sale Deed, Mortgage Deed, Agreement போன்ற விவரங்கள் என்பது போன்ற எல்லாவிதமான விவரங்களையும் வில்லங்க சான்றிதழ் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

அவ்வளவு ஏன்? சொத்தின் பேரில் பவர் ஆஃப் அட்டானி எழுதி தந்திருந்தாலும்கூட, அதனையும் வில்லங்க சான்றிதழ் மூலமே கண்டுபிடித்துவிடலாம்.

சொத்து வாங்குவோர், முந்தைய பத்திரப்பதிவு விபரங்களை சரி பார்க்க குறிப்பிட்ட வருடங்களுக்கு வில்லங்க சான்றிதழை பெறுகிறார்கள். கட்டணத்தை செலுத்தி, ஆன்லைனில் வில்லங்க சான்றிதழ் பிரதி பெறப்படுகிறது.

அதேபோல குறிப்பிட்ட ஆண்டுகளுக்கான வில்லங்க சான்று விபரங்களை, பதிவுத்துறையின் ஆன்லைனிலேயே இலவசமாக பார்க்கும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.

ஆன்லைனில் கட்டணம்

வில்லங்க சான்றிதழ் பெற விரும்புவோர், சார் - பதிவாளர் அலுவலகம் செல்லாமல், ஆன்லைனிலேயே கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால், குறிப்பிட்ட நாட்களில், இ மெயில் முகவரிக்கு, வில்லங்க சான்றிதழ் கிடைத்து விடும்.

எனினும் சில நடைமுறை சிக்கல்கள் இதில் எழுகின்றன.. அதாவது, சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர் அலுவலகம், பதிவுத்துறையின் எந்த மண்டலத்தில், எந்த பதிவு மாவட்டத்துக்குள் வருகிறது? என்ற விபரம் இடம் பெறுவதில்லை. முக்கியமாக வெளியூர்களிலிருந்து பலரும் சொத்து வாங்க முற்படும்போது, இந்த விபரங்கள் இல்லாமல் இருப்பதால், விண்ணப்பதாரர்களுக்கு குழப்பமாக இருக்கிறதாம்.

ஸ்டார் 3.0 சாப்ட்வேர் வசதி

அதனால்தான், வில்லங்க சான்றிதழில், மண்டலம், மாவட்டம் போன்ற விபரங்களையும் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. எனவே, ஸ்டார் 3.0 சாப்ட்வேர் வசதி விரைவில் அமலுக்கு வரஉள்ள நிலையில், அதில், வில்லங்க சான்றிதழில், மண்டலம், மாவட்டம் போன்ற விபரங்களும் சேர்க்கப்பட்டுவிடும் என்று பதிவுத்துறை தரப்பிலும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நகர்ப்புற நிலங்கள், சொத்துக்களின் வில்லங்க சான்றிதழ் விபரங்களை, பொதுமக்கள் எளிதாக அறிவதற்காக கூடுதல் வசதியை இணைத்து பதிவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அதாவது, மனை எண், வீட்டு எண் அடிப்படையிலும், வில்லங்க விபரங்கள் தேடும் வசதி உள்ள நிலையில், நகர்ப்புற நிலங்கள் குறித்த வில்லங்க விபரங்களை பார்ப்பதற்கான கூடுதல் வசதியும் தற்போது ஏற்படுத்தப்பட்டு உள்ளதாம்.

நகர்ப்புற நில அளவை

பொதுவாக, நகர்ப்புற நில அளவை முடிந்த பகுதிகளில், நிலங்கள், ப்ளாக், வார்டுகள் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன. இந்த நிலங்களை, பழைய சர்வே விபரங்கள் அடிப்படையில் தேடும்போது, உரிய விபரங்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது..

அதனால்தான், நகர்ப்புற நிலங்களை, பிளாக், வார்டு எண்கள் அடிப்படையிலும் தேடுவதற்கான வசதி, இணையதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நகர்ப்புற நிலங்கள், சொத்துக்கள் குறித்த வில்லங்க விபரங்களை பொதுமக்கள் எளிதாக பெற முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+